சித்தி விநாயகர் திருக்கோயில், பாகலூர்
Page 1 of 1
சித்தி விநாயகர் திருக்கோயில், பாகலூர்
சக்தியின் அம்சமான விநாயகர் இங்கு சிவனின் ஆவுடை மீது வலது கையில் ஒடிந்த தந்தத்துடனும் இடது கையில் கொழுக்கட்டையுடனும் ஈசனின் திசையான ஈசான்யத்தை (வடகிழக்கு) நோக்கி அருள் பொழிகிறார். தனது பாதத்தில் சரணடைந்தால் அனைத்திலும் வெற்றி உண்டாகும் என்பதற்கேற்ப இடது பாதத்தை காட்டுகிறார்.
இந்த விநாயகரை வழிபட்டால் சிவசக்தியை ஒன்றாக தரிசித்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இக்கோயில் பிற கோயில்களைப்போல் அல்லாமல் இரண்டு அடுக்குமாடியுடன் அமைந்திருப்பது சிறப்பு. கருவறையில் விமானங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலின் முன்புறம் சுவாமி, அம்மன், பிள்ளையார், நாரதர், சுப்ரமணியர், மற்றும் காளையுடன் கூடிய கைலாயக் காட்சி காண்பவரைக் கொள்ளை கொள்ளும்.
கோயிலின் கீழ்தளத்தில் யாகசாலையும், தியான மண்டபமும் அமைந்துள்ளது. மேல்தளத்திற்குச் செல்ல இருபுறமும் படிக்கட்டுகள் அமைந்துள்ளது. பிள்ளையாரின் தரிசனத்தால் நம் வாழ்க்கையின் தரம் படிப்படியாக ஏறுவது போல், படிகளின் மீது ஏறிப் பார்த்தால் அங்கு முழுமுதற்கடவுள் நமக்கு அருள்பாலிக்கத் தயாராக இருப்பது போல் வீற்றிருக்கிறார்.
இவருக்கு இருபுறமும் கற்பக விநாயகரும், மாணிக்க விநாயகரும் உள்ளனர். சித்தி விநாயகருக்கு எதிரில் அவரது வாகனமும் பலி பீடமும் அமைந்துள்ளது. விநாயகரின் வலதுபுறத்தில் தாய் சொர்ணாம்பிகையும் அவளது இருபுறமும் மீனாட்சி, விசாலாட்சியும் அருள்பாலிக்கிறார்கள்.
முருகன், அம்மன் கோயில்களுக்கே உரித்தான பால்குட வழிபாடு இங்கு விசேஷம். விநாயகர் சதுர்த்தியன்று பக்தர்கள் விரதமிருந்து பால்குடம் எடுக்கின்றனர்.
சிறப்புகள்....
கடன் சுமை அதிகமாக உள்ளவர்கள் ஒரு வளர்பிறை சதுர்த்தியன்று தேங்காய் எண்ணெயில் 12 விளக்கேற்றி, பின் ஒவ்வொரு சதுர்த்தியிலும் ஒவ்வொரு விளக்காக குறைத்து தீபமேற்றும் பழக்கம் உள்ளது. விளக்கின் எண்ணிக்கை குறைவது போல பக்தர்களின் கடன் சுமை குறைகிறது என்று நம்புகிறார்கள். எனவே இவரை “கடன் தீர்க்கும் கணபதி” என்றும் செல்லப் பெயரிட்டு அழைக்கின்றனர்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» சித்தி விநாயகர் திருக்கோயில், பாகலூர்
» மணக்குள விநாயகர் திருக்கோயில் - புதுச்சேரி
» சித்தி விநாயகர் திருக்கோயில், பாகலூர்
» செல்வ விநாயகர் திருக்கோயில்
» அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில்
» மணக்குள விநாயகர் திருக்கோயில் - புதுச்சேரி
» சித்தி விநாயகர் திருக்கோயில், பாகலூர்
» செல்வ விநாயகர் திருக்கோயில்
» அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum