தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஷாருக்கான் படத்தை மிஞ்சும் விஸ்வரூபம்

Go down

ஷாருக்கான் படத்தை மிஞ்சும் விஸ்வரூபம்  Empty ஷாருக்கான் படத்தை மிஞ்சும் விஸ்வரூபம்

Post  ishwarya Tue Mar 05, 2013 5:23 pm

இந்திப் படங்களுக்கு உள்ளூ‌ரிலும், வெளிநாடுகளிலும் பரந்து வி‌ரிந்த மார்க்கெட் உள்ளது. இந்திய மொழிகளில் இந்தி அளவுக்கு தமிழுக்கோ, தெலுங்குக்கோ மார்க்கெட் கிடையாது. அதனால் இந்தி சூப்பர் ஸ்டார்களின் படங்களுக்கு இரண்டாயிரம், மூவாயிரம் பி‌ரிண்ட்கள் சாதாரணமாகப் போடப்படும்.

தீபாவளிக்கு வெளியான ஷாருக்கானின் ஜப் தக் ஹை ஜான் இந்தியாவெங்கும் 2,500 பி‌ரிண்ட்கள் போடப்பட்டன. அதேநாளில் வெளியான சன் ஆஃப் சர்தாருக்கு 2,000 பி‌ரிண்ட்கள். இந்திப் படங்களின் இந்த அபி‌ரிதமான பி‌ரிண்ட்களின் எண்ணிக்கையை விஸ்வரூபம் முறியடிக்கும் என்று கமல்ஹாசன் கூறியிருக்கும் தகவலிலிருந்து தெ‌ரிய வந்துள்ளது.

தமிழ், இந்தி, தெலுங்கில் வெளியாகவிருக்கும் விஸ்வரூபத்துக்கு 3,000 பி‌ரிண்ட்கள் போடப்பட உள்ளதாக கமல்ஹாசன் தெ‌ரிவித்துள்ளார். கமல் நடித்தப் படம் ஒன்றுக்கு இவ்வளவு அதிக பி‌ரிண்ட்கள் போடப்படுவது இதுவே முதல்முறை. இது எந்திரனுக்கு போடப்பட்ட பி‌ரிண்ட்களின் எண்ணிக்கையைவிட அதிகம் எனவும் கூறப்படுகிறது.

ஆரோ 3டி தொழில்நுட்பத்துக்கு பல திரையரங்குகள் மாற்றி அமைக்கப்படுவதாலும், 3,000 பி‌ரிண்ட்கள் போட வேண்டியிருப்பதாலும் விஸ்வரூபம் படத்தின் வெளியீடு தள்ளிப் போவதாக கமல்ஹாசன் மேலும் தெ‌ரிவித்தார்.
ஷாருக்கான், கமல், விஸ்வரூபம்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» விஸ்வரூபம் பட விவகாரம்: கமல்ஹாசனுக்கு ஷாருக்கான், நாகார்ஜுன் உள்ளிட்ட நடிகர்கள் ஆதரவு
» விஸ்வரூபம் படத்தால் கமலுக்கு ஏற்பட்டு இருக்கும் இக்கட்டான நிலையை பார்த்து ‌போனில் கமலை தொடர்பு கொண்ட ரஜினி, அவரை பொறுமையாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். கமலின் விஸ்வரூபம் படத்தை தமிழக அரசு தடை செய்தது, அதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டை நாடினார்
» விஸ்வரூபம் படத்தை வெளியிட தடையில்லை
» விஸ்வரூபம் படத்தை வெளியிட முடியாது
» விஸ்வரூபம் படத்தை பிப்ரவரி 2-ல் டி.டி.எச்.சில் வெளியிட முடிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum