நவம்பரில் பிரவுசர் பயன்பாடு
Page 1 of 1
நவம்பரில் பிரவுசர் பயன்பாடு
பன்னாட்டளவில் பிரவுசர்களின் பயன்பாட்டினை ஆய்வு செய்திடும் அமைப்பான நெட் அப்ளிகேஷன்ஸ் (Net applications), சென்ற நவம்பரில், விண்டோஸ் 8 அறிமுகத்தை ஒட்டி, பிரவுசரின் பயன்பாடு எப்படி இருந்தது என்பதைக் கணக்கெடுத்துத் தெரிவித்துள்ளது. மிகப் பெரிய அளவிலான புதிய மாற்றங்களை எந்த பிரவுசரும் கொண்டு வரவில்லை.
இருப்பினும் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த மாதத்தில் தான், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10 முழுமையாக ஒருமாத காலப்பயன்பாட்டில் வாடிக்கையாளர்களுக்குக் கிடைத்தது. மொஸில்லா தன் பயர்பாக்ஸ் பிரவுசரின் 17 ஆம் பதிப்பைக் கொண்டு வந்தது. கூகுள் குரோம் பதிப்பு 23 ஐ வெளியிட்டது.
அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்பாடு 0.63% அதிகமாகியது. பயர்பாக்ஸ் முந்தைய தன் இழப்புகளை ஈடு செய்து, 0.45% பயன்பாட்டினைக் கூடுதலாகப் பெற்றது. குரோம் பிரவுசர் பயன்பாடு 1.31% குறைந்தது. சபாரி பிரவுசர் பயன்பாடு 0.04% உயர்ந்தது. ஆப்பராவின் வாடிக்கையாளர் எண்ணிக்கையும் 0.07% உயர்ந்திருந்தது.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்பாடு 54.76% என்ற கூடுதல் அளவில் முதல் இடத்திலேயே உள்ளது. இதன் வளர்ச்சியைப் பார்க்கையில், பாதிக்கு மேல் பெற்றுள்ள இதன் பங்கு குறையாது என்றே தோன்றுகிறது. விண்டோஸ் 8 அறிமுகம், இன்டர்நெட் பயன்பாட்டினை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 10 மற்றும் பதிப்பு 9 ஆகிய இரண்டும் கூடுதல் பயன்பாட்டினைக் கொண்டன. பதிப்பு 7 மற்றும் 6ன் பயன்பாடு தொடர்ந்து சரியும் நிலையிலேயே உள்ளது. இ.எ. பதிப்பு 6 இனி பயன்பாட்டில் இருக்கக் கூடாது என மைக்ரோசாப்ட் அறிவித்தாலும், சீனா போன்ற நாடுகளில் இன்னும் அதுவே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பயர்பாக்ஸ் பிரவுசர், இந்த சந்தையில் இன்னும் ஐந்தில் ஒரு பங்கினைக் கொண்டுள்ளது. பயர்பாக்ஸ் 16 மற்றும் 17 புதிய வாடிக்கையாளர்கள் வசம் காணப்பட்டது. மற்றவற்றின் பயன்பாடு குறைந்துள்ளது. குரோம் பிரவுசர், மொத்த பிரவுசர் பயன்பாட்டில், 17.24%க் கொண்டுள்ளது.
கூகுள் நிறுவனத்தின் இந்த பிரவுசர், தொடர்ந்து மூன்றாவது மாதமாக, தன் பங்கினை இழந்துள்ளது. குரோம் பதிப்பு 23 மட்டுமே தன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை உயர்த்தியுள்ளது.முந்தைய பதிப்புகளின் பயன்பாடு குறையத் தொடங்கியுள்ளது.
நெட் அப்ளிகேஷன் அமைப்பு மேலே காணும் முடிவுகளை, ஏறத்தாழ 16 கோடி இன்டர்நெட் பயனாளர்களின் செயல்பாட்டின் அடிப்படையில் வெளியிட்டுள்ளது. சுமார் 40 ஆயிரம் இணைய தளங்களில் ஏற்படும் போக்குவரத்தினைக் கண்காணித்து முடிவுகளை வெளியிடுகிறது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கனடா இசை நிகழ்ச்சியை நவம்பரில் நடத்த வேண்டாம் – இளையராஜாவுக்கு ஆர்கே செல்வமணி கோரிக்கை
» இன்றைய சமூகத்தில் நாலடியாரின் பயன்பாடு
» இன்றைய சமூகத்தில் நாலடியாரின் பயன்பாடு
» லெட்ரோசோல் : அபாயகரமான பயன்பாடு, சட்டவிரோத பரிந்துரை
» சங்க இலக்கியத்தில் அகவுணர்வு - உயிரினப் பயன்பாடு - நற்றிணை
» இன்றைய சமூகத்தில் நாலடியாரின் பயன்பாடு
» இன்றைய சமூகத்தில் நாலடியாரின் பயன்பாடு
» லெட்ரோசோல் : அபாயகரமான பயன்பாடு, சட்டவிரோத பரிந்துரை
» சங்க இலக்கியத்தில் அகவுணர்வு - உயிரினப் பயன்பாடு - நற்றிணை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum