வைத்தமாநிதிப் பெருமாள் கோவில்
Page 1 of 1
வைத்தமாநிதிப் பெருமாள் கோவில்
108 திருப்பதிகளில் 96-வது திருப்பதிதான் திருக்கோளூர். தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி திவ்யதேசத்தில் இருந்து கிழக்கே 3 கீ.மீ. தூரத்தில் உள்ளது. நெல்லை நவதிருப்பதிகளில் தரிசன சேவையில் ஒரு தலமாக இருந்து அருள்தருகிறது. இத்திருத்தலத்தில் மூலவர் வைத்தமாநிதிப் பெருமாள்.
புஜங்க சயனராக கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். தன் இடது கையை உயர்த்தி உள்ளங்கையை பார்த்து கொண்டிருப்பது போன்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். கோளூர் வல்லி, குமுதவல்லி என்ற திருநாமங்களில் இரு தனிக்கோவில்களில் நாச்சியார்கள் தாயாராக எழுந்தருளி இருக்கிறார்கள்.
மதுரகவி ஆழ்வார்இத்தலத்தில்தான் திரு அவதாரம் செய்திருக்கிறார்.நம்மாழ்வாரின் பாசுரங்கள் இத்தலத்தின் அனைத்துப் பெருமைகளையும் பறைசாற்றுகின்றன. உலகின் சகல செல்வங்களையும் பாதுகாத்து வருகிறேன் என அவர் அறிவிப்பதால் வைத்தமாநிதிப் பெருமாள் என்று பெயர்பெற்றுள்ளார்.
நவதிருப்பதிகளில் ஒன்றாக விளங்கும் திருக்கோளூரில்தான் பெருமாள் குபேரனுக்கு செல்வத்தை வழங்கினார் என்பது ஆலய வரலாறு கூறும் செய்தி. ஒளிந்திருந்து பார்த்த நிதிபதி: ஒருசமயம் தனக்கு நிதிபொறுப்பை சிபாரிசு செய்த சிவபெருமானை தரிசித்து வரலாம் என்று திருக்கயிலைக்கு சென்றான் குபேரன்.
அன்றையதினம் பவுர்ணமி. ஆதலால் உமையாளும் பரமனும் தங்களது அந்தபுரத்தில் தனியே இருந்தனர். பரமன் தன் மடியில் தேவியை கிடத்திய படி காதலாகி கசிந்து கொண்டிருந்தார். சிவபூஜையில் கரடி நுழைவது போல அந்தப்புரத்திற்குள் நுழைந்த குபேரன் ஒரு திரைசீலை ஓரமாக நின்று அவர்களது சரசத்தை கண்டு களித்துக்கொண்டிருந்தான்.
பார்வதி தேவியின் அழகில் மயங்கிவிட்டான். தெரியாமல் சென்றவன் திரும்பி வந்திருக்கலாம். தவறு செய்கிறோமோ என்று மனம் நினைக்க ஒற்றைக்கண்ணால் பார்த்துக்கொண்டிருந்தான். அந்தபுர திரைச்சீலை அசைவதைப் பார்த்து விட்ட பார்வதிதேவி யார் என்று கேட்க, குபேரன் திரும்பியபடி பூனை போல் சென்றான்.
அவனை நிற்கச் செய்து... யார் நீ.. ஓ..குபேரனா... தனியாக இருக்கும் தம்பதிகளின் அங்க லாவன்யங்களை ரசித்து பார்த்தது தவறென்று தெரியவில்லையா.. உனக்குப எத்தனை நேரம் கண்டுகளித்தாய்ப தீயகாம குரோத எண்ணத்தோடு ஒற்றை கண்ணால் எங்களை கவனித்ததால் ஒரு கண்பார்வையை இழப்பாயாக..!
உன் தேகமும், முகமும் விகாரமாக போகட்டும்! உனது செல்வங்களும் நவநிதிகளும் உன்னை விட்டு விலகி செல்லட்டும் என்ற கடும் சாபத்தை கொடுத்து விட்டாள். அந்த நிமிடத்திலேயே பார்வதிதேவியின் கோபக்கணல் உடனான சாபத்தால் பார்வை, அழகு இழந்து விட நவநிதி செல்வங்கள் யாவும் தாமிரபரணி நதிக்கரையில் கலந்து ஒதுங்கிவிட்டன.
``எங்களை காப்பாற்றுவதற்கு யாருமே இல்லையாப'' என்று நவநிதிகள் வருத்தப்பட்டன. உடனே பெருமாள்,அங்கு வந்து ``நான் உங்களை காப்பாற்றுகிறேன்'' என்று அங்கேயே பள்ளி கொண்டு நிதிகளை அரவனைத்துக் கொண்டார். அதனால் அவர் வைத்தமாநிதி என்று அழைக்கப்படுகிறார்.
கயிலம்பதியில் சாபம் பெற்ற குபேரன் பரமனின் காலில் விழுந்து மன்னிக்கும் படி வேண்ட அவர் பார்வதி தேவியை வணங்கி`` கேள்'' என்றார். தேவியிடம் மன்றாடிய குபேரனுக்கு தீய எண்ணத்துடன் பாத்ததால் உன் உருவமும் முகமும் பழையபடி மாறிவிடாது. ஆனால் இழந்த செல்வங்கள் நிதிகள் அனைத்தையும் பெற்றிட ஓர் உபாயம் சொல்கிறேன்.
தாமிரபரணி ஆற்றுக்கு தெற்குகரையில் உள்ள திருக்கோளூருக்கு சென்று புஜங்க சயனப்பெருமாளின் காலில் விழுந்து வணங்கு. மகாவிஷ்ணு மனம் இறங்கினால்தான் உனக்கு பாபவிமோஷனம் என்று திட்டவட்டமாக கூறி விட்டு உள்ளே சென்று விட்டார். காடும், மலையும், புதரும், தாண்டி ஓடினான்...ஓடினான்..குபேரன்.
அந்த திருக்கோளூர் கிராமத்தை நோக்கி. அங்கே எம்பெருமானை காணவில்லை. ஒரு நெடுங்கல்லின் மேல் அமர்ந்து நீண்ட காலமாகத் தவம் செய்து கொண்டிருந்ததால் பெருமாள் மனம் இறங்கி அவனுக்கு காட்சி கொடுத்தார். நீ அழுத கண்ணீரால் உன் பாபமெல்லாம் கரைந்து ஓடியது குபேரனே!இனி பெண் பாவத்திற்கு செல்லாதே என்றுபுத்திமதி கூறி நவதிதிகளின் ஒரு பகுதியை மரக்காலால் அளந்து கொடுத்தார்.
குபேரன் போதும் சுவாமி என்று அடிக்கடி சொன்னபடியே வாங்கி கொண்டிருந்தான். அவர் பாதம் பற்றிய குபேரன் போதுமென்ற போதும் பொன்மணிகளைப் புரட்டியபடியே எடுத்து தரும் மாதவனே! உன் கருணையே கருணை என்று நன்றி சொல்லி அனகாபுரி பட்டணத்திற்கு மகிழ்ச்சியோடு சென்றான்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» வைத்தமாநிதிப் பெருமாள் கோவில்
» வைத்தமாநிதிப் பெருமாள் கோவில்
» வைத்தமாநிதிப் பெருமாள் கோவில்
» வைத்தமாநிதிப் பெருமாள் கோவில்
» வைத்தமாநிதிப் பெருமாள் கோவில்
» வைத்தமாநிதிப் பெருமாள் கோவில்
» வைத்தமாநிதிப் பெருமாள் கோவில்
» வைத்தமாநிதிப் பெருமாள் கோவில்
» வைத்தமாநிதிப் பெருமாள் கோவில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum