தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தூய பாரதமே நமது லட்சியம்

Go down

தூய பாரதமே நமது லட்சியம் Empty தூய பாரதமே நமது லட்சியம்

Post  amma Sat Jan 12, 2013 12:25 pm



மாநில அரசுகள் மற்றும் பிறதொண்டு நிறுவனங்களின் உதவியும்
ஒத்துழைப்பும் நமக்குக் கிடைக்குமானால் பாரதத்தில் உள்ள எல்லா பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களையும் தூய்மைப் படுத்தும் பொறுப்பை நமது மடம் ஏற்கத் தயாராக இருப்பதாக அம்மா கூறினார். “பாரதம் வளரும் நாடாகும்.அதன் வளர்ச்சி பல்வேறு துறைகளிலும் விரிவடைந்து கொண்டே இருக்கிறது ” என்று கூறுகின்றனர். “ஆனால் சுற்றுப்புறத் தூய்மை மற்றும் சுகாதாரம் போன்ற விஷயங்களில் நாம் இன்னும் பின்தங்கிய நிலையில் தான் உள்ளோம். நமது நாட்டில் உள்ள தூய்மை அற்ற சாலைகளும் அசுத்தமான பொதுக் கழிவறைகளும் இதை நிரூபிக்கின்றன” என்று அம்மா கூறினார்.

“வெளிநாடுகளில் பெரும்பாலும் சாலைகள்,பொதுக் கழிப்பறை மற்றும் குளியலறைகள் முதலியவற்றை அங்குள்ள மக்கள் தூய்மையாகப் பராமரிக்கின்றனர். அதை அம்மா காணும்போது இங்கு உள்ள சுற்றுப்புறத் தூய்மைக்குறைபாட்டை எண்ணி மனம் வருந்துவது உண்டு. தெருவோரத்தில் சிறுநீர் கழிப்பதும் பொது இடங்களிலும் நடைபாதைகளிலும் எச்சில் துப்புவதும் இன்றும் நம் மக்களின் பழக்கமாக இருந்து வருகிறது. சாலை ஓரங்களில் குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தாலும் குப்பை கூளங்களை யும் உணவுக் கழிவுகளையும் அதில் இடும் பழக்கம் நமக்கு இல்லை. குப்பையை வழியிலோ அல்லது நடுரோட்டிலோ வீசி எறிவோம். சுற்றுப்புறச் சுத்தமும் சுகாதாரமும் ஒரு நாட்டின் வளர்ச்சி மற்றும் பண்பாட்டின் அம்சங்களாகும். இதை நடைமுறைப்படுத்து வதற்கு மக்களிடையே சுகாதார விழிப்புணர்வு தரும் கலை நிகழ்ச்சிகளை நடத்தவேண்டும். பொது இடங்களிலும் பேருந்து நிலையங்களிலும் சாலை ஓரங்களிலும் சுற்றுப்புறத் தூய்மையைக் குறித்த அறிவிப்புப் பலகைகளைத் தேவையான அளவு வைக்க வேண்டும். பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி போன்ற ஊடகங்களின் மனமுவந்த ஒத்துழைப்பும் உதவியும் இதனது வெற்றிக்கு அவசியமாகும்” என்று அம்மா கூறினார். மாநில அரசுகளும் பள்ளி நிர்வாகங்களும் பொதுமக்களும் இணைந்து ஒத்துழைத்தால் பள்ளிகளிலும் பொது இடங்களிலும் பொதுக் கழிவறைகள் கட்ட மாதா அமிர்தானந்தமயி மடம் தயார் என அம்மாஅறிவித்தார். இத்திட்டத்திற்கான வரைபடம், செயல்திட்டம் தயாரிக்கப்பட்டு மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் செயல்படுத்தப்படும். முதலில் இத்திட்டம் கேரளாவில் தொடங்கப்படும். பின்னர் அது படிப்படியாக மற்ற மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது.

இதைக்குறித்து விரிவாக அறிய Amala Bharatam எனும் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அமலபாரதத் திட்டத்தின் ( Amala Bharatham Campaign — ABC) சேவைப்பணிகள் தொடங்கி விட்டன. அதைப் பற்றிய விரிவான விளக்கங்கள்,செய்திகள் மற்றும் புகைப்படங்கள் காணுவதற்கு……..
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum