ராம் நினைவகம் ஒரு வினாடி வினா
Page 1 of 1
ராம் நினைவகம் ஒரு வினாடி வினா
கம்ப்யூட்டரைப் பற்றிப் படிக்கையில், ராம் மெமரி குறித்து நாம் அறிந்தே ஆக வேண்டும். ஒரு டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் எவ்வளவு ராம் மெமரி இருக்க வேண்டும்? லேப்டாப்பில் ராம் மெமரியை அதிகப்படுத்த முடியுமா? என்பது போன்ற கேள்விகளை நாம் சந்திக்கிறோம். அதற்கான பதிலையும் தருகிறோம்.
ஆனால், ராம் மெமரி குறித்து நாம் எண்ணிக் கொண்டிருப்பவை சரிதானா? என்று எப்போதாவது சரி பார்த்திருப்போமா? இங்கே ராம் மெமரி சார்ந்த சில கேள்விகள் ஒரு வினாடி வினா தொகுப்பு போலத் தரப்பட்டுள்ளது. கேள்விகளுக்கான பதிலைத் தேர்ந்தெடுத்து இறுதியில் தரப்பட்டுள்ள விடைகளுடன் சரி பார்த்து நீங்கள் தெரிந்து கொண்டிருப்பதனை உறுதி செய்து கொள்ளவும்.
1. RAM என்பதன் விரிவாக்கம் என்ன?
A) Real action markup B) Rapid accessory movement C) Random access memory
2. பொதுவான ராம் மெமரியின் வடிவம் எது?
A) Dynamic RAM B) Static RAM C) Video RAM
3. டைனமிக் ராம் நினைவகத்தில் உள்ள மெமரி கண்ட்ரோலர், எத்தனை முறை தன் மெமரியை ரெப்ரெஷ் செய்து கொள்கிறது.
அ) ஒரு நிமிடத்தில் ஒரு முறை
ஆ) ஒரு விநாடியில் சில முறை
இ) விநாடியில் பல்லாயிரம் முறை
4. மெமரி செல்கள் எதில் அமைக்கப்படுகின்றன?
அ) காப்பர் ஆ) சிலிகான் இ) பிளாஸ்டிக்
5.கீழ்க்கண்டவற்றில், எது ராம் மெமரி போன்றதில்லை?
A) EDO DRAM B) FLASH C) VRAM
6. வழக்கமாக ராம் மெமரி, எத்தனை மெகா பைட்ஸ் பெருக்கத்தில் விற்பனை செய்யப்படும்?
அ) 8 ஆ) 10 இ) 16
7. கேஷ் மெமரி என்பது . . . .
அ) சிஸ்டம் மெமரியைக் காட்டிலும் சி.பி.யு.விற்கு நெருக்கமானது.
ஆ) ஹார்ட் ட்ரைவில் அமைக்கப்படுகிறது.
இ) நிதி சம்பந்தமான செயல்பாடுகளில் மட்டும் பயன்படுத்தப்படுகிறது.
கீழ்க்கண்ட செயல்பாடுகளில், நினைவகத்தினை அதிகம் எடுத்துக் கொள்ளாத செயல்பாடு எது?
அ) இணையத்தில் உலா வருதல்
ஆ) போட்டோ எடிட்டிங்
இ) கேம்ஸ் விளையாடுதல்
9. ஐ.பி.எம். நிறுவனத்தின் ராபர்ட் டென்னார்ட் (Robert Dennard) என்பவர், 1968 ஆம் ஆண்டு, எந்த அறிவியல் கண்டுபிடிப்பிற்கு காப்புரிமை பெற்றார்?
அ) டைனமிக் ரேண்டம் அக்சஸ் மெமரி
ஆ) மேக்னடிக் கோர் மெமரி
இ) பஞ்ச் கார்ட் மெமரி
10. DIMM என்பது கீழ்க்காணும் எதனைக் குறிக்கிறது?
A) dynamic incorporated memory module
B) dual inline memory module
C) data input memory manager
பதில்கள்:
1. Random access memory. இதில் ஒரு மெமரி செல்லின் சரியான இடம் தெரிந்தால், அதனை அணுகலாம் என்பதால், இது Random access என அழைக்கப்படுகிறது.
2. DRAM. Dynamic RAM. இந்த வகை ராம் மெமரியே அதிகமான புழக்கத்தில் உள்ள நினைவகமாகும். இதில் உள்ள மெமரி செல் ஒன்றில், ஒரு ட்ரான்சிஸ்டரும், கெபாசிட்டரும் இணையாக இருக்கும். கெபாசிட்டர், தகவலை 0 அல்லது 1 எனக் கொண்டிருக்கும். ட்ரான்சிஸ்டர் ஒரு ஸ்விட்ச் போலச் செயல்படும். இதன் மூலம் மெமரியின் நிலை மாற்றப்படும்.
3. இ) விநாடியில் பல்லாயிரம் முறை. அதனால் தான் அது Dynamic என அழைக்கப்படுகிறது. அவ்வாறு ரெப்ரெஷ் செய்யப்படாவிட்டால், அதன் நினைவகத்தில் உள்ளதனை இந்த மெமரி இழந்துவிடும்.
4. மெமரி செல்கள், சிலிகான் கொண்டு அமைக்கப்பட்ட வேபர் (Wafer) எனப்படும் மெல்லிய தட்டுகளில் அமைக்கப்படுகின்றன. கம்ப்யூட்டர் சிப்களில் ஒருங்கிணைந்த சர்க்யூட் சுற்றுகளில் இது ஒரு முக்கிய உறுப்பாகும்.
5. பிளாஷ் மெமரி என்பது ஒருவகை நினைவகம் என்றாலும், அது ராம் மெமரியைப் போல் இல்லாமல், ஹார்ட் ட்ரைவ் போலச் செயல்படுகிறது. EDO DRAM (extended dataout dynamic random access memory) மற்றும் VRAM என்பவை ராம் மெமரியின் மற்ற அமைப்புகளே.
6. ராம் நினைவகம் பொதுவாக, 16 மெகாபைட்ஸ் பெருக்கத்தில் விற்பனை செய்யப்படுகிறது. 16, 32, 64, 128, 256, 512, 1024 என்றபடி.
7. அ) குறுகிய விரைவான அணுக்கம் தேவை என்பதால், கேஷ் மெமரி என்பது, சிஸ்டம் மெமரியைக் காட்டிலும் சி.பி.யு.விற்கு நெருக்கமானது.
8. அ) இணையத்தில் உலா வருதல். கேம்ஸ் விளையாடுவதிலும், போட்டோ எடிட்டிங் செய்வதிலும், மிக அதிகமான அளவில் ராம் மெமரி தேவைப்படும். ஆனால், ஒரு பேஸ்புக் இணையதளத்தினைப் பார்வையிடுவதற்கு, அந்த அளவிற்கு ராம் மெமரி தேவைப்படாது.
9. அ) டைனமிக் ரேண்டம் அக்சஸ் மெமரி. ட்ரான்சிஸ்டர் ஒன்றைப் பயன்படுத்தி, எவ்வாறு டைனமிக் ரேண்டம் அக்சஸ் மெமரியை (DRAM) உருவாக்கலாம் என்று கண்டுபிடித்தார். மைக்ரோ கம்ப்யூட்டர் புரட்சி ஏற்பட இதுவே அடிப்படைக் காரணம் ஆயிற்று.
10.ஆ) dual inline memory module இன்றைய புழக்கத்தில் இருக்கும் கம்ப்யூட்டர்களில் இந்த வகையான ராம் நினைவகம் தான் அதிகம் அமைக்கப்படுகின்றன.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சன்மார்க்க வினாடி வினா
» அறிவியல் வினாடி வினா
» ஸ்போர்ட்ஸ் வினாடி வினா - 1000
» விளையாட்டு வினாடி வினா விடை
» திரைப்படத் தகவல்களில் வினாடி - வினா விடை
» அறிவியல் வினாடி வினா
» ஸ்போர்ட்ஸ் வினாடி வினா - 1000
» விளையாட்டு வினாடி வினா விடை
» திரைப்படத் தகவல்களில் வினாடி - வினா விடை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum