பிரதான வாயில் கதவு வைக்கும் இடம்
Page 1 of 1
பிரதான வாயில் கதவு வைக்கும் இடம்
பொதுவாக ஒரு வீட்டிற்கு பிரதான கேட் எந்த இடத்தில் இருக்க வேண்டுமென வாஸ்து சாஸ்திர ரீதியாக பார்க்கும் போது பல விஷயங்கள் புலப்படுகிறது. அனைத்து திசைகளிலுமே நல்ல திசை தான் சிலர் குறிப்பிட்ட திசை தான் யோக திசை மற்ற திசைகள் கெடுதியை ஏற்படுத்த கூடிய திசை எனக்கூறுகிறார்கள். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. எந்த திசையாக இருந்தாலும் பரவாயில்லை. அந்த திசைக்கு ஏற்றவாறு வீட்டின் அமைப்பு இருந்து விட்டால் எல்லா வகையிலும் அனுகூமான பலன்கள் உண்டாகும். பொதுவாக ஒவ்வொரு திசைக்கும் உச்ச ஸ்தானம் நீச்ச ஸ்தானம் என உள்ளது. உச்ச ஸ்தானத்தில் பிரதான கேட் வைத்தால் சுபிட்சங்கள் மேலோங்கும்.
வடக்கு திசை
வடக்கு பார்த்த வீட்டிற்கு கிழக்கை ஒட்டிய வடகிழக்கு பகுதி உச்ச ஸ்தானமாகும். வடமேற்கு பகுதி நீச்ச ஸ்தானமாகும். பொதுவாக வடகிழக்குப் பகுதியில் கேட் வைப்பது மிகவும் சிறப்பு. நெருக்கடி மிகுந்த ப-குதிகளில் வீட்டை சுற்றி அதிக இடம் விடாமல் வீடு கட்டும் போது பிரதான கேட்டானது. வடகிழக்குப் பகுதியில் வைத்து விட்டு அதற்கு நேராக வீட்டின் தலை வாசலும் வைத்துக் கொள்ளலாம். பெரிய இடங்களில் கட்டிடம் கட்டும் போது சுற்றி இடம் விட்டு கட்டினால் வடக்கை பார்த்த வீட்டிற்கு வடக்கு மற்றும் கிழக்குபுறம் அதிக இடம் விடும் பட்சத்தில் கிழக்கு புறம் அதிக இடம் காலியாக இருக்கும் போது அல்லது காலி இடத்திற்கு நேராக வடகிழக்கில் ஒரு கேட்டும் கட்டிடத்திற்கு வடகிழக்கில் தலைவாசல் அமைத்து தலை வாசலுக்கு நேராக ஒரு சிறிய கேட்டும் அமைத்து கொள்ளலாம். பொதுவாக ஒரு திசையில் கேட்டு வைக்கின்ற போது 2&க்கும் மேற்பட்ட கேட் வைக்கக் கூடாது. பொதுவாக வடக்கு பார்த்த வீட்டிற்கு வடகிழக்கு திசையில் கேட்டின் தலை வாசல் வைப்பது சிறப்பு.
கிழக்கு திசை
கிழக்கு பார்த்த மனைக்கு வடக்கை ஒட்டிய வடகிழக்கு திசை உச்ச ஸ்தானமாகும் அக்னி மூலை என வர்ணிக்கப்பட கூடிய தெற்கை ஒட்டிய தென்கிழக்கு திசை நீச்ச ஸ்தானமாகும். பொதுவாக கிழக்குப் பார்த்த மனை கொண்ட வீட்டிற்கு உச்ச ஸ்தானம் என வர்ணிக்கப்பட கூடிய வடகிழக்கு மூலையில் சுற்று சூழல் அமையக்கூடிய பிரதான கேட் வீட்டின் தலை வாசல் அமைவது மிக சிறப்பு. நெருக்கடி மிகுந்த இடங்களில் வடகிழக்கு திசையில் தலைவாசல் பிரதான கேட்க்கு நேராக அமைத்துக் கொள்ளலாம். கிழக்கு பார்த்த மனைக்கு கிழக்கு மற்றும் வடக்கு பக்கம் அதிக இடம் விட்டு கட்டினால் மனைக்கு வடகிழக்கில் பிரதான கேட் அமைத்து விட்டு அந்த கேட்டுக்கு நேராக காலி இடம் இருக்கும் பட்சத்தில் கட்டிடத்தில் வடகிழக்கில் பிரதான தலைவாசல் அமைத்து விட்டு தலை வாசலுக்கு நேராக ஒரு சிறிய கேட் அமைத்து கொள்ளலாம் ஆக வடகிழக்கில் தலைவாசல் மற்றும் பிரதான கேட் அமைப்பது மிகவும் சிறப்பு.
தெற்கு திசை
தெற்கை பார்த்த மனை உள்ள வீட்டிற்கு தென்கிழக்கு மூலை உச்ச ஸ்தானமாகும் மேற்கை ஒட்டிய தென்மேற்கு மூலை நீச்ச ஸ்தானமாகும். பொதுவாக பிரதான கேட் மற்றும் தலைவாசலானது கிழக்கு ஒட்டிய தென்கிழக்கு மூலையில் வைப்பது மிக சிறப்பு. நெருக்கடி மிகுந்த பகுதிகளில் தென்கிழக்கு மூலையில் தலை வாசல் வைத்து தலை வாசலுக்கு நேராக பிரதான கேட் வைப்பது சிறப்பு. வீட்டை சுற்றி தாராளமாக இடம் விட்டு கட்டுபவர்களுக்கு கிழக்கு புறம் அதிக காலி இடம் விட்டுக் கட்டினால் தெற்கு சுற்று சுவற்றில் தென்கிழக்கு மூலையில் பிரதான கேட் அமைக்க வேண்டும். கிழக்கு புறம் இடம் வீட்டு வீடு கட்டுகின்ற போது கிழக்கை ஒட்டிய தெற்கு திசையில் தலை வாசல் வைக்கும் பட்சத்தில் வீட்டின் தலைவாசலுக்கும், பிரதான கேட்டிற்கும் சம்மந்தமில்லாமல் இருக்கும் அப்படி இருக்கும் சூழ்நிலையில் கட்டிடத்தில் தென்கிழக்கு மூலையில் அமையும் தலைவாசலுக்கு நேராக ஒரு சிறிய கேட் அமைத்து கொள்ளலாம். தெற்கை பார்த்த வீட்டிற்கு கட்டிடத்திற்கு தலைவாசலுக்கு நேராக ஒரு சிறிய கேட்டும் மனைக்கு தென்கிழக்கு திசையில் ஒரு கேட்டும் அமைத்துக் கொள்ளலாம்.
மேற்கு திசை
மேற்கை பார்த்த மனை உள்ள வீட்டிற்கு வடக்கை ஒட்டிய வடமேற்கு மூலை உச்ச ஸ்தானமாகும். தென்மேற்கு மூலை நீச்ச ஸ்தானமாகும் வீட்டிற்கு வடமேற்கு மூலையில் தலைவாசலும் மனைக்கு வடமேற்கு மூலையில் பிரதான கேட்டும், அமைப்பது மிக சிறப்பு. குறிப்பாக நெருக்கடி மிகுந்த பகுதிகளில் இடம் விடாமல் கட்டுகின்ற போது வடமேற்கு மூலையில் வீட்டின் கேட்டும் அதற்கு நேராக தலைவாசலும் அமைத்துக் கொள்ளலாம். சுற்றி இடம் விட்டு கட்டுகின்ற பொழுது மனைக்கு வடமேற்கில் கேட் அமைத்து கட்டிடத்திற்கு வடமேற்கில் தலைவாசல் அமைக்கும் போது சற்று வித்தியாசம் வரவும். அதற்காக தலைவாசலுக்கு நேராக ஒரு சிறிய கேட் அமைத்து கொள்ளலாம். ஆக மேற்கை பார்த்த வீட்டிற்கு வடமேற்கு மூலையில் தலைவாசல் மற்றும் கேட் வைப்பது மிகவும் சிறப்பு.
பிரதான கேட்டிற்கும் தலை வாசலுக்கும் இடையே கழிவு நீர் குழாய் தண்ணீர் தொட்டி போர்வெல், திறந்த கிணறு போன்றவை இருக்க கூடாது. வாசலுக்கு நேராக பில்லர் குத்து போல சுவர், பெரிய மரம் மாடிப்படி, சமையலறை ஆகியவை இருப்பது நல்லதல்ல. பொதுவாக கேட்டிற்கு வெளிப்புறம் கூட நேராக மின் கம்பங்கள், வழியை மறைப்பது போல மரம் போன்றவைகள் இருப்பது நல்லதல்ல.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கதவு ஜன்னல் வைக்கும் முறைகள்
» அதிக எடை உடைய பொருள் வைக்கும் இடம்
» வாயில் நீர் ஒழுகுவது குறைய
» வாயில் நீர் ஒழுகுவது குறைய
» கதவு கதவு
» அதிக எடை உடைய பொருள் வைக்கும் இடம்
» வாயில் நீர் ஒழுகுவது குறைய
» வாயில் நீர் ஒழுகுவது குறைய
» கதவு கதவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum