மன அழுத்தத்தை குறைக்கும் உடற்பயிற்சி!
Page 1 of 1
மன அழுத்தத்தை குறைக்கும் உடற்பயிற்சி!
எல்லா துறையிலும் எல்லா பணிகளிலும் அனைவரும் ஒருவிதமான மன இறுக்கத்துடனேயே சுழன்று கொண்டிருக்கிறார்கள். மனிதனுக்கு வரும் நோய்களில் 75 முதல் 90 வரை நோய்கள் அழுத்தமான சூழல் காரணமாக வருவதாக சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இந்த மன அழுத்தத்தை குறைக்க சில வகையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இருக்கையில் அமர்ந்தவாறே இந்த உடற்பயிற்சியை செய்யலாம்.
* தலையை இடதுபக்கமாக சாய்த்து இடதுபக்க காது தோற்பட்டையில் படும்படி சாய்த்து நன்றாக அழுத்தத்தை கொடுக்கவும்.வலது கையை தலையில் சிறிது அழுத்துவதன் மூலம் அழுத்தத்தைக் கொடுக்கலாம்.
* இதே போன்று சமநிலையான, இறுக்கமற்ற நிலையில் தலையை வலது பக்கமாக சாய்த்து வலதுபக்க காது தோற்பட்டையில் படும்படி சாய்த்து நன்றாக அழுத்தத்தை கொடுக்கவும்.
* ஒரு நிலையில் இருந்து கொண்டு கண்களை இமைக்காது இடமிருந்து வலதுபக்கமாக தலையை சுழற்றவும், இவ்வாறே ஒரு நிலையில் இருந்து கொண்டு கண்களை இமைக்காது வலதுபக்கமிருந்து இடது பக்கமாக தலையை சுழற்றவும்.
* இடது கையை மடித்து நெஞ்சுப்பகுதிக்கு மேலாக வலபக்க தோற்பட்டையில் படும்படி செய்து அழுத்தத்தை கொடுக்கவும்.
* வலது கையை மடித்து நெஞ்சுப்பகுதிக்கு மேலாக இடதுபக்க தோற்பட்டையில் படும்படி செய்து அழுத்தத்தை கொடுக்கவும்.
* இருக்கையில் அமர்ந்தவாறே குனிந்து உங்களது பாதங்களை தொடவும்.
* இருக்கையில் அமர்ந்தவாறே கைகளை முன்நோக்கி நீட்டி இருகைகளையும் ஒன்று சேர்த்து பாதங்களைத் தொட முயற்சித்து அழுத்தத்தை கொடுக்கவும்.
* வலதுகயை நீட்டி தூக்கி பெருவிரல் மற்றும் நடுவிரல்களுக்கு மாறி மாறி அழுத்தத்தை கொடுக்கவும், இதேபோல் இடது கைக்கும் செய்யவும். இந்த பயிற்சிகளை நீங்கள் வாரத்தில் 3- 4 தடவைகள் செய்யலாம்.மன அழுத்தம் குறையும்
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» மன அழுத்தத்தை குறைக்கும் தியானம்
» மன அழுத்தத்தை குறைக்கும் மூலிகை
» மன அழுத்தத்தை குறைக்கும் தியானம்
» தொப்பையைக் குறைக்கும் உடற்பயிற்சி
» இரத்த அழுத்தத்தை குறைக்கும் பூண்டு
» மன அழுத்தத்தை குறைக்கும் மூலிகை
» மன அழுத்தத்தை குறைக்கும் தியானம்
» தொப்பையைக் குறைக்கும் உடற்பயிற்சி
» இரத்த அழுத்தத்தை குறைக்கும் பூண்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum