ஆதி சக்தியின் தேவகணங்கள்
Page 1 of 1
ஆதி சக்தியின் தேவகணங்கள்
ஆதி சக்தியின் தேவகணங்கள்
சித்தர்களின் வாக்குப்படி சப்த கன்னியர்கள் என்பவர்கள் ஆதி சக்தியின் தேவகணங்களாய் அவளது கோட்டைக்கு காவல் இருப்பவர்கள். மிக சூட்சுமமாக இருக்கும் இவர்கள் ஏழு பேரும் ஏழுவிதமான அம்சங்களை உடையவர்கள். சித்தர்கள் ஒவ்வொரு விஷயத்தையும் விஞ்ஞானப்பூர்வமாகவே சொல்லி வைத்திருக்கிறார்கள்.
ஆன்மிகம், விஞ்ஞானம், மருத்துவம், ஜோதிடம் இவைகள் ஒன்றை ஒன்று பின்னிப் பிணைந்த விஞ்ஞானப்பூர்வமான சாஸ்திரம். இந்த வகையில் சம்பந்தப்பட்டதுதான் சப்த கன்னியர்கள் வழிபாடும். காளியின் உடலிலிருந்து தோன்றியவர்களே சப்த கன்னியர்.
பிராஹ்மி:
ஆதிசக்தியின் முகத்திலிருந்து உதித்தவள் இவள். பிரம்மனின் அம்சம். உயிர்களின் பிரதானமான மூளையின் செயல்களை ஆளுபவள். கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கும் இவளை மனமுருகி வணங்க வேண்டும்.
மகேஸ்வரி:
இவள் தோள்களிலிருந்து தோன்றியவள். அழிக்க வேண்டியவைகளை அழித்து, காக்க வேண்டியவைகளை காத்து ரட்சிப்பது இவளது குணம்.
கௌமாரி:
இவள் சக்தியின் கால்களிலிருந்து தோன்றியவள். சிவனாலும் சக்தியாலும் அழிக்க முடியாத தீய சக்திகளை அழிப்பதற்கு அவதாரம் எடுத்தவள். சூரனை வென்ற சக்திவேல், அந்த சக்திவேலனின் அம்சமாகத் தோன்றியவள். மண், மனை பிரச்னைகள், வீடு கட்டுதலில் உள்ள தடைகள் நீங்குவதற்கும், செவ்வாய் தோஷம் உள்ளவர்களும் இவளை வணங்கி வழிபாடு செய்தால் அனைத்து பிரச்னைகளும் நீங்கி நலமுடன் வாழ்வார்கள்.
வைஷ்ணவி:
இவள் மகாவிஷ்ணுவின் அம்சமாவாள். மனம் நினைப்பதை செயலாக்குவது கைகள்தான். அதன் அம்சமாக சக்தியின் கைகளில் இருந்து தோன்றியவள். ஊக்கமுடன் செயலில் வெற்றி பெற இவளை வணங்கி வழிபாடு செய்தல் வேண்டும்.
வராஹி:
சக்தியின் பிருஷ்டப் பாகத்திலிருந்து தோன்றியவள். ஏழு பேரிலும் வித்தியாசமான குண முடையவள். இவள் விஷ்ணுவின் ரௌத்ர அம்சமாவாள். தமிழ்நாட்டிலேயே தஞ்சை பெரிய கோயிலில்தான் வராஹிக்கென தனி சந்நதி உள்ளது. ராஜ ராஜ சோழனுக்கு இவளே இஷ்ட தெய்வம்.
இந்திராணி:
உலக உயிர்களின் மகிழ்ச்சிக்கும், உயிர்கள் உருவாகுவதற்கும் காரணமான ஆதிசக்தியின் ஸ்தானத்தில் உதித்தவள். மகாலட்சுமியின் அம்சம். வாழ்க்கையில் கணவன்மனைவி சந்தோஷமாகவும், புத்திர பாக்கியத்தை பெறவும், ஆண்பெண் இருபாலருக்கும் தகுந்த துணையை அடைய இவள் அருள் புரிவாள்.
சாமுண்டி:
சக்தியின் பிரதி அம்சமான இவள் வீரத்தின் விளை நிலம். மாந்தர்களுக்கும், தேவர்களுக்கும் அருள்பவள். மனிதர்கள் தமது வாழ்வில் எந்த ஒரு நல்ல சாதனைகளை நிகழ்த்த வேண்டுமானால் நல்லவனாக இருக்க வேண்டும்; அதோடு வல்லவனாகவும் இருக்க வேண்டும். அந்த வல்லமையை பெறுவதற்கு இவளை போற்றி வணங்குதல் வேண்டும்.
இப்படி மகா சக்தி பொருந்திய சப்த கன்னியர்கள் அருள்மிகு வடிவாம்பிகை சமேத மானேந்தியப்பர் திருக்கோயில் பேசும் குழந்தைகளாக, கன்னியாக, மாதாவாக வடிவம் கொண்டு இங்கு வரும் பக்தர்களின் மனக்குறைகளை நீக்கி, அவர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி, இத்திருக்கோயிலுக்குள் கலகலவென சிரித்து, மகிழ்ந்து கன்னியர்கள் ஏழு பேரும் விளையாடுவதை உண்மையான பக்தி வைத்தால் எல்லோரும் உணர்ந்து கொள்ளலாம்.
சித்தர் முத்துவடுகநாதர் 96வது வயதில் நல்லாங்குளம் வடகரையில் ஜீவ சமாதி ஆகும்போது பல வரங்களை தந்து இன்றும் பல அற்புதங்களை புரிந்து வருபவளும் வராஹி மாதாவே! வேத பூமியாம் கல்லிடைக்குறிச்சியில் வீற்றிருந்து பல சித்து விளையாடல்களை புரிந்து வருகிறாள்.
மாந்தர்கள் வாழ்வில் மட்டும் அல்லாது சிவாலயங்களில் நித்ய பூஜைகள், குறித்த காலத்தில் கும்பாபிஷேகங்கள் தடையில்லாமல் நடப்பதற்கு வராஹி மாதாவின் கருணா கடாட்சம் தேவை. இத்தனைச் சிறப்பு வாய்ந்த வராஹி, பிற்கால பாண்டியர்கள் காலமான 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக அறியப்படும் அருள்மிகு மானேந்தியப்பர் திருக்கோயிலில் சப்த கன்னியர்களில் ஒருத்தியாக வீற்றிருந்து அருளாட்சி செய்து வருகிறாள்.
கல்லிடைக்குறிச்சிக்கு வடக்கே திருவாடுதுறை கிளை மடம் அருகே தாமிரபரணி நதிக்கரையில் தளிர் மான் நகர் (தளச்சேரி) எனும் பசுமை நிறைந்த எழில் சூழ்ந்த இடத்தில் அமைந்துள்ளது மானேந்தியப்பர் திருக்கோயில். இக்கோயில் கிழக்கிலும், மேற்கிலும் இரு பெரிய வாயில்களை கொண்டது. 277 அடி நீளமும், 130 அடி அகலமும் கொண்டது. மதில் சுவர்கள் 12 அடிக்கும் மேல் உயரமான அமைப்பில் அமைந்துள்ளது.
நீள் சதுர வாயிலை தாண்டி உள்ளே சென்றதும் பாண்டியர் காலத்து சிற்ப கலைக்கு சான்றுகளாக அழகிய தெய்வ விக்ரகங்களுடன் கூடிய தூண்களுடன் வசந்த மண்டபம் கலை அழகுடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது. மேல் தளத்தில் இணைக்கயல்கள், ராசி சக்கரங்கள் என பொறிக்கப்பட்டுள்ளன. இங்குதான் நெடிதுயர்ந்த கொடி மரமும், கம்பீரமாக நந்தி தேவனும் வீற்றிருக்கிறார்கள்.
மாடன் தம்பிரான், ஆஞ்சநேயர், நவகிரக சந்நதிகளும் அமைந்துள்ளது. உள் நுழைவாயிலின் இருபுறமும் துவார பாலகர்கள் கம்பீரமாக நிற்கும் காட்சி மனதை கொள்ளை கொள்ளும். உள் வாயிலில் நுழைந்தவுடன் சூரியசந்திரர்களை தரிசித்துவிட்டுச் சென்றவுடன் அன்னை வடிவாம்பிகை நின்ற கோலத்தில் இளம் புன்முறுவலுடன் நம்மை அரவணைப்பதை எழுத்தில் வடிக்க இயலாது.
அதைத் தாண்டி கருவறைக்குச் சென்றால் ஆதி சித்தன் மானேந்தியப்பர் லிங்க சொரூபமாக வீற்றிருந்து உலக உயிர்களை ரட்சிக்கிறார். கருவறைக்கு தென்புறத்தில் ஈசன் தட்சிணாமூர்த்தி கோலம் கொண்டு ஞான வரம் நல்குகிறார்.
ஜெனன ஜாதகத்தில் வியாழ கிரகம் பாதிப்பு அடைந்தவர்கள் இங்கு வந்து குரு வந்தனம் செய்து நலமுடன் வாழ்ந்து வருகிறார்கள் தட்சிணாமூர்த்திக்கு எதிர் திசையில் நால்வரும், அகஸ்தியரோடு புலவர்களும், 63 நாயன்மார்களும், கன்னி மூலையில் கணபதியும், ஆதி சித்தரும் அரவணைக்க சப்த கன்னியர்கள் ஏழு பேரும் வீற்றிருந்து அருளாட்சி செய்து வருகிறார்கள்.
மேற்குபுறத்தில் சாஸ்தாவும், வள்ளி தெய்வானையுடன் முருகப் பெருமானும், வடபுறம் சனீஸ்வர பகவானும், சண்டிகேஸ்வரரும் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள். அனைவரையும் வணங்கி அருள் பெற்று திரும்பும்போது இடதுபுறம் கால பைரவர் நமக்கு வேண்டும் வரம் தருகிறார்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» ஆதி சக்தியின் தேவகணங்கள்
» ஆதி சக்தியின் தேவகணங்கள்
» சக்தியின் SET விரிவுரையாளர்
» சக்தியின் அம்சமான விநாயகர் இங்கு சிவனின் ஆவுடை மீது வலது கையில் ஒடிந்த தந்தத்துடனும் இடது கையில் கொழுக்கட்டையுடனும் ஈசனின் திசையான ஈசான்யத்தை (வடகிழக்கு) நோக்கி அருள் பொழிகிறார். தனது பாதத்தில் சரணடைந்தால் அனைத்திலும் வெற்றி உண்டாகும் என்பதற்கேற்ப இடது பா
» சக்தியின் பாதம் சரணடைவோம்
» ஆதி சக்தியின் தேவகணங்கள்
» சக்தியின் SET விரிவுரையாளர்
» சக்தியின் அம்சமான விநாயகர் இங்கு சிவனின் ஆவுடை மீது வலது கையில் ஒடிந்த தந்தத்துடனும் இடது கையில் கொழுக்கட்டையுடனும் ஈசனின் திசையான ஈசான்யத்தை (வடகிழக்கு) நோக்கி அருள் பொழிகிறார். தனது பாதத்தில் சரணடைந்தால் அனைத்திலும் வெற்றி உண்டாகும் என்பதற்கேற்ப இடது பா
» சக்தியின் பாதம் சரணடைவோம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum