தினமும் 15 நிமிட உடற்பயிற்சி ஆயுளை நீடிக்கும்
Page 1 of 1
தினமும் 15 நிமிட உடற்பயிற்சி ஆயுளை நீடிக்கும்
தினமும் தொடர்ந்து 15 நிமிடங்கள் எளிய உடற்பயிற்சி செய்து வந்தால் வாழ்நாளில் 14 சதவீதம் அல்லது 3 ஆண்டுகள் நீடிக்க செய்ய முடியும் என்கிறது ஆராய்ச்சி மையம். நிமிடங்கள் அதிகரிப்பதற்கு ஏற்ப வாழ்நாளும் அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
உடற்பயிற்சிக்கும் ஆயுள் நீள்வதற்கும் உள்ள தொடர்பு பற்றி தைவானின் ‘லான்செட்’ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். தைவானை சேர்ந்த 4 லட்சம் பேரின் வாழ்க்கை முறை ஆராயப்பட்டது. நாள்தோறும் அதிக நடைபயிற்சி, கால் மணி நேர எளிய உடற்பயிற்சி செய்வோரின் வாழ்நாள் 14 சதவீதம் அதிகரிக்கும் என தெரிவித்தனர்.
அதற்கு மேல் உடற்பயிற்சி நேரம் அதிகரிக்கும் ஒவ்வொரு 15 நிமிடத்துக்கும் வாழ்நாள் 4 சதவீதம் கூடும் என்றனர். அதன்படி, வாரத்துக்கு குறைந்தபட்சம் ஒன்றரை மணி நேரம் (90 நிமிடங்கள்) உடற்பயிற்சி செய்வதன் மூலம் செல்கள் புத்துயிர் பெற்று நோய் எதிர்ப்பு திறன் அதிகம் பெறுகின்றன. அதன்மூலம் வயதாகும் நடைமுறை தாமதமாக வாழ்நாள் நீடிக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» தினமும் 15 நிமிட உடற்பயிற்சி ஆயுளை நீடிக்கும்
» தினமும் 15 நிமிட உடற்பயிற்சி ஆயுளை நீடிக்கும்
» ஆயுளைக் கூட்ட தினமும் 15 நிமிட உடற்பயிற்சி
» சூரிய குளியல், ஆயுளை நீடிக்கும்
» ஆயுளை கூட்டும் உடற்பயிற்சி
» தினமும் 15 நிமிட உடற்பயிற்சி ஆயுளை நீடிக்கும்
» ஆயுளைக் கூட்ட தினமும் 15 நிமிட உடற்பயிற்சி
» சூரிய குளியல், ஆயுளை நீடிக்கும்
» ஆயுளை கூட்டும் உடற்பயிற்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum