புதிய இன்டர்நெட் முகவரி தயார்
Page 1 of 1
புதிய இன்டர்நெட் முகவரி தயார்
இந்தியாவில் இன்டர்நெட் முகவரிகளை வழங்கும் Indian Registry for Internet Names and Numbers (IRINN) அமைப்பு புதிய வகை முகவரிகளை வழங்கத் தயாராகி உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த வகை முகவரிகள் மூலம், இணையத்தைப் பயன்படுத்தும் ஒவ்வொரு பயனாளரையும் அடையாளம் காண முடியும். தற்போதைய IPv4 (Internet Protocol version 4) அமைப்பு வகையினைப் பின்பற்றி, குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் இணைய முகவரிகளை வழங்க இயலமுடியவில்லை. இதனால், ஒரே இணைய பயனாளர் முகவரியினை ஒன்றுக்கு மேற்பட்டவருக்கு வழங்கப்பட்டு வந்தது. இது, தனிப்பட்ட பயனாளரை அடையாளம் காணுவதில் சிக்கலை ஏற்படுத்தியது.
புதிய IPv6 முறையைப் பின்பற்றுவதன் மூலம், இன்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனங்கள், தங்கள் வாடிக்கையாளர் ஒவ்வொருவருக்கும் தனி முகவரியினை வழங்க இயலும். பன்னாட்டளவில், இன்டர்நெட் பயனாளர் முகவரிகளைக் கண்காணிக்கும் அமைப்பின் தலைவர் அண்மையில் இந்தியாவில் இதனைத் தெரிவித்தார்.
புதிய வகை முகவரி கட்டமைப்பின் மூலம், இதற்கான கட்டணமும் குறையும். இதுவரை இருந்த அமைப்பின் வழியில், முகவரிகள் தொகுதி ஒன்றை ரூ.66,000 செலுத்தி வாங்க வேண்டியிருந்தது. இனி இதற்கு ரூ. 21,999 செலுத்தினால் போதும்.
இனி இன்டர்நெட் முகவரிகளை அமைத்து வழங்கும் சாதனங்கள், ஐ.வி.பி. 6 கட்டமைப்பினைக் கையாளும் திறனுடன் இருப்பதனை அரசு உறுதி செய்திட வேண்டும் என்று இந்தப் பிரிவினைக் கண்காணிக்கும் அமைப்பின் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» எம் பி-3, இன்டர்நெட் டெலிஃபோன், ஆன்லைன் ஷாப்பிங், இன்டர்நெட் சாட்டிங், இன்டர்நெட் கேம்ஸ், இ-புக், இன்டர்நெட் ஃபேக்ஸ் மற்றும் 10 பயன்பாடுகள்
» தபால் உரையின் மீது முகவரி அச்சிட...
» அல் காயிதா பயங்கμத்தின் முகவரி
» அல் காயிதா-பயங்கரத்தின் முகவரி
» அல் காயிதா-பயங்கரத்தின் முகவரி
» தபால் உரையின் மீது முகவரி அச்சிட...
» அல் காயிதா பயங்கμத்தின் முகவரி
» அல் காயிதா-பயங்கரத்தின் முகவரி
» அல் காயிதா-பயங்கரத்தின் முகவரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum