உடல் ஆரோக்கியம் பெற எளிய உடற்பயிற்சிகள்
Page 1 of 1
உடல் ஆரோக்கியம் பெற எளிய உடற்பயிற்சிகள்
* ஓரடி அகளம் இடைவெளி இருக்குமாறு கால்களை விறைப்பாக வைத்து, இடுப்பின் இருபுறமும் இருகைகளையும் ஊன்றி நிமிர்ந்து நிற்க வேண்டும். மூச்சை நன்றாக உள்ளே இழுக்கவும், சற்று நேரம் கழித்து மூச்சினை வெளியே விட வேண்டும். இவ்வாறு 15 முறை செய்ய வேண்டும்.
* முதல் பயிற்சியை போல் நிற்கும் நிலையில் மூச்சை நன்றாக உள்ளே இழுத்துக் கொள்ளவேண்டும். கால்களை உயர்த்தி, முன் பாதங்களில் நிற்க வேண்டும். சற்று நேரம் கழித்து முன் நிலைக்கு வந்து மூச்சை விட வேண்டும். இவ்வாறு 15 முறை செய்ய வேண்டும்.
* முதல் பயிற்சியை போல் இருகைகளையும் தொடையின் பக்கவாட்டில் தொங்க வேண்டும். மூச்சை நன்றாக உள்ளே இழுத்துக் கொள்ள வேண்டும். கைகளை பக்கவாட்டில் தோள் அளவுக்கு உயர்த்த வேண்டும். சற்று நேரம் கழித்து முன் நிலைக்கு வந்து மூச்சை விட வேண்டும். இவ்வாறு 15 முறை செய்ய வேண்டும்.
* மூன்றாம் பயிற்சியை போலவே நிற்கும் நிலையில் மூச்சை நன்றாக உள்ளே இழுத்துக் கொள்ளவேண்டும். கைகளை பக்கவாட்டில் தோள் அளவுக்கு உயர்த்தி முன் பாதங்களில் நிற்க வேண்டும். குதிகால் தரையில் படாமல் சற்று நேரம் நின்ற பிறகு முன் நிலைக்கு வந்து மூச்சை விட வேண்டும்.இவ்வாறு 15 முறை செய்ய வேண்டும்.
* முதல் பயிற்சியை போலவே இரு கைகளையும் ஊன்றி நிற்க வேண்டும். மூச்சை நன்றாக உள்ளே இழுத்துக் கொள்ளவேண்டும். குதிகால் தரையில் இருக்கும்படியே குதிகால் மீது உட்கார வேண்டும் கீழே குனியாமல், நேர்கொண்ட பார்வை இருக்க வேண்டும். சற்று நேரம் நின்ற பிறகு முன் நிலைக்கு எழுந்த பிறகே மூச்சை விட வேண்டும்.
இவ்வாறு 20 முறை செய்ய வேண்டும். மூச்சை இழுக்கும் முக்கியத்துவத்தை அறிவோம் அதனை முறையாக கற்று கொள்ளப் பயிற்சிகளைத் தெரிந்து கொள்ளவேண்டும். மூச்சை இழுத்து விடும் பயிற்சிக்கு மேற்கூறிய பயிற்சிகளை, முன்னே குறிப்பிட்டுள்ள எண்ணிக்கையில் செய்ய வேண்டும். தினந்தோறும் பயிற்சியின் அளவை மிகுதிபடுத்திக் கொண்டே வர வேண்டும்.
ஒரே மூச்சில் எவ்வளவு காற்றை அதிகம் இழுக்கிறோமோ அவ்வளவுக்கு இரத்த ஓட்டம் விரைவு பெரும். உடல் செழுமையும் வனப்பும் பெறும். அழகு மிளிரும்.நிமிர்ந்த மார்பு வாய்க்கும். மார்பகங்கள் செழிப்பாய் இருக்கும் . இடை குறுகும், தோல் அழகிய நிறம் பெறும். கண்கள் ஒளியுடன் திகழும். உடலுக்கு மிகுந்த சக்தி கிட்டும். ஆகவே, பயிற்சியை செய்யும் போது மூச்சை இழுத்துவிட வெளிவிடுகின்ற முறையைச் சரிவரக் கற்றுக் கொள்ள வேண்டும்.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» உடல் ஆரோக்கியம் பெற எளிய உடற்பயிற்சிகள்
» முதுகு வலிக்கு எளிய உடற்பயிற்சிகள்
» உடல் முழுவதிற்குமான எளிய உடற்பயிற்சிகள்
» எளிய உடற்பயிற்சிகள்
» வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய உடற்பயிற்சிகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum