தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நிவேதனம் பலன்கள்

Go down

நிவேதனம் பலன்கள் Empty நிவேதனம் பலன்கள்

Post  amma Sat Jan 12, 2013 1:07 pm



பிராம்மி, மகேஸ்வரி, நாராயணி, வராகி, ருத்திராணி, கெஜமாரி, சாமுண்டா என்ற ஏழு தேவியரே, "சப்த மாதர்கள்' என அழைக்கப்படுகின்றனர். பிராம்மி, சருமத்தின் தலைவி. இவளுக்கு அபராதம் செய்தால் தோல் சம்பந்தமான நோய் நீங்கும். பிராம்மி, மகேஸ்வரி, நாராயணி, வராகி, ருத்திராணி, கெஜமாரி, சாமுண்டா என்ற ஏழு தேவியரே, "சப்த மாதர்கள்' என அழைக்கப்படுகின்றனர்.

பிராம்மி, சருமத்தின் தலைவி. இவளுக்கு அபராதம் செய்தால் தோல் சம்பந்தமான நோய்கள் வரும். இவள் பிரம்மனின் படைப்புத் தொழிலுக்குத் துணை நிற்பவள். இவள் தனது கரங்களில் அபய, ஹஸ்த முத்திரைகளுடன் தண்டம், கமண்டலம், அக்கமாலை மற்றும் எழுத்தாணியுடன் காட்சி தருகின்றாள்.

புட்டும், சர்க்கரைப்பாகும் நிவேதனம் செய்து ஏழைகளுக்கு விநியோகம் செய்தால் பிராம்மி அன்னை சாந்தம் அடைவாள். மகேஸ்வரி, உடலிலுள்ள கொழுப்புச் சக்திக்குத் தலைவி. இவளுக்கு ஐந்து திருமுகங்கள். நாகப் பாம்புகளை வளையல்களாக அணிந்தவள். வரத, அபய முத்திரைகளுடன்சூலம், மணி, பரசு, டமருகம், கபாலம், பாசம், அக்கமாலை, அங்குசம் தரித்தவள்.

இவள் சினங்கொண்டால் வெட்டுக்காயம் ஏற்படும். சுண்டலையும், நீர்மோரையும் இவளுக்கு நிவேதனம் செய்து, ஏழைகளுக்கு அளித்தால் இந்தத் தேவியின் மனம் குளிரும். நாராயணி, சீழுக்குத் தேவதை. இவள் சினமுற்றால் விஷக்கடிக்கு ஆளாக நேரிடும். அனைத்து உலகங்களையும் பரிபாலனம் செய்ய திருமாலுக்கு உதவியாய் இருப்பவள் நாராயணி. தனது கரங்களில் சங்கு, சக்கரம், அம்பு, வில், கத்தி, கதை ஏந்துபவள்.

அபய, வரத முத்திரைகளுடன் திகழ்பவள். இந்தத் தேவிக்கு பாயசம் நிவேதனம் செய்து பாலகர்களுக்குக் கொடுத்தால் திருவருள் கிடைக்கும். வராகி, எலும்புகளின் அதிதேவதை. இவள் சினமுற்றால் வாதமும், பித்தமும் ஏற்படும். மேக நிறம் கொண்டவள். அபய, வரத முத்திரைகளுடன், உலக்கை, கேடயம், வாள், கலப்பை, சங்கு, சக்கரம் ஆகியவற்றுடன் காட்சி தருபவள்.

வெள்ளரிக்காயும், முறுக்கும் நிவேதனம் செய்து பக்தர்களுக்கு விநியோகம் செய்தால் நல்ல பலனைத் தருவாள் வராகி. ருத்திராணி, தசைகளின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் தேவதை. இவள் இந்திரனின் சக்தி. வெள்ளை யானையை தன் வாகனமாகக் கொண்டவள். இவள் சினம் கொண்டால் அம்மை நோய் பெருகும். பலாக்களை நிவேதனம் செய்து, இந்தத் தேவியின் அருளைப் பெறலாம்.

கெஜமாரி, ரத்தத்தின் அதி தேவதை. முருகனின் சக்தி எனப் போற்றப்படுபவள். தேவசேனாவும் வள்ளியும் கெஜமாரியின் உருவங்களே என்பர். ஆறுமுகங்களை உடைய இந்தத் தேவிக்கு அபராதம் செய்தால் பசுக்களுக்கு "கோமாரி' என்ற வியாதி வரும். எலுமிச்சை சாதம் படைத்து விநியோகம் செய்தால் கௌமாரியின் அருள் கிட்டும்;

நோய் தீரும். சாமுண்டா தேவி, நரம்பின் தலைவி. பராசக்தியின் உடம்பிலிருந்து தோன்றிய ஆறு தேவிகளால் அரக்கன் மகிஷாசுரனை அடக்க முடியவில்லை. அப்போது சிவபெருமான் தன் நெற்றிக் கண்ணிலிருந்து காளியை தோற்றுவித்தார். அந்த பத்ரகாளி சாமுண்டியாக மாறினாள்.

இந்த ஆறு தேவிகளுக்கும் தலைமை ஏற்ற காளி என்னும் சாமுண்டா தேவி, மகிஷாசுரனை வதம் செய்தாள். இவள் சினம் கொண்டால் ஊரில் கலகம் விளையும். இறைவிக்கு தயிர் அபிஷேகம் செய்து, அவலில் தயாரித்த தின்பண்டங்களை நிவேதனம் செய்தால் தேவியின் திருவருள் கிட்டும்.

இந்த சப்த மாதர்களுக்கும் பல்வேறு தலங்களில் சந்நிதிகள் உள்ளன. ஆங்காங்கே வடிவங்களும், ஆயுதங்களும் மாறுபாடுகளோடும் காணப்படுகின்றன. கிராம தேவதைகளாகவும் "சப்த மாதர்கள்' பிரதான இடம் பெறுகின்றனர். *
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum