வழிபடும் இடங்கள்
Page 1 of 1
வழிபடும் இடங்கள்
சபரிமலை பயணத்தை மேற்கொள்ளும் ஐயப்ப பக்தர்கள், அவதார மூர்த்தியான ஐயப்பனைக் கண்டு வணங்கி வழிபடுவது மட்டுமின்றி, மற்றும் சில இடங்களில் திருச்சந்நிதிகளில் வழிபாடு செய்து பயணத்தை முடித்தல் முறையாகும்.
நீலி மலை....
அன்பர்கள், நீலிமலையில் ஏறுவதற்கு முன்பு, மலர் முதலியவற்றை கொய்து அம்மலையடியைப் பூசித்து வணங்க வேண்டியது முறையாகும். இவ்வழிப்பாட்டினைச் செய்த பின்னரே அம்மலையில் ஏறுதல் வேண்டும். நீலிமலையிலிருந்த ஐயன் சந்நிதியின் சிறப்பு உண்டு. இதற்கு ராமாயணத்தில் `மதங்கவனம்' என்று பெயர். சபரியின் பெருமையால் இதற்கு புகழ்மிக்கது.
சபரிபீடம்......
சபரியால் தாபிக்கப்பட்ட ஒரு வித்யா பீடம் இங்கு இருந்தது என்று கூறுவர். இதை ராமனும், பரசுராமனும் வணங்கியதாகவும் சுமார் ஐயாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகவும் கூறுவர். இங்கு அன்பர்கள் வந்து சேர்ந்ததும் ராமபிரானையும், சபரியையும் மற்ற முனிவர்களையும் தியானித்து, கற்பூரம் ஏற்றி வணங்கிச் செல்வது முறை.
சரம்குத்தி ஆல்........
சரம்குத்தி ஆல் என்ற திருப்பெயருடைய ஆல மரத்தின் அடியை அன்பர்கள் அடைந்தவுடன் தாங்கள் தர்மம் உணர்ந்தவர்கள் என்ற நினைவுடன் அதற்கேற்ற வேடம் பூண்டு, எருமேலியில் வாங்கிய சரம் முதலியவற்றை இவ்விடத்தில் மரத்தடியில் போட்டு விட்டு வணங்கி செல்ல வேண்டியது முறை.
திருச்சந்நிதி மலை நடை......
இது மிகவும் வழுவழுப்பானதும், வீதி குறைந்ததுமான பதினெட்டாம் படியாகும். இதனை அன்பர்கள் அடைந்தவுடன், அதுவரை அனுபவித்து வந்த துன்பங்களை எல்லாம் அறவே மறந்து, ஏதோ ஒரு புதுவித லட்சியத்தை அடைவர். முன்னர் கூறியபடி ஏறும் முறைப்படி தேங்காய் உடைத்து ஏறிச்சென்று திருச்சந்நிதியை அடைதல் வேண்டும்.
அவ்வாறு ஏறிச்செல்லும்போது சரணம் போடுகின்ற ஒலியும், சங்கு, பெரும்பறை ஆகியவற்றின் ஓசையும் உள்ளத்தில் கிளர்ச்சி உண்டுபண்ணும். பதினெட்டாம்படியின் மேல் ஏறியதும் கோயிலை சுற்றி வலம் வந்து, கட்டைத் தரையில் வைக்காமல் ஐயப்பனுக்கு நேராக நின்று காணிக்கை செலுத்தி வணங்கி வழிபடுதல் வேண்டும்.
காணிக்கை செலுத்தி வழிபட்ட பின்னர், கன்னிமூலை கணபதி, மாளிகைப்புரத்து அம்மன், நாகர், கறுப்புசுவாமி, கடுத்தசுவாமி ஆகியோரை வணங்கி பிரகாரத்தில் வலம் வந்து மேற்கு நடை வாயிலாகவோ, வடக்கு நடை வாயிலாகவோ கீழே சென்று நெய்த் தேங்காயை உடைத்து ஒரு பாத்திரத்தில் வைத்து, கோயில் நிர்வாகியின் அனுமதி பெற்று உள்ளே அபிடேகத்திற்கு கொடுக்கலாம்.
அவ்வாறு அபிஷேத்திற்கு கொடுப்பதோடு மற்ற வழிபாடுகளுக்கும் ஏற்பாடு செய்யலாம். அப்பம், பாயசம், பொங்கல், நெய் அபிடேகம் போன்றவை ஐயப்பனுக்கு மிகவும் உகந்தவை. மற்றும் வடை, எள்ளுருண்டை, தங்கம், வெள்ளி ஆகியவற்றிவ் செய்த உருவங்கள், தேங்காய்ப்பலி, கற்பூர தீபம், நெய்விளக்கு முதலியவையும் ஏற்றவையே.
அன்பர்கள் தங்கள் வசதிக்கேற்ப இவற்றை ஐயப்பனுக்கு படைத்தும் வழிபாடு செய்யலாம். தேங்காயில் இருந்து அபிஷேகத்திற்கு நெய் எடுத்த பிறகு உடைத்த அத்தேங்காயை கன்னிமூலை கணபதியின் ஓமகுண்டத்திலோ அல்லது கற்பூரம் ஏற்றும் தரையிலோ போட்டு விட வேண்டும்.
திருச்சந்நிதிகள்.....
ஐயனை வழிபட்ட பின்னர் கீழ்மாளிகைப் புறத்து அம்மனுக்கு காணிக்கையும், மஞ்சள்பொடி, சிவந்தபட்டு, குங்குமம் முதலியவற்றையும் கொண்டு வழிபாடு நிகழ்த்துதல் வேண்டும். மாளிகைப்புறத்துக்கு போகும் வழியில் நாகராஜரின் நாகரின் பீடம் உள்ளது. அங்கு அரிசிமாவு கலக்கிய நீர், பால் ஆகியவற்றை படைத்து கற்பூரம் ஏற்றி வழிபடுதல் முறை. மலைநடையில் இருக்கும் மண்டபத்திலும், வாபர், கறுப்பு சுவாமி இருக்கும் சந்நிதிகளிலும் காணிக்கைகள் செலுத்தி வழிபட வேண்டும். மலைநடையில் பகவதிக்கு முன்னால் தேங்காய் உருட்டுவதும் வழிபாடுதான். இந்த வழிபாடு மிகவும் விசேடமானதாகும்.
கும்பளம்தோடு.....
கும்பளம்தோடு என்னும் கால்வாய் உள்ளது. இக்காலவாய்க்கு சென்று குளிப்பது மிகவும் முக்கியமான ஒரு சடங்காகும். பொன்னம்பலமேட்டில் உள்ள ஐயப்பனுடைய தாரக பிரம்ம சைதன்யத்தை (ஆன்மாவை) தேவர்கள் கங்கை நீர் கொண்டு அபிஷேகம் செய்ததில் இருந்து தோன்றிய தீர்த்தமாகக் கும்பளம் தோடு கருதப்படுகின்றது.
அதனால் இத்தீர்த்தத்தில் நீராடல் ஒரு முக்கிய சடங்காக அமைந்துள்ளது. கும்பளம் தோட்டில் `உரல்குழி தீர்த்தம்' என்ற முக்கியமான இடம் ஒன்று உள்ளது. இவ்விடத்தில் நீராடல்தான் மிகவும் விசேஷம். தோட்டில் (கால்வாயில்) எந்த இடத்தில் நீராடினாலும் நற்பலன் கிட்டும்.
மகரவிளக்கு எழுந்தருளல்.........
மகரசங்கிரமத்தன்று மாலை பந்தளத்தில் இருந்து மகர (தை) விளக்கு என்னும் திருவாபரணம் வரும். அந்த மகர விளக்கை காண்பதற்கு எழுச்சியுடன் இருக்கும். பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காது. மகரவிளக்கை தலையில் தாங்கிய வண்ணம் துள்ளிவரும் காட்சி. பக்தியின் பெருக்கை காட்டும், அன்பர்களின் பக்தியைப் பெருக்கும்.
அன்று இரவு மாளிகைப்புறத்தில் இருந்து மகர விளக்கை யானை மீது எழுந்தருள வைத்துக் கோயிலை மூன்று முறை சுற்றித் திரும்பிச் செல்லும். அப்போது வாபர் மரபினர் ஆயுதம் தரித்து உடன் வருவது வழக்கம். மகரவிளக்கு செல்லும்பொழுது பொன்னம்பலமேட்டில் விளக்கு தென்படுவது உண்டு. அது ஐயப்பனின் தாரக பிரம்ம சைதன்யத்தை தேவர்கள் பூசிப்பது என்ற நம்பப்படுகின்றது.
மகரவிளக்கை கண்டு வழிபடுதலோடு அன்பர்களின் சபரிமலை பயணம் முடிவுறும். அதன்பின்னர் மலையினின்று இறங்க எத்தனிப்பர். பிரசாதங்கள் அடங்கிய கட்டுடன் திரும்புவதற்கு முன்னர் தங்கள் குருவை வணங்குவர். கட்டுடன் இறங்கி கீழே வந்தபின் வெடி வழிபாடு நிகழ்த்தல் நல்லது. அதன்பின்னர் திரும்பும் பயணத்தை மேற்கொள்ளலாம்.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» வழிபடும் இடங்கள்
» லட்சுமி இருக்கும் இடங்கள்
» பூமியில் இருக்கும் அபூர்வமான 6 இடங்கள்!!!
» லட்சுமி இருக்கும் இடங்கள்
» 750 இந்திய சுற்றுலா இடங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum