பாகற்காய் வெல்ல பச்சடி
Page 1 of 1
பாகற்காய் வெல்ல பச்சடி
தேவையானப் பொருட்கள்:
பாகற்காய் - 2
புளி - ஒரு சிறு எலுமிச்சம்பழ அளவு
தக்காளி - 2
வெல்லம் - 1/2 கப் (பொடி செய்தது)
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவைக்கேற்றவாறு
செய்முறை:
* புளியைத் தண்ணீரில் ஊறவைத்து, கெட்டியாகக் கரைத்து ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும்.
* தக்காளியை நன்றாக கழுவிய பின் அரைத்துக் கொள்ளவும்.
* பாகற்காயை கழுவி விதைகளை நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
* நறுக்கியத் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு, 1/2 கப் தண்ணீரை விட்டு நன்கு வேக விடவும். வெந்தவுடன், அதில் புளித்தண்ணீர், தக்காளிச்சாறு, மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாகக் கிளறி, மூடி வைத்து, கொதிக்க விடவும்.
* ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானவுடன், கடுகு, சீரகம், வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை, தாளித்து, அதில் கொதிக்கும் பாகற்காய் கலவையைக் கொட்டி கலக்கவும்.
* பின்னர் கடைசியாக வெல்லப் பொடியைச் சேர்த்துக் கிளறி விட்டு, சிறு தீயில் வைக்கவும். வெல்லம் கரைந்து, பச்சடி திக்கானவுடன், இறக்கி பரிமாறவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பாகற்காய் பச்சடி
» பாகற்காய் பச்சடி
» பாகற்காய் பச்சடி சாப்பிட்டுப் பாருங்க
» கோடை காலத்திற்கேற்ற சத்தான பச்சடி முள்ளங்கி பச்சடி
» வெல்ல அடை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum