தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எடையைக் குறைக்க உதவும் உடற்பயிற்சி

Go down

எடையைக் குறைக்க உதவும் உடற்பயிற்சி Empty எடையைக் குறைக்க உதவும் உடற்பயிற்சி

Post  amma Thu Jan 31, 2013 2:21 pm


உடல் ஆரோக்கியமாக இருக்க உதவும் முக்கியமான விஷயங்களைப் பட்டியலிடுங்கள் என்றால் அந்தப் பட்டியலின் முதன்மையான இடத்தில் உடற்பயிற்சி என்பது இருக்கும். பல நோய்களில் இருந்து நம்மைக் காக்கும் பாதுகாப்பு அரண்களாக உடற்பயிற்சிகள் அமைகின்றன.

சர்க்கரை நோய், உயர் குருதி அழுத்தம், கொலஸ்ட்ரோல் பிரச்சினை, தொந்தி வளர்ச்சி போன்றவற்றை கட்டுப்படுத்த முறையான உடற்பயிற்சியின்றியும் முறையான உணவு பழக்கமும் உதவும். தினமும் நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள். தினமும் 10,000 அடிகளை நடைபயிற்சி செய்ய வேண்டும் என்று நோக்கமாகக் கொள்ளுங்கள்.

ஜிம்மிற்கு செல்லும் முன் திரவ உணவுகளை மட்டும் உட்கொள்ளுங்கள். நிறைய தண்ணீர் அல்லது பழச்சாறு அருந்தலாம். ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது அதிக நேரம் செய்யாதீர்கள். உடற்பயிற்சிகளுக்கிடையில் சிறிது ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். உங்களது Heart Rate என்னவோ அதனை கட்டுக்குள் வைத்திருங்கள்.

heart rate கணக்கிட தெரியவில்லையா?.இதோ இவ்வாறு கணக்கிடலாம். 6 நொடிக்கு இதயம் எவ்வளவு முறை துடித்ததோ அதனை 10 ஆல் பெருக்குங்கள்! உங்கள் இதயத்துடிப்பு அளந்துவிடலாம். பெரும்பாலான மருத்துவர்கள் உபயோகிக்கும் முறை இது தான்! உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது உங்களுக்கு நேரம், போக உங்களுக்கு பிடித்த பாடல்களைக் கேளுங்கள்.

உங்களுக்கு பிடித்த நண்பர்களுடன் உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள். உங்களுக்கு பிடித்த சுவாரஸ்யமான உடற்பயிற்சிகள் செய்யலாம். உதாரணத்திற்கு Tread Mill, Cross Trainer, Biking, Cycling, Walking போன்றவை!
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum