தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தோப்புக்கரணம் போடுவது ஏன் ?

Go down

தோப்புக்கரணம் போடுவது ஏன் ? Empty தோப்புக்கரணம் போடுவது ஏன் ?

Post  amma Sat Jan 12, 2013 12:12 pm

நமது உள்ளங்களில் இருந்து தலையுச்சிவரை அநேகம் நரம்புக் கற்றைகள் உள்ளன. நாம் சுறுசுறுப்பாக அடிக்கடி உட்கார்ந்து எழுந்திருந்தால் (தோப்புக்கரணத்தால்) அந்த நரம்புக்கற்றைகள் சுருங்கிச் சோர்வடையாமல் ர்ரத்தம் நன்கு பாய்ந்து மூளைக்கு பலம் கொடுக்கும். ஆந்த ர்ரத்தம் மூளைக்குச் சென்றால் மனதில் சாந்தமான நினைவுகள் மலரும்.

நாம் தோப்புக்கரணம் போடும் போது உடல் அசைவில் சுஷீம்னா என்ற நாடி தட்டி எழுப்பப்படுகிறது. இரு கரங்களில் நெற்றிப்பொட்டுக்களில் குட்டிக் கொள்ளும் போது ஸஷஸ்ராரம் என்ற இடத்தில் இருந்து யோகிகளுக்கு அமிர்தம் சிந்தும் விநாயக உபாஸனையின் மூலம் சுஷீம்னா நாடி அமிர்தகலசம் இரண்டும் ஒருங்கே இயங்குவதனால் பூரண பலன்களை அடைய முடிகிறது என்பர்.

எந்தத் தேவதையை வணங்கத் தொடங்கினாலும் முதல் விநாயகரை தியானித்து சுக்லாம் பரதரம் என்ற ஸ்துதியை கூறி நெற்றியில் குட்டிக் கொண்ட பின்னரே வணங்க வேண்டும் ர்வ்வாறு குட்டிக் கொள்வதால் ப்ரம்மரந்த்ரத்தில் அமிர்தம் பெருகி நாடிகளில் பாய்ந்து உபாசர்களுக்கு சோம்பல் முதலிய அவகுணங்களை விரட்டி நல்ல மனநிலையை அளிக்கிறது. மூலக்கனல் என்று சொல்லப்படுவதே சுஷீம்னா நாடி. இது மனித சரீரத்தில் அடி வயிற்றின் கீழ் ஒங்கார ரூபத்தில் அமைந்து செயலாயிற்றுகிறது.

இதைத் தட்டிச் செயல்படுத்தி மேல் நோக்கி ஸஷஸ்ரார மண்டலம் வரை செலுத்தி சிரஸிலிருக்கும் அமிர்தத்துடன் கலந்து அவ்விடமே அதை நிலைநிறுத்திக்கொண்டால் மனிதன் தன் நிலைமறந்து ப்ரும்மத்துடன் ஐக்கியப்பட்டு நிற்பான் பேரானந்தத்தைக் காண்பான். இந்த நாடியை செயல்படுத்துவதற்கு – தட்டி எழுப்புவதற்கு மூலாதாரத்தில் அளவில்லாத உஷணத்தை உண்டு பண்ணவேண்டும் அதற்கு மனத்தை ஒரே நிலையில் ஜக்கியப் படுத்தி நெடுங்காலம் ஜபதபங்கள் புரிய வேண்டும் அதிக உஷ்ணமான பொருட்களை உபயோகித்து பூசை முதலியக புரிதல் மறைமுகமான யோகத்தீமுட்டு என்று உணர்த்தவேயாகும் மூலாதாரத்திலுள்ள கஷம்னா நாடி கணபதி என்பதாலே நமது ரிஷிகள் சாஸ்திர விற்பனர்கள் ஆகியோர் தாவர வர்க்கத்திலேயே மிக மிக உஷ்ணமான அறுகம் புல் வெள்ளெருக்கு வன்னிப்பத்திரம் ஆகியவை கணபதி பூசைக்கு உகந்தவை எனக் கூறியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நெற்றிப் பொட்டில் குட்டிக்கொண்டு தோப்புக்கரணம் போடுவதையும் விநாயக வழிபாடு மரபாக அமைத்துள்ளார்கள்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum