நௌலி ஆசனம் நௌலி ஆசனம்
Page 1 of 1
நௌலி ஆசனம் நௌலி ஆசனம்
முதலில் சாதாரண நிலையில் நிற்கவும். பின்னர் அப்படியே சிறிது முன்பக்கம் குனிந்து, கைகளை சேர்த்து தொடைப்பகுதியின் இடையில் வைக்கவும். வயிற்றை தளர்த்தி மூச்சை பூரணமாக வெளியில் விட்டு வயிற்றை உள்ளிழுக்கவும். இப்போது நாம் முன்பு சொன்ன உட்டியாணா ஆசனத்தின் நிலை கிடைக்கும்.
இதே நிலையில் வயிற்றின் நடுப்பகுதியை மட்டும் எக்கி உள்ளிழுக்கவும். இப்படி செய்தால் வயிற்றின் இடது மற்றும் வலது பக்கங்களில் உள்ள சதைக்கூட்டமானது திரண்டு வயிற்றின் மையப்பகுதிக்கு வரும். அப்போது ஒரு பாம்பின் உடல் அமைப்பை போல் அது திரண்டு உருளையாக காணப்படும்.
வயிற்றின் இடது மற்றும் வலது பக்கங்கள் பள்ளம் போல் உருவாகி இருக்கும். இந்த நிலையில் ஐந்து விநாடி வரை இருந்து பின் வயிற்றை தளர்த்தி, நிதானமாக மூச்சை இழுத்துக் கொண்டே சாதாரண நிலைக்கு வரவும். இந்த மாதிரி அவரவரால் முடிந்த அளவுக்கு மூன்று முதல் ஆறு முறை வரை செய்யலாம். ஒவ்வொரு தடவையும் இடையில் நன்றாய் நிமிர்ந்து இரண்டு மூன்று தடவை மூச்சை சாதாரணமாக இழுத்து விடவும். இதற்கு மத்திய நௌலி என்று பெயர்.
குறிப்பு: வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், ஹெர்னியா என்னும் அடிவயிறு சதை தள்ளும் கோளாறு உள்ளவர்கள், வயிற்றுப்புண் உடையவர்கள், இரத்த அழுத்தம் உள்ளவர்கள், இருதய பலவீனம் உள்ளவர்கள் மற்ற எளிதான ஆசனங்கள், மூச்சுபயிற்சிகள், உணவு பழக்கங்கள் மூலம் தங்கள் உடல் நல குறைபாடுகளை சரி செய்து பின்னர் நௌலியை பழகலாம். இந்த ஆசனத்தை பதினான்கு வயதிற்கு உள்பட்ட சிறுவர்களும், கர்ப்பம் தரித்த பெண்களும் கட்டாயம் பழக கூடாது.
பயன்கள்....
இந்த ஆசனத்தை செய்து வருவதால் வயிற்றை சார்ந்த முதுகெலும்பின் பாகங்கள், அதைச்சார்ந்த நரம்புக்கூட்டங்கள் அனைத்தும் புத்துயிர் பெறும். நரம்புகள் பலம் பெறுவதால் உடல் வலுவடையும். குடல் வாயு, வயிற்று கோளாறுகள், வாயில் துர்நாற்றம் உள்பட பல பிரச்சினைகள் தீர்ந்து விடும். நோயின்றி ஆரோக்கியமாக வாழ நௌலி உறுதுணையாக இருக்கும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum