பூஜை அறை பூஜை அறை
Page 1 of 1
பூஜை அறை பூஜை அறை
ஒரு வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நிகழ்ந்தால் முதலில் நன்றி சொல்வது இறைவனுக்கு தான். எங்கும் நிறைந்திருக்கும் பரம் பொருளான இறைவனை வீட்டில் நாம் வைத்து வணங்குவது பூஜையறையில் தான். கஷ்டங்கள் வந்தால் இறைவா ஏனிந்த நிலை என புலம்புகிறோம். மனநிம்மதி வேண்டி நாம் சென்று மனதார கை கூப்பி வணங்கி ஐந்து நிமிடங்கள் இறைவனிடம் நம் குறைகளை இறக்கி வைக்கும் இடமும் பூஜையறைதான். நம்மோடு வாழ்ந்து இறைவனடி சேர்ந்தவர்களையும் பூஜையறையில் வைத்து தான் இறைவனாக இருந்து நல்வழி காட்டும்படி வேண்டிக் கொள்கிறோம். தினமும் பூப் போட்டு, விளக்கேற்றி ஊதுபத்தி ஏற்றி, சாம்பிராணி புகை போட்டு நம்மால் முடிந்த அளவிற்கு ஏதாவது பொங்கலோ அல்லது ஏதாவது ஒரு பழ வகையோ வைத்து தினமும் வழி படுகிறோம்.
நாம் வாழம் வீடானது சுபிட்சங்கள் நிறைந்ததாகவும், மகிழ்ச்சி கரமானதாகவும் இருப்பதற்கு பூஜைகள் செய்வது, பிராத்தனை செய்வது, கடவுளை வணங்குவது போன்றவை ஒர் சிறந்த வழியாகும். அதிலும் வாஸ்து ரீதியாக பூஜையறையை எங்கு அமைக்க வேண்டுமோ அந்த இடத்தில் அமைத்து வழிப்பட்டால் வீடு எப்பொழுதும் லட்சுமி கடாட்சம் நிறைந்ததாக இருக்கும். நம் வீட்டின் பூஜையறையை வாஸ்து ரீதியாக எங்கு அமைக்க வேண்டும் என பார்க்கின்ற போது ஈசானே குடியிருக்க கூடிய ஈசான்ய மூலையில் அதாவது வடகிழக்கு மூலையில் அமைப்பது மிகவும் சிறப்பு. கட்டிடம் அமைக்கும் இடம் பெரியதாக இருந்து தனியாக பூஜையறை அமைக்கும் பட்சத்தில் வடகிழக்கு மூலையில் பூஜையறையை வைத்து அந்த பூஜை அறையின் மேற்-கு சுவற்றில் மேடை அமைத்து சுவாமி படமானது கிழக்கு நோக்கி இருக்கும் படி வைத்தால் நாம் சுவாமியை வணங்கும் போது மேற்கு நோக்கி நின்று வணங்குவோம். இப்படி வணங்குவது குடும்பத்திற்கு மிகவும் நல்லது.
] வீட்டில் ஏற்றப்படக் கூடிய மகா லக்ஷமி விளக்கை கிழக்கு அல்லது வடக்கு பார்த்ததுப் போல ஏற்றுவது நல்லது. குறிப்பாக வடகிழக்கு மூலையில் பூஜை அறை அமைக்கும் போது பூஜை அறையின் அளவானது அகலம் மற்றும் நீளமாக 6,8,10,11 அடிகளாக இருப்பது மிகவும் நல்லது.
கை கால் நீட்டி படுக்கே இடமில்லை இதில் பூஜை அறைக்கென்று தனி இடத்திற்கு எங்கு செல்வது என நினைப்பவர்கள் முடிந்த வரை கிழக்கு பா£த்தது போல வடகிழக்கில் சுவாமி மேடை அமைத்து அதில் படங்களை வைத்து வழிபடுவது நல்லது. முடிந்தவரை சுவாமி கும்பிடும் அறை அல்லது இடத்திற்கு அருகில் (அ) பக்கத்தில் கழிவறையோ குளியலறையோ இல்லாதிருப்பது நல்லது. குறிப்பாக மாடி படிகட்டுகளுக்கு கீழே பூஜையறை இல்லாதிருப்பது மிக மிக உத்தமம்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை செய்ய உகந்த நேரம்
» ஜேஷ்டா நட்சத்திரலட்சுமி பூஜை
» வாஸ்து பூஜை - பூமி பூஜை எப்போது செய்யலாம் ?
» கோ பூஜை கோ பூஜை
» எது பூஜை? எது பூஜை?
» ஜேஷ்டா நட்சத்திரலட்சுமி பூஜை
» வாஸ்து பூஜை - பூமி பூஜை எப்போது செய்யலாம் ?
» கோ பூஜை கோ பூஜை
» எது பூஜை? எது பூஜை?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum