வாஸ்து என்னும் விஞ்ஞானம் நைரிதி மூலை படுக்கை அறை
Page 1 of 1

வீட்டின் நைரிதி மூலையில் பெரியவர்கள் படுக்கை அறையை அமைக்கவேண்டும். சக்தி அலைகளின் விதிப்படி.ஈசானியத்தில் இழுக்கப்படும் காஸ்மிக் சக்தி அலைகள், எதிர்மறை அமைப்பான நைரிதி மூலையில் உயர்சக்தியாக மாறுகிறது. இந்த இடத்தில் உருவமாகும் சக்தி அடர்த்தியாக இருக்கும். எனவே பெரியவர்கள் படுக்கை அறையை இங்கு அமைப்பதால், அவர்களால் உயர்சக்தியினை எளிதில் கிரகிக்க முடிகிறது. எனவே ஆழ்ந்த தூக்கம் வருகிறது. உடல்நலம் நன்றாக இருக்கும்.
நைரிதி மூலை மூடப்படல் வேண்டும்
வீட்டிற்குள் இழுக்கப்படும் காஸ்மிக் சக்தி அலைகள் நைரிதி மூலையில் உயிர்ச்சக்தியாக மாறுகிறது. இந்த மூலை திறந்திருந்தால், காஸ்மிக் சக்தி அலைகள் வெளியேறி பயன்ற்றதாகிறது. எனவே காஸ்மிக் சக்தி அலைகள் வெளியில் செல்லா வண்ணம் நைரிதி மூலை மூடப்பட்டும், உயரமாகவும், கனமாகவும் இருக்க வேண்டும். இதன் அடிப்படையில்தான் நைரிதிமூலையில் எந்தத்திறவையும்,அதாவது கதவு சன்னல்கள் வைக்கக்கூடாது என்று சாஸ்திரம் சொல்கிறது.
ஆக்கினேயத்தில் சமையல் அறை
கட்டிட அமைப்பில் வெப்ப சக்தியின் அளவு ஈசானியத்தில் சுற்றுப்புற அளவில் உள்ளது.அது தெற்குப் பக்கம் அதிகமாகி ஆக்கினேயத்தில் கொதிநிலை அளவுக்கு வருகிறது. பின்னர் மேற்குப் பக்கமாகக் குறைந்து கொண்டே வந்து, நைரிதியில் சுற்றுப்புற அளவுக்குக் குறைந்து விடுகிறது. அதேபோல் வடக்குப் பக்கம், வெப்பநிலை அளவு சிறிதாக உயர்ந்து வாயு மூலையில் சுற்றுப்புற அளவைவிட 15டிகிரி அதிகமாக உள்ளது. பின்னர் தெற்குப் பக்கம் குறைந்து நைரிதியில் சுற்றுப்புற அளவுக்கு வருகிறது. இந்த வெப்ப சக்தியின் அளவை உபயோகிக்கும் வகையில் சமையல் அறையை ஆக்கினேயத்தில் வைக்கிறோம். இது இயலாத பட்சத்தில் சமையல் அறையை வாயு மூலையில் வைக்கிறோம்.
பழைய சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள அறைகளின் அமைப்பும், தற்கால சக்தி அலைகளின் அடிப்படையில் வடிவமைக்கும் கட்டிடவரைபடமும் பெரும்பாலும் ஒத்துப்போகின்றன. எனவே பழைய சாஸ்திரம் தற்போதைய விஞ்ஞானமும் பயனில் ஒன்றாக உள்ளன. அணுகுமுறையில் தான் மாறுதல் உள்ளது. வாஸ்து சாஸ்திரம் கிரகங்களின் அமைப்பால் உண்டாகும் சக்தி வெளிப்பாட்டின் அடிப்படையில் அமைந்த விஞ்ஞானம் என்பது புலனாகிறது. கடைப்பிடிப்பதிலும் வாஸ்து சாஸ்திரம் அறிவியல் பூர்வமான விஞ்ஞானம் என்பது புலனாகிறது.
வாஸ்து சாஸ்திரம் என்பது சூரியக் குடும்பத்தின் கோள்களின் அடிப்படையில் அமைந்தது.இவை உலகின் எல்லாப் பாகங்களுக்கும் எல்லா மக்களுக்கும் பொதுவானது.எனவே வாஸ்து சாஸ்திரம் எந்த குறிப்பிட்ட மதத்திற்கோ நாட்டிற்கோ உரிமையுடையதல்ல,உலகத்தில் எல்லாருக்கும் பொதுவானது.வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் கட்டிடங்கள் அமைத்தால் நல்ல வாஸ்து பலம் உண்டாகி நல்ல பலன் உண்டாகிறது. வீட்டிலுள்ளோர் மன மகிழ்ச்சிக்கும் உயர்வுக்கும் குடும்பத்தின் வளர்ச்சிக்கும் காரணமாகிறது.இது பொதுத்தன்மை கொண்டதால் யார்வேண்டுமானாலும் எந்த இடத்தில் வேண்டுமானாலும் வாஸ்து சாஸ்திரப்படி கட்டிடம் அமைத்து மிகுந்த பலன்களைப் பெறலாம்.
சூரியன் கோள்கள் அவற்றின் சுழற்சி சக்தி அலைகள் என்றும் நிலைதிருக்கும் தன்மையுடைவை.அவற்றின் அடிப்படையில் உண்டான வாஸ்து சாஸ்திரம் என்றும் நிலைத்திருக்கும்.வாஸ்து சாஸ்திர அமைப்பு அடிப்படை விதிகளின்படி உள்ளது.எனவே இந்த விதிகளின்படி கட்டும் கட்டிடங்கள் நல்ல பலன் கொடுக்கும் தன்மையுடையது.எனவே வாஸ்து சாஸ்திரம் என்பது இயற்கையின் அடிப்படையில் அமைந்த விஞ்ஞானம்.அது உலக மக்கள் அனைவரும் பின்பற்றிப் பயன் அடையத்தக்க முறையில் பொதுவானது.நிலைத்த தன்மை கொண்டது.அனைவராலும் பயன்படுத்த ஏற்றது.விதிகளின் அடிப்படையில்அமைந்தது.எனவே வாஸ்து சாஸ்திரம் என்பது இந்துக்களின் ஏகபோக உரிமை அல்ல.அது உலகத்தில் அனைத்து சாதி,இனநாட்டு மக்களின் பொதுச்சொத்து.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum