ஆரோக்கியம் தரும் யோகாசனம்
Page 1 of 1
ஆரோக்கியம் தரும் யோகாசனம்
எமது உள மற்றும் உடல் ஆரோக்கியமாக பேணுவதற்கு மிகச் சிறந்த வழியாக யோகா பயிற்சி காணப்படுகிறது. இரத்த அழுத்தம், பெண்களுக்கான மாதவிடாய் பிரச்சனைகள், இடுப்பு வலி போன்ற உடல்நலக் கோளாறுகளை தவிர்க்கும் வல்லமை யோகாப் பயிற்சிக்கு உண்டு.
ஆனால் நாமாகவே கற்றுகொண்டு அதை செய்வது முறையல்ல சிறந்த யோகப் பயிற்சி ஆசிரியரையே அணுக வேண்டும். எந்த வயதினருக்கும், எப்போதும் செய்ய முடிகின்ற யோகாசனம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கிறது.
யோகாசனத்தை தினமும் காலையில் செய்வதுதான் சிறந்தது. சுத்தக் காற்று தாராளமாக கிடைக்கின்ற அறையில்தான் யோகா செய்ய வேண்டும். ஆகாரம் ஏதேனும் அருந்தாது வெறும் வயிற்றில்தான் யோகாப் பயிற்சி செய்ய வேண்டும்.
யோகாப் பயிற்சிக்குப் பிறகு ஐந்து நிமிடம் எதுவும் செய்யாமல் மல்லாந்து கிடந்து தேகத்துக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். உணவு கட்டுப்பாடு! எல்லா நாட்களும் யோகாசனத்தைச் செய்வது மட்டுமின்றி, உணவிலும் கவனம் செலுத்துவதே ஆரோக்கியத்துக்கு நன்மை. சைவ உணவை உட்கொள்வதே சாலச் சிறந்தது என்று யோகா சாஸ்திரங்கள் அறிவுறுத்துகிறது.
பலன்கள்! வாயுத்தொல்லை, ஜீரணி சக்தி குறைவு, மலச்சிக்கல், உடல் பருமன் பிரச்சனை, சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், வாதம், இதய நோய் போன்ற பல வியாதிகளைக் கட்டுப்பாட்டில் கொண்டு வர யோகாசனம் மிகச் சிறந்த மருந்தாகும்.
மனநலனுக்கு... நோயால் பாதிக்கப்பட்டவர்கள் யோகாசனம் செய்யக்கூடாது என்றில்லை; அவர்கள் யோகா ஆசிரியருடைய மேற்பார்வையுடன் செய்யலாம். நோயாவாய்ப்பட்டிருக்கும்போது மருந்து சாப்பிடுவதை நிறுத்தாமல், மிதமான அளவில் யோகாசனம் செய்வதே சிறந்தது. ஒவ்வொரு நோய்க்கும் பல ரீதியான ஆசனங்கள் செய்யலாம். ஆனால், இதில் எதைச் செய்வது என்று குழப்பமாக இருக்கும்.
ஒவ்வொருவருக்கும் ஏற்ற ஆசனம் எது? அவற்றை எவ்வளவு நேரம் செய்வது என்பதை புரிந்துகொள்வதற்கு யோகா ஆசிரியரின் வழிநடத்தல் தேவை. எனவே, சிறந்த யோகா பயிற்சி ஆசிரியரின் ஆலோசனைகளுடன் யோகப் பயிற்சியினை அன்றாடம் மேற்கொண்டு இனிய ஆரோக்கிய வாழ்வுக்கு வித்திடுவோம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஆரோக்கியம் தரும் யோகாசனம்
» கருவிற்கு நன்மை தரும் யோகாசனம்
» ஆரோக்கியம் தரும் குறிப்புகள்
» குங்குமப்பூ தரும் ஆரோக்கியம்!
» ஆரோக்கியம் தரும் கண் பயிற்சிகள்
» கருவிற்கு நன்மை தரும் யோகாசனம்
» ஆரோக்கியம் தரும் குறிப்புகள்
» குங்குமப்பூ தரும் ஆரோக்கியம்!
» ஆரோக்கியம் தரும் கண் பயிற்சிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum