உடற்பயிற்சி அவசியமா.....?
Page 1 of 1
உடற்பயிற்சி அவசியமா.....?
உடற்பயிற்சி செய்வது ஒன்றே, ஆரோக்கியத்திற்கான சிறந்த வழி. சிறு வயது முதலே, நடைபயிற்சியை துவங்க வேண்டும். உடலில் சக்தியும், ஆரோக்கியமும் இருந்தால் தான், வாழ்க்கையை நல்ல முறையில் அனுபவிக்க முடியும். இந்த இரண்டு விஷயங்களையும் பணம் கொடுத்து வாங்க முடியாது.
வீட்டுக்கு வெளியில் நடைபயிற்சி துவக்குங்கள். உணவு சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு நடக்கலாம். முதலில் 15 நிமிடம்; பின், மேலும் 10 நிமிடத்தை கூட்டிக் கொள்ளுங்கள். பின், மெதுவாக ஒரு மணி நேரம் நடக்க துவங்குங்கள். தினமும் 4 – 5 கி.மீ., நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள். பின், மெதுவான ஓட்டத்தை துவக்கலாம். வாய் திறந்து பேச முடியாத அளவுக்கு, உங்கள் வேகத்தைக் கூட்டிக் கொள்ளலாம்.
பின், மெதுவாக 10 நிமிடம் நடை; மீண்டும் ஓட்டம். இது போன்று ஒவ்வொரு இரண்டு வாரத்திற்கும் செய்து கொள்ளுங்கள். வாரத்திற்கு 3 – 4 நாட்களும், நாள் ஒன்றுக்கு ஒரு மணி நேரமும் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். செருப்பைப் போட்டு நடைபயிற்சி செய்ய கூடாது. காலுக்கேற்ற ஷூ அணிந்து நடக்க வேண்டும்.
தினமும் இரண்டு வேளை நடைபயிற்சி மேற்கொண்டால், ஆரோக்கியம் இன்னும் நல்ல முறையில் செழிக்கும். ஓட்டப் பயிற்சியின் போது பெறும் ஆரோக்கியம் இதில் கிடைக்காது எனினும், உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தைப் பேணலாம். நடை பயிற்சியோ, ஓட்டப் பயிற்சியோ, அதற்கேற்ற சரியான உடையை அணிவதும் அவசியம்.
தசையை பலப்படுத்தும் உடற்பயிற்சிகளும் செய்தால், மூட்டு இணைப்புகள் உட்பட பல உறுப்புகள் நல்ல நிலையில் இயங்கும். ஓட்டப் பயிற்சி, நடைபயிற்சி ஆகியவை இடுப்பு சதையைக் குறைக்கவும், ஒட்டுமொத்த உடல் எடையைக் குறைக்கவும் உதவும். இடுப்பு வளைவை சீராக்கி, ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு, இருதய நோய், நீரிழிவு, புற்றுநோய், பக்கவாதம், எலும்பு முறிவு, மனநலம் பாதித்தல் ஆகியவை ஏற்படாமல் தவிர்க்கப்படுகிறது. மன அழுத்தம், தூக்கமின்மையும் பிரச்சனை வராது. குழந்தைகயை மூன்றாம் வகுப்புப் படிக்கும் போதே, தினமும் அரை மணி நேரம் ஓட்டப் பயிற்சி செய்ய வைப்பது மிகவும் அவசியம். உடலுக்கும் மிக நல்லது.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» மாய்ச்சரைசர்கள் அவசியமா?
» நடைப்பயிற்சி அவசியமா?
» ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி
» தங்க நகை அணிவது அவசியமா?
» படிக்கும் பருவத்தில் பாய்ஃபிரண்ட் அவசியமா?
» நடைப்பயிற்சி அவசியமா?
» ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி
» தங்க நகை அணிவது அவசியமா?
» படிக்கும் பருவத்தில் பாய்ஃபிரண்ட் அவசியமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum