தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர்

Go down

திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் Empty திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர்

Post  amma Sat Jan 12, 2013 1:30 pm

மயிலாடுதுறை நகரில் காவிரி நதியின் வடகரையில் ஒரு பகுதியாக அமைந்துள்ளது திருவிழந்தூர். இதன் புராணப் பெயர் - திருஇந்தளூர்.இங்கு பரிமளரங்கநாதர் திருக் கோவில் அமைந்துள்ளது. கன்னித் தமிழ்பாடி இறைவனை வாழ்த்திய ஆழ்வார்கள் பலர் வாழ்ந்த தமிழ்த்திருநாட்டில் கங்கையிற் புனிதமாகிய காவிரி கரையிலமைந்த வைணவத் தலங்கள் பலவற்றுள் 5 அரங்கங்கள் மிகவும் தொன்மை வாய்ந்தன.

அவைகள் முறையே திருவரங்கப்பட்டினம் (மைசூரில் உள்ளது), திருவரங்கம் (ஸ்ரீரங்கம்), அப்பாலரங்கம் (கோயிலடி, திருக்காட்டுப் பள்ளி அருகில் உள்ளது) கும்பகோணம் மத்தியரங்கம், திருஇந்தளூர் பரிமளரங்கம் என்பன. திருஇந்தளூர் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். பாஞ்சராத்திர ஆகமத்தை சேர்ந்தது. ஆழ்வார்களின் அருளிச் செயல்களிலும் இவ்வூருக்கு திருவிந்தளூர் (திருஇந்தளூர்) என்று பெயர்.

இத்தலம் சுற்றிலும் நறுமணம் வீசும் புஷ்பக்காடுகள் நிறைந்திருந்ததால் சுகந்தவனம் என்ற பெயரும் உண்டு. இந்து என்ற சொல் இந்திரனைக் குறிக்கும். தட்சனின் சாபத்தால் சந்திரனுக்கு கொடிய ஷயரோகம் தோன்றவே, அவன் இவ்வூரை அடைந்து இத்தலத்து எம்பெருமானின் அருளால் நோய் நீங்கப் பெற்றான்.

அதன் நினைவாக இந்த ஊருக்கு இந்துபுரி என்றும், தான் தவம் புரிந்த திருக்குளத்தை இந்து புஷ்பகரணி என்றும் வழங்குமாறு இறைவனிடம் வேண்டியுள்ளதால் இப்பெயர்கள் அமைந்துள்ளன. பிரம்ம தேவனால் வெளியிடப்பட்ட வேதங்களை மதுகைடபர்கள் என்னும் அரக்கர்கள் அபகரித்துப் போக, பிரும்மா மிகவும் வருந்தி எம்பெருமானை வேண்டியுள்ளதால் பெருமாள் அவ் வேதங்களை அரக்கர்களிடமிருந்து மீட்டு வேதங்களுக்கு பரிமளத்தை கொடுத்தமையால் இறைவன் பரிமள ரங்கநாதன் என்று அழைக்க பெறுகிறார்.

மூலத்தான விமானம் வேதாமோத விமானம், அம்பரீஷ மகாராஜன் என்ற மன்னன் இப்பெருமானுக்கு கோவில் கட்டினார் என்றும், வைகாசி மாதத்தில் தேர்திருவிழா பிரம்மோத்சவம் செய்து வைத்தார் என்றும் கூறப்படுகிறது. சந்திரன் பங்குனி மாதம் எம்பெருமானுக்கு பிரம்மேத்சவம் செய்தபடியால் இன்றும் பங்குனியில் பிரமோத்சவம் நடைபெறுகிறது.

துலாம் (ஐப்பசி) மாதத்தில் காவிரியில் நீராடினால் கங்கையை விட அதிகப் புண்ணியம் வாய்ந்தது என வரலாறு கூறுகிறது. இதன் காரணமாகவே துலாம் பிரமோத்சவம் நடைபெறுகிறது. திருமங்கைமன்னன் தன் குழுவினருடன் பெருமாளை தரிசிக்க வந்தான். அப்போது சன்னதி கதவுகள் திறக்கப்படவில்லை. பெருமாளும் அவருக்கு காட்சியளிக்கவில்லை. ஆழ்வார் எவ்வளவு வேண்டியும் பெருமாள் முகம் கொடுக்கவில்லை.

இதனால் ஆழ்வார் மிகவும் வருந்த என் போன்ற அடியார்களுக்கல்லவோ நீர் இங்கு கோவில் கொண்டுள்ளீர். அப்படியிருக்க நீர் எங்களுக்கு காட்சி கொடாமலிருப்பது அறுக்காது. நீரே நும் அழமைக கண்டு வாழ்ந்துபோம் என்று மிதமிஞ்சிய பக்தியினால் பாடியுள்ளார். (இதை நிந்தா ஸ்துதி என்பர்). இதன் பின் பெருமாள் காட்சி கொடுத்தார். திருமங்கையாழ்வார் அருளிச் செய்த 9 -ம் திருமொழியின் திருவந்தளூர் பாசுரங்கள் பத்தில் விவரமாக காணலாம்.

`பச்சைமாமலை போல் மேனி- பவளவாய் கமலச் செங்கன்
அச்சுதா அமரரேறே, ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர இந்திரலோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன், அரங்கமாநகருளானே
என்ற தொண்டரடிப்பொடி ஆழ்வார் வாக்குக்கிணங்க

பரிமள ரங்கநாதர் பச்சைத் திருமேனியுடன் 4 திருக்கைகளுடனும் வீரசயனமாக காட்சி அளித்து கொண்டிருக்கிறார். இறைவனது திருமேனி மிகவும் நுணுக்கமான வேலைப்பாடுகள் நிறைந்த பச்சை மரகதத் திருமேனியாக காண்போர் கண்ணையும், கருத்தையும் கவருவதாக அமைந்துள்ளது.

இறைவனது திருமேனி அழகை மறைத்திருந்த தைலக்காப்பு நீக்கப்பெற்று இன்ன வண்ணமென்று காட்டீர் இந்தருளூரிரோ என்று திருமங்கை மன்னன் அன்று பாடிய பாசுரத்திற்கு இன்று தன் திருமேனி அழகை எல்லோரும் கண்டு வணங்கி வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க போயப்பிழையும் நின்றனவும் தீயில் தூசாக அருள் பாலிக்கிறார். இத்தலம் சுற்றிலும் நறுமணம் வீசும் புஷ்பக்காடுகள் நிறைந்திருந்ததால் இவற்றின் நறுமணம் வீசப் பெற்ற பெருமாள் சுகந்தவன நாதர் என்று மற்றோர் பெயரும் பெருமாளுக்கு உண்டு.

மூலஸ்தான பரமள ரங்கநாதரின் முகாரவிந்தத்தில் சூரியனாலும் பாதாரவிந்தத்தில் சந்திரனாலும், நாபிக்கமலத்தில் பிரம்மாவினாலும் பூஜிக்கப்படுகிறார்கள். தென் புறத்தில் காவிரி தாயாரும், வட புறத்தில் கங்கை தாயாரும் ஆராதிக்கிறார்கள். இமயனும், அம்பரிஷனும் எம்பெருமாள் திருவடிகளை அர்ச்சிக்கின்றனர். உத்சவப் பெருமாள் உபய நாச்சியாருடன் சீரிய சிம்மாசனத்தில் எழுந்தருளி காட்சி கொடுத்து கொண்டிருக்கிறார்.

அவர் அருகிலுள்ள உத்சவ கண்ணன் நம் மனதை கவர்கிறான். குழந்தை பேறு இல்லாத பெண்கள் சந்தான கோபாலனை தம் மடியில் எழுந்தருளப் பண்ணி கொண்டால் புத்திரப் பேறு அடைவர். தாயாருக்கு தனி சன்னதி உள்ளது. தாயாரின் திருப்பெயர்கள்- ஸ்ரீபரிமளரங்கநாயகி, -சுகந்தவன நாயகி, புண்டரீகவல்லி, ஸ்ரீசந்திர சாபவிமோசன வல்லி. பரிமள ரங்கநாதரின் தெற்கு பக்கத்தில் சக்கரத்தாழ்வாருக்கு தனி சன்னதி உள்ளது. ஆஞ்சநேயருக்கு தனியாக சன்னதி உள்ளது.

மிகுந்த வரப்பிரசாதி சன்னதி வெளியில் கீழ வீதியில் தனது பக்தர்களுக்கு வேண்டுவனவற்றை வேண்டியபடி அளிக்கவல்ல வள்ளல் கடல் கடந்து சீதாப்பிராட்டியாரை கண்டு ராமனது துயர் நீக்கிய மகாவீரனான இவர் தன்னை அன்டினோரின் துயர் தீர அருள் புரிகிறார். இவருக்கு திருமஞ்ச மனம் இல்லாத நாளே இல்லை.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum