தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மணத்தக்காளி கீரைக்கழனி

Go down

மணத்தக்காளி கீரைக்கழனி Empty மணத்தக்காளி கீரைக்கழனி

Post  meenu Thu Jan 31, 2013 12:56 pm

உடல் உஷ்ணத்தைத் தணிக்க மணத்தக்காளி கீரைக்கு நிகர் வேறெதுவும் இல்லை எனலாம். கிராமப்புறங்களில் இன்றும் கூட வயிற்றுப்புண், வாய்ப்புண், உடல் உஷ்ணம் போன்றவற்றிற்கு இந்தக் கீரையை கழனி செய்து சாப்பிடுகிறார்கள்.

தேவையான பொருட்கள்.....

மணத்தக்காளி கீரை - ஆய்ந்தது 2 கப்
சின்ன வெங்காயம் - 50 கிராம்
பச்சை மிளகாய் - 3
பூண்டு - 6 பல்
சீரகம் - 1 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 1/2 கப்
அரிசி கழனி - 4 கப்
உப்பு - தேவையான அளவு

செய்முறை....

* தேங்காயுடன் சீரகம் சேர்த்து மிக்சியில் நைசாக அரைக்கவும். கீரையை ஆய்ந்து கொள்ளவும்.

* சின்ன வெங்காயம், பூண்டு இரண்டையும் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறிக்கொள்ளவும்.

* கீரை, வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாயுடன், அரிசி கழுவிய கழனி சேர்த்து மூடி போட்டு கீரை குழையுமாறு நன்கு வேக விடவும்.

* வெந்ததும், அரைத்த தேங்காய், சீரகம் சேர்த்து இது உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும். சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum