ஆரோக்கிய வாழ்விற்கு யோகா
Page 1 of 1
ஆரோக்கிய வாழ்விற்கு யோகா
மருத்துவமனைப் பக்கம் பெரும்பாலும் போகாமலும், மருந்துகளை நாடாமலும் நலமுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ்வதற்கு மிகச் சிறந்த வழி யோகா பயிற்சி மட்டுமே. இரத்த அழுத்தம், ஆஸ்துமா, பெண்களுக்கான மாதவிடாய் பிரச்சனைகள், இடுப்பு வலி போன்ற உடல்நலக் கோளாறுகளை தவிர்க்கும் வல்லமை யோகாப் பயிற்சிக்கு உண்டு. பல்வேறு வகையான நோய்களுக்கும் கடைப்பிடிக்க பல்வேறு வகையான யோகாசனங்கள் இருக்கின்றன.
ஆனால், நாமாக ஓர் ஆசனத்தைக் கற்றுக் கொண்டு பயிற்சி செய்வது சரியல்ல. யோகாசனங்களுக்கு பல விதிமுறைகள் உள்ளன. எனவே சிறந்த யோகப் பயிற்சி ஆசிரியரையே அணுக வேண்டும். அவசரகால வாழ்க்கையின் இடையே நமக்கேற்ற உடற்பயிற்சி முறைகளை அறிவதில் பலரும் திண்டாடுகிறோம். அத்தகையோருக்கு எளிதான வழியே யோகப் பயிற்சி.
எந்த வயதினருக்கும், எப்போதும் செய்ய முடிகின்ற யோகாசனங்கள் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கிறது. யோகாசனத்தை தினமும் காலையில் 5-ல் இருந்து 8 மணிக்குள் செய்வதுதான் மிகவும் சிறந்தது. காலை நேரம் கிடைக்காவிட்டால், மாலை 4-ல் இருந்து 8 மணிக்குள் செய்வது நன்மை பயக்கும்.
காலையில் யோகாசனம் செய்யும்போது மனதிற்கும் உடம்பிற்கும் கிடைக்கின்ற உற்சாகம், நம்முடைய அன்றாட வேலைகளை நன்றாகச் செய்ய வழிவகுக்கும். சுத்தக் காற்று தாராளமாக கிடைக்கின்ற அறையில்தான் யோகா செய்ய வேண்டும். நின்று கொண்டு செய்கின்ற ஆசனங்களை வெற்றுத் தரைகளிலும் செய்யலாம். ஆனால், உட்கார்ந்தும் படுத்தும் செய்ய வேண்டியனவற்றுக்கு பாய் உபயோகப்படுத்தலாம்.
மாறாக, கட்டிலைப் பயன்படுத்தக்கூடாது. காலைக்கடன்களை முடித்தப் பின்பு, கை - கால் முகங்களை கழுவிவிட்டு யோகாசனங்கள் செய்யத் தொடங்கலாம். வெறும் வயிற்றில்தான் யோகாப் பயிற்சி செய்ய வேண்டும். யோகாப் பயிற்சிக்குப் பிறகு ஐந்து நிமிடம் எதுவும் செய்யாமல் மல்லாந்து கிடந்து தேகத்துக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். பின்னர், வழக்கமான வேலைகளைச் செய்யத் தொடங்கலாம். ஜிம்முக்குச் சென்று உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் யோகாசனம் செய்யும்போது, உரிய ஆசிரியர்களின் அறிவுரைகளப் பெற்று செய்ய வேண்டும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஆரோக்கிய வாழ்விற்கு யோகா
» ஆரோக்கிய வாழ்விற்கு யோகா
» ஆரோக்கிய வாழ்விற்கு யோக முத்திரைகள்
» ஆரோக்கிய வாழ்விற்கு முத்திரைகள்
» ஆரோக்கியமாக வாழ்விற்கு யோகா
» ஆரோக்கிய வாழ்விற்கு யோகா
» ஆரோக்கிய வாழ்விற்கு யோக முத்திரைகள்
» ஆரோக்கிய வாழ்விற்கு முத்திரைகள்
» ஆரோக்கியமாக வாழ்விற்கு யோகா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum