தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிறுவாபுரி முருகன் கோவில்

Go down

 சிறுவாபுரி முருகன் கோவில்  Empty சிறுவாபுரி முருகன் கோவில்

Post  amma Sat Jan 12, 2013 2:38 pm

மூலவர்: பாலசுப்பிரமணியர்
பழமை: 500 வருடங்களுக்கு முன்
ஊர்: சிறுவாபுரி

இத்தலத்தில் வாழ்ந்த முருகம்மையார் என்ற முருகபக்தை எப்போதும் முருகனின் சிந்தனையில் இருந்தார். அவரது கற்பின் மீது சந்தேகம் கொண்ட கணவர், அவரது கையைத் துண்டித்தார். அப்போதும் இவர் முருகன் சிந்தனையில் இருந்ததை அறிந்த முருகன், அம்மையாருக்கு காட்சி கொடுத்துஅருள் புரிந்தார்.

இதனால் இவரது கை ஒன்று சேர்ந்து பழைய நிலைக்கு திரும்பியது. கோயில் ஐந்து நிலை இராஜகோபுரம் உடையது. மரகதக்கல்லால் ஆன மயில் இங்கு விசேஷம். மூலவர் பாலசுப்பிரமணியர் நாலரை அடி உயரத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். அவர் எதிரே அருணகிரிநாதர் சன்னதி உள்ளது.

முருகனைத் தவிர அனைத்து தெய்வச்சிலைகளும் மரகதக்கல்லால் ஆனவை என்பது குறிப்பிடத்தக்கது. முருகனுக்கு வலதுபக்கம் அண்ணாமலையார், உண்ணாமுலை அம்பாள் சன்னதி இருக்கிறது. இவர்களுக்கு நடுவில் வள்ளியும் முருகப் பெருமானும் கைகோர்த்து நின்ற நிலையில் திருமணக்கோலத்துடன் அருள்பாலிப்பது மிகவும் சிறப்பு.

இத்தகைய திருக்கோலத்தினை காண்பது அரிது. இந்த வள்ளிமணவாளனை பூச நட்சத்திரத்தில் வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. ஏனெனில், வள்ளி முருகன் திருமணம் பூச நட்சத்திரத்திலேயே நடந்ததாகச் சொல்லப்படுவதுண்டு.

சிறப்பு....

இத்தலத்திற்கு வருபவர் கடுமையாக விரதமிருந்து பசி பட்டினியுடன் தரிசிக்க வேண்டியதில்லை. இங்கு நேரில் வரவும் வேண்டியதில்லை. திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்பது போல, சிறுவாபுரி முருகனை நினைத்தாலே, வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை. புதிதாக வீடு கட்ட விரும்புபவர்கள் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு.

போக்குவரத்து வசதி....

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து (30கி.மீ) கும்மிடிபூண்டி, கவரப்பேட்டை பஸ்களில் ஏறி சிறுவாபுரி புதுரோடு ஸ்டாப்பில் இறங்கி அங்கிருந்து மேற்கே 3 கி.மீ தூரம் சென்றால் சிறுவாபுரியை அடையலாம்
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum