தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தக்காளி சாதம்

Go down

தக்காளி சாதம் Empty தக்காளி சாதம்

Post  meenu Wed Jan 30, 2013 6:19 pm



தேவையானவை....

பாஸ்மதி அரிசி - 2 டம்ளர்
தக்காளி - கால் கிலோ
வெங்காயம் - 2
பூண்டு - 10 பல்
இஞ்சி - ஒரு சிறு துண்டு
நெய் - 2 ஸ்பூன்
புதினா - கைப்பிடி அளவு
கொத்தமல்லி - கைப்பிடி அளவு
பட்டை கிராம்பு ஏலக்காய் - தேவையான அளவு

செய்முறை....

* மீடியம் சைஸ் குக்கரில் நெய்யை ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் போட்டு வெடிக்க விடவும்.

* இஞ்சி, பூண்டு இரண்டையும் தட்டி வைத்துக் கொள்ளவும்.

* நீளவாக்கில் வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.

* தக்காளியை நறுக்கி தனியே வைத்துக் கொள்ளவும்.

* புதினா, மல்லியை சுத்தம் செய்து கொள்ளவும்.

* பட்டை கிராம்பு வெடித்ததும் வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு, புதினா, மல்லி எல்லாவற்றையும் போட்டு வதக்கவும்.

* பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்.

* இத்துடன் அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள், கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்க்கவும்.

* தண்ணீர் 4 கப் அளந்து குக்கரில் விட்டு தாளித்த சாமான்களுடன் அரிசியையும் போட்டு உப்பு சேர்த்து நன்றாக கிளறிவிடவும்.

* குக்கரை மூடி ஆவி வந்ததும் வெயிட் போட்டு 2 சத்தம் வந்ததும் எடுத்து விடவும்.

* சூடான தக்காளி சாதம் ரெடி. இறக்கி வைத்து பதினைந்து நிமிடங்கள் கழித்தே குக்கரை திறக்கவும்.

* வெங்காய தயிர் பச்சடியுடன் பரிமாறலாம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum