நீரழிவு நோய் வராமல் தடுக்கும் தியானம்
Page 1 of 1
நீரழிவு நோய் வராமல் தடுக்கும் தியானம்
பெரியவர்களை மதிக்கிறோம் என்பதற்காகத் தான் காலில் விழுந்து வணங்கும் முறையை கடைப்படிக்கிறோம். ஆனால் குனிந்து, நிமிர முடியாது என்பதால் இப்பொதெல்லாம் லேசாக தலையை குனிந்து கையை குவித்து விடுகிறோம். ஆனால் உண்மையில் சரியாக விழுந்து வணங்கினால் அதுவே பயிற்சி தான்.
யோகாவில் அது தான் சூரிய நமஸ்காரம். இதை கற்றுக்கொண்டால் தரையில் விழுந்து வணங்குவதில் இவ்வளவு நுணுக்கம் இருக்கிறதா என்று நினைப்பீர்கள். இதை கற்றுக்கொண்டால் நீங்களே பெரியவர்களை கண்டால், இப்படித்தான் வணங்குவீர்கள். தினமும் சூரிய நமஸ்காரம் செய்தால் உடலில் எல்லா அங்கமும் ஏதோ புத்துணர்வு ஏற்பட்டது போல உணர்வீர்கள்.
ஆசனங்கள், கையை, காலை நீட்டி, மடக்கி, வளைப்பது தான் யோகா, நோகாமல் செய்ய முடியாது. சில அடிப்படை பயிற்சிகள் கற்றுக்கொண்டு அதை செய்துவந்தாலே போதும். ரத்தம் ஓட்டம் சீராகும். எலும்பு, தசை பிரச்சினைகள் ஓடிப்போய்விடும்.
பிராணாயாமம்: தமிழில் சொன்னால், மூச்சுப்பயிற்சி, நீரழிவு நோயாளிகளுக்கு முக்கியமான பயிற்சி. மூச்சை இழுத்துவிட வேண்டும். சுவாசம் சீராகும்.
தியானம்:- கண்களை மூடி சில நிமிடங்கள், நமக்கு பிடித்ததை நினைத்து அப்படியே உட்கார்ந்திருப்பது. தனி அறையில் அமர்ந்து செய்ய வேண்டும். அடுப்பை அணைத்தேனா தபால்காரன் வந்திட்டானா, போன் அலறுதே.... என்றெல்லாம் கவலை வரக்கூடாது அந்த அளவுக்கு அமைதியான சூழ்நிலை தேவை.
யோகநித்திரை: நித்திரை என்கிற போதே. தூங்கும் பயிற்சி என்று தெரியும். ஆம், இது மிக மிக முக்கியமான யோகா. முழுமையான அளவில் உடலை `ரிலாக்ஸ்' செய்வது.
சுத்திகரிப்பு: சக்தி க்ரியா என்று சமஸ்கிருதத்தில் சொல்வர். உடல் மனதை சுத்தப்படுத்துவது. இதற்கு யோகாவில் பயிற்சி உள்ளது. இந்த ஆறு யோகா பயிற்சிகளையும், யோகா நிபுணர் மூலம் கற்று தினமும் செய்து வந்தால் போதும் அடடா, சிறிய வயதிலேயே கற்காமல் விட்டுவிட்டு இப்போது உடலில் அங்கே பிடிக்குது...இங்கே பிடிக்குது...
என்று புலம்புகிறோமே என்று உணரத்தோன்றும். உங்களுக்கு நீரழிவு வியாதி, ரத்த அழுத்தம் இருக்கிறதோ இல்லையோ கண்டிப்பாக கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் பிள்ளைகளையும் அனுப்புங்கள் உடல் மட்டுமல்ல, மனதும் சமப்படும். சைக்கோசெமாட்டிக்...
நம் உடலில் ஏற்படும் கொலஸ்ட்ரால் நீரழிவு எல்லாவற்றுக்கும் மனது தான் காரணம் என்று மருத்துவ நிபுணர்களும் ஒப்புக்கொள்வார். பல நோய்களுக்கு காரணம், "சைக்கோசெமாட் டிக்'' காரணம் உள்ளது என்பர். சைக்கோ என்பது மனம். செமாட்டிக் என்பது உடல். மனது சரியாக இருந்தால், உடலில் எந்த கோளாறும் வராது.
அதெப்படி என்று கேட்கலாம்ப "ஸ்ட்ரெஸ்...டென்ஷன்...'' என்று சொல்கிறோமே அதற்கு காரணம் என்ன, மனது தானே! மனது என்பது குப்பைத்தொட்டி போன்றது. கம்பியூட்டர் மொழியில் சொன்னால் `ரீசை கிளபிள' என்று கூறலாம். ஆனால் கம்பியூட்டரில் வேண்டியதை திரும்ப எடுத்துக்கொள்ள அந்த போல்டர் பயன்படுகிறது.
ஆனால் மனதில் உள்ள அழுக்கை நீக்கினால் மீண்டும் வரவே கூடாது. அதை கற்றுத்தருவது தான் யோகா. மனது உடல் வலுப்பட்டால் அப்புறம் ஏன் வரப்போகிறது இருதய கோளாறும், நீரழிவு நோயும்...! நீரழிவு நோய் வராமல் தடுக்கவும் முடியும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நீரழிவு நோய் வராமல் தடுக்கும் தியானம்
» புற்று நோய் வராமல் தடுக்கும் முறைகள்
» இதய நோய் வராமல் தடுக்கும் சிறந்த வழிகள்!
» நீரழிவு நோய்
» நீரழிவு நோய் குறைய
» புற்று நோய் வராமல் தடுக்கும் முறைகள்
» இதய நோய் வராமல் தடுக்கும் சிறந்த வழிகள்!
» நீரழிவு நோய்
» நீரழிவு நோய் குறைய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum