தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சபரிமலை ஐயப்பன் கோவில்

Go down

சபரிமலை ஐயப்பன் கோவில் Empty சபரிமலை ஐயப்பன் கோவில்

Post  meenu Mon Jan 14, 2013 1:27 pm

சபரிமலை என்பது கேரளாவிலுள்ள மேற்கு ‎மலைத்தொடர்களில் பத்தனம்தித்தா மாவட்டத்தில் உள்ள ஒரு புண்ணியத் தலமாகும். மஹிஷி என்ற ‎பெயர்கொண்ட அசுரபலம் கொண்ட அரக்கியை கொன்றபிறகு ‎சுவாமி ஐயப்பன் தியானம் செய்த இடமே சபரிமலை என ‎வழங்கப்படுகிறது. பதினெட்டு மலைகளுக்கு இடையே சுவாமி ‎ஐயப்பனின் கோவில் இருக்கிறது.

இந்தக் கோவில் ஒரு ‎மலையின் உச்சியில் உள்ளது. மேலும் மலைகள் மற்றும் காடுகளால் ‎சூழ்ந்துள்ளது. சபரிமலையை சூழ்ந்துள்ள ஒவ்வொரு மலையிலும் ‎கோவில்கள் காணப்படுகின்றன. நிலக்கல், காளகெட்டி, மற்றும் ‎கரிமலை போன்ற இடங்களில் இன்றும் நாம் நடைமுறைச்சார்ந்த ‎மற்றும் குறைபடாத கோவில்களை காணலாம்,

இதர மலைகளில் ‎பழங்காலத்து கோவில்களின் எஞ்சிய பிழைத்துக்கொண்ட ‎பாகங்களை காணலாம். ‎ ஆண்டுதோறும் சுமார் 45 முதல் 50 மில்லியன் பக்தர்கள் ‎சபரிமலைக்கு புனிதப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர், உலக ‎அளவில் ஒவ்வொரு ஆண்டும் மிகையான அளவில் ‎புனிதப்பயணம் மேற்கொள்ளப்படும் புண்ணியத்தலம் ‎சபரிமலையே ஆகும்.

சபரிமலைக்குப் புனிதப்பயணம் ‎மேற்கொள்ளும் ஒவ்வொரு பக்தனும், ஜாதி, மத, இன, தகுதி ‎அல்லது சமூக அந்தஸ்து போன்ற வேறுபாடுகளை ‎பொருட்படுத்தாமல், ஒரே மனதுடன், ஒரே வேட்கையுடனும், ஒரே ‎மந்திரத்தை உட்கொண்டும், அதாவது இறைவனான சுவாமி ‎ஐயப்பனின் திருவடிகளை அடைய வேண்டும் என்ற ‎குறிக்கோளுடன் புனிதப்பயணம் மேற்கொள்ளும் பக்தர்களின் ‎மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

இருந்தாலும் 10 முதல் 50 ‎வயதுக்குட்பட்ட பெண்கள் சமூக ரீதியாக இப்பயணத்தை ‎மேற்கொள்வதில்லை மேலும் கோவிலுக்குள் செல்வதற்கு ‎அனுமதி வழங்கப்படுவதில்லை. சுவாமி ஐயப்பனை சார்ந்த ‎வரலாற்றுக் கதைகளில் வீட்டு விலக்குக்குரிய பெண்கள் இங்கு ‎வருவதை தடை செய்துள்ள படியாலும் மேலும் இதர பல ‎காரணங்களாலும், பொதுவாக பெண்கள் இந்தக் கோவிலுக்கு ‎வருகை புரிவதில்லை.

இதற்கான முக்கிய காரணம் சுவாமி ‎ஐயப்பன் ஒரு பிரம்மச்சாரி என்ற ஐதீகமே. மண்டல பூஜை என ‎அறிவிக்கப்பட்ட நாட்களிலும் (தோராயமாக நவம்பர் 15 முதல் ‎டிசம்பர் 26 வரையிலும்), மகரவிளக்கன்றும் (ஜனவரி 14- "மகர ‎சங்கராந்தி") மற்றும் விஷு (ஏப்ரில் 14), மற்றும் ஒவ்வொரு ‎மலையாள மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் மட்டும் கோவில் ‎பிரார்த்தனை செய்வதற்காக திறந்து வைக்கப்படுகிறது. ‎

நெய் அபிஷேகம......

சபரிமலைக்கு சென்றதும் கோயிலின் அருகில் இருக்கும் பஸ்ம குளத்தை ஒட்டிய குழாய்களில் நீராட வேண்டும். இருமுடி கட்டைப்பிரித்து நெய்த் தேங்காயை உடைத்து ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி, அபிஷேகம் செய்ய கிளம்ப வேண்டும். நெய் அபிஷேகம் செய்ய தேவஸ்தான அலுவலகத்தில் பணம் கட்டி ரசீது பெற வேண்டும்.

அபிஷேகம் செய்த நெய்யை பாத்திரத்தில் ஊற்றி புரோகிதர் பக்தருக்கு கொடுப்பார். இந்த நெய் ஒரு புனிதமான மருந்து என்பதால் பக்தர்கள் தங்கள் வீட்டிற்கு கொண்டு வருவர். மகரபூஜை அன்று நெய் அபிஷேகம் செய்ய ஏராளமான பக்தர்கள் காத்து நிற்பார்கள். இந்த ஒரு நாள் மட்டும்தான் காலை முதல் மதியம் வரை தொடர்ந்து அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் நடக்கும்.

ஐயப்பன் கோவிலில் மிக அதிகமாக கிடைப்பது நெய்தான். பக்தர்கள் கொண்டு சென்ற நெய்யை தீவட்டி எரிப்பதற்கும், விளக்கு எரிப்பதற்கும் கொடுத்து விடுகிறார்கள். அப்பம், அரவணை ஆகியவை தயாரிக்கவும் நெய்யே பயன்படுத்தப்படுகிறது. அப்படி இருந்தும் மீதி வரும் நெய்யை நூற்றுக்கணக்கான டின்களில் அடைத்து அதை விற்பனைக்கு அனுப்பி விடுகிறார்கள்.

போக்குவரத்து வசதி....

ஐயப்பன் கோவிலுக்கு செல்ல சென்னையிலிருந்து பேருந்து மற்றும் இரயில் வசதி உள்ளது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum