முடி உதிர்வதை தடுக்கும் வழிகள்
Page 1 of 1
முடி உதிர்வதை தடுக்கும் வழிகள்
முடிஉதிர்வதை தடுக்க ஆயில் மஸாஜ் மிகவும் சிறந்தவழி. ஆலிவ் எண்ணெய்,தேங்காய் எண்ணெய், இரண்டையும் லேசாக சூடுபடுத்தி தலையில் பூசி, விரல் நுணியால் தலை முழுவதும் முப்பது நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.
தலையில் எண்ணெயை தேய்க்கும் போது அதன் மயிற்கால்களில் படும்படி பூசினால் மட்டும் போதும். அழுத்தி தேய்க்ககூடாது.பின்பு ஒரு கணமான துண்டை சுடு நீரில் முக்கி பிழிந்து தலையில் இறுக்கமாக சுற்றி அரைமணி நேரம் கழித்து தலை குளிக்கவேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து வாரம் ஒரு முறை செய்து வந்தால் முடிகொட்டுவது நின்று விடும். சராசரியாக ஒவ்வொருவரின் தலையிலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான முடிகள் காணப்படும்.
முடி உதிர்வது என்பது பெண்கள், ஆண்கள் என இருபாலருக்கும் உள்ள பொதுவான பிரச்னை. இந்த முடி உதிரும் பிரச்னை ஏற்படும் போது, நாம் அனைவருமே மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்வதில் தான் அதிக அக்கறை காட்டுகிறோம். ஆனால் இயற்கையில் கிடைக்கும் சில பொருட்களைக் கொண்டும் கூந்தல் உதிர்வதைத் தடுக்க முடியும்.
* கூந்தல் உதிரும் பிரச்சனை உடைய பெண்கள், சிறிதளவு வெந்தயத்தை 3 முதல் 4 மணி நேரம் ஊற வைத்து அரைத்து தலையில் தேய்த்து குளிக்க வேண்டும். வாரத்திற்கு இரு முறை இவ்வாறு செய்து வந்தால், கூந்தல் உதிர்வது படிபடியாக குறைத்து விடும்.
* ஆலிவ் ஆயில் முறையாக பயன்படுத்தி மசாஜ் செய்து வந்தால், அது கூந்தலை வலுப்படுத்துவதுடன், கூந்தல் உதிர்வது மற்றும் முடி நரைத்தல் போன்றவை ஏற்படாமல் தடுக்கும். இது பொடுகை நீக்கும் இயற்கையான முறையாகவும் அமைகிறது.
ஆலிவ் ஆயிலுடன் சம அளவு பாதாம் எண்ணெய்யை கலந்தும் பயன்படுத்தி வந்தால் பொடுகு தொல்லை நீக்கும்.
* புதிதாக காய்ச்சப்பட்ட பசும்பாலால் தலையில் மசாஜ் செய்து சிறிது நேரம் ஊறவிட வேண்டும். பின் ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர, நாளடைவில் கூந்தல் உதிர்தல் குறைந்து விடும்.
* தேங்காய்ப் பாலை தலையில் தேய்த்து வந்தால் கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும். தேங்காய் துருவலை அரைத்து பால் எடுத்து அதை தண்ணீரில் கலந்து, மிதமாக சூடுபடுத்தி தலையில் தேய்க்க வேண்டும். சிறிது நேரம் கழித்த பின், குளிக்க வேண்டும்.
இவ்வாறு, தொடர்ந்து செய்து வந்தால், நாளடைவில் நல்ல பலன் கிடைப்பதை பார்க்கலாம்
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» முடி கொட்டுவதைத் தடுக்கும் சில எளிய வழிகள்!!!
» முடி உதிர்வதை தடுக்க சில வழிகள்!!!
» முடி உதிர்வதை தடுக்க சில வழிகள்.
» முடி உதிர்வதை தடுக்க
» முடி உதிர்வதை குறைக்க
» முடி உதிர்வதை தடுக்க சில வழிகள்!!!
» முடி உதிர்வதை தடுக்க சில வழிகள்.
» முடி உதிர்வதை தடுக்க
» முடி உதிர்வதை குறைக்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum