தொப்பையை கரைத்து இளமையை உண்டாக்கும் யோகா
Page 1 of 1
தொப்பையை கரைத்து இளமையை உண்டாக்கும் யோகா
உடற்பயிற்சி, யோகா செய்யும் போது வயிறு சுத்தமாக இருப்பதுபோல் பார்த்துக் கொள்ள வேண்டும். அல்லது அதிகாலையில் செய்வது நல்லது. இல்லையேல் மாலை நேரத்தில் செய்யலாம்.
பத்மாசனத்தில் அமர்ந்து இரண்டு உள்ளங்கைகளையும் இரண்டு கால்களின் மேல் வைத்து கைவிரல்களை இறுக்கமாக கோர்த்துக் கொள்ளவும். நிமிர்ந்து உட்கார்ந்து மூச்சை உள் இழுக்கவும். மூச்சை விட்டுக் கொண்டே முன் பக்கம் தரையை மூக்கு தொடும் வரை குனியவும். இப்படி பத்து நொடிகள் இருக்க வேண்டும்.
மூச்சை அடக்காமல் முடிந்த வரை இயல்பாக மூச்சை விடவும். பின் மூச்சை இழுத்தபடி நிமிர்ந்து பழைய நிலைக்கு வர வேண்டும். இதுபோல் மூன்று முதல் ஐந்து முறை செய்யலாம். சிலருக்கு வயிறு கொழுப்பு சேர்ந்து தொப்பை இருந்தால் முன்னால் குனிய முடியாது. அப்படிப்பட்டவர்கள் மற்ற ஆசனங்களுடன் யோக முத்திரையை முயற்சி செய்தால் வயிறு, இடுப்பு மற்றும் தொடை பகுதிகளில் சதை கரையும்.
ஒல்லியாக இருப்பவர்களுக்கு தொப்பை இருக்க வாய்ப்பில்லை. இந்த யோக முத்திரை செய்வது சுலபம்.
யோக முத்திரைவை தொடர்ந்து செய்தால் முதுகுத் தண்டில் இறுக்கம் நீங்குகிறது. இளமை ஏற்படும். நல்ல ஆரோக்கியத்தை தரும். நாள் முழுவதும் சுறுசுறுப்பாக உணர வைக்கும். கால்களும், பெருங்கடலும் இந்த ஆசனத்தின்போது நன்றாக அழுந்துவதால் மலச்சிக்கல் நீங்கும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தொப்பையை கரைத்து இளமையை உண்டாக்கும் யோகா
» இளமையை நீட்டிக்கும் யோகா..
» இளமையை நீட்டிக்கும் யோகா
» இளமையை நீட்டிக்கும் யோகா..
» இளமையை நீட்டிக்கும் யோகா
» இளமையை நீட்டிக்கும் யோகா..
» இளமையை நீட்டிக்கும் யோகா
» இளமையை நீட்டிக்கும் யோகா..
» இளமையை நீட்டிக்கும் யோகா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum