தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பசலைக் கீரை சப்ஜி

Go down

பசலைக் கீரை சப்ஜி Empty பசலைக் கீரை சப்ஜி

Post  meenu Wed Jan 30, 2013 5:19 pm

தேவையான பொருட்கள்:

பசலைக்கீரை - 2 கட்டு
வெங்காயம் - 2
பட்டாணி - 1/2 கிலோ
இஞ்சிபூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 6
கொத்தமல்லி - 1/2 கட்டு
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
தக்காளி - 3
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் வெங்காயம், கீரை மற்றும் தக்காளியை நன்கு கழுவி சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.

• கொத்தமல்லி மற்றும் பச்சை மிளகாயை மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.

• ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நீரை விட்டு, பட்டாணியை போட்டு நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.

• பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், தக்காளி, இஞ்சிபூண்டு விழுது ஆகியவற்றை போட்டு வதக்கவும். பின் அதில் அரைத்த கலவையை சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்கவும்.

* பின் அதில் மஞ்சள்தூள், உப்பு, வேக வைத்த பட்டாணி மற்றும் நறுக்கிய கீரையை அத்துடன் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து நன்றாக வேகும் வரை வேக விடவும். கீரையானது நன்கு வெந்தவுடன் அதனை இறக்கி வைக்கவும்.

இப்போது சுவையான ஆரோக்கியமான கீரை சப்ஜி ரெடி!!!
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum