தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடைபயிற்சி

Go down

நடைபயிற்சி Empty நடைபயிற்சி

Post  amma Thu Jan 31, 2013 4:18 pm



நடைபயிற்சி எல்லா வயதினருக்கும் ஏற்ற ஒன்றாகும். நடைபயிற்சியை பழக்கமாக்கிக் கொள்வதால் ரத்த ஓட்டமானது சீராகிறது. நுரையீரல் சுவாசம் சீராகிறது.செரிமாணக் கோளாறு சீராகிறது. உடலை வலுப்படுத்துகிறது. நடைபயிற்சி என்பது நான்கு மணிநேரம் நீந்துவதற்கும், நான்கு மணிநேரம் டென்னிஸ் விளையாடுவதற்கு சமமாகும.

ஒவ்வொரு முறையும் படிகளைப் பயன்படுத்தி ஏறி, இறங்குவதாலும், வீட்டை சுத்தப்படுத்தல், விளையாட்டுமைதானத்தில் குழந்தைகளுடன் விளையாடல், மூலமாக நடைபயிற்சியின் தேவையை சமன் செய்து கொள்ளாலாம். நடைபயிற்சியின் போது உடலிலுள்ள எல்லாத் தசைதொகுதிகளும் இயங்குவதால் உடலுக்கு அதிகமான ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது.

இதனால் மூச்சை சற்று அதிகப்படுத்துகிறோம். இரத்த சுழற்சியும் உடலின் எல்லா பாகங்களுக்கும் இயக்கத்தை அதிகபடுத்தி பின் சம நிலைக்கு வருகிறது. தொடர்ந்து நடைபயிற்சி செய்வதால் உடலில் தேவைக்கதிகமான எடை குறைகிறது.உடலிலுள்ள மூட்டுகளை பலப்படுத்துகிறது.

இதயம், நுரையீரல் ஆகியவற்றின் இயக்கம் சீராக்குகிறது. முதுமைஅடைந் தவர்கள் கூட ஆரோக்கியமாக தங்களின் இயல்பான வேலைகளைச் செய்துகொள்ளும் அளவு சக்தி கூடுதலாகும்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum