விரல் நகங்களை பாதுகாக்க
Page 1 of 1
விரல் நகங்களை பாதுகாக்க
கை விரல்கள் அழகாக இருக்க வேண்டும் என்றால் அவற்றுக்கு நகப்பூச்சு மட்டும் அடித்தால் பேதாது. அதற்கான சிறப்பு கவனமும் தேவைப்படுகிறது. கை விரல்களுக்கு நல்ல மசாஜ் கெடுத்து, அவற்றை முறையாகப் பராமரித்து வந்தால்தான் நகங்களும் அழகாகத் தேன்றும். கை விரல்களுக்கு மசாஜ் செய்வதற்கு முன்பு, அதற்கான க்ரீமை கைகளில் தடவுங்கள். பிறகு க்ரீம் சருமத்திற்குள் ஊடுருவும் வரை நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்து பிறகு உங்கள் கை விரல் நகங்களுக்கு நகப்பூச்சினை பூசுங்கள். அழகாக மிளிரும்.
* நகங்கள் பளபளப்பாக இருக்க நல்லெண்ணெய், ஆலிவ் எண்ணெயை லேசாக சூடாக்கி நகங்களில் மசாஜ் செய்யலாம்.
* புதினா இலை எண்ணை கொண்டு மசாஜ் செய்தால் நகத்தை சுற்றி ஏற்படும் வீக்கம், வலியை குணமாகும்.
* நகச்சுத்தியால் அவதிப்படுபவர்கள் வெற்றிலையில் சிறிதளவு சுண்ணாம்பு கலந்து அரைத்து நகத்தில் வைத்துக் கட்டினால் குணமடையும். * இளஞ்சூடான நீரில் துளசி, புதினா இலை போட்டு 10 நிமிடம் நகங்கள் மூழ்குமாறு வைத்தால் கிருமிகள் அழிந்து நகம் சுத்தமாகும்.
* நகம் கருப்பாக சொத்தையுடன் இருந்தால் துத்தி இலையை சாம்பிராணியுடன் சேர்த்து அரைத்து பற்றுப் போட்டால் மறையும்.
* எலுமிச்சை, ஆரஞ்சு பழத்தோல்களை காய வைத்து பொடியாக்கி சிட்டிகை உப்பு சேர்த்து நல்லெண்ணெயில் குழைத்து தொடர்ந்து நகங்களில் தடவினால் பளபளப்பு கூடும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நகங்களை பாதுகாக்க...
» நகங்களை பாதுகாக்க...
» நகங்களை சீர்படுத்த
» நகங்களை சுத்தமாக வைத்திருங்கள்
» நகங்களை பராமரிப்பதற்கு சிலஇலகு எளிய வழிகள்…
» நகங்களை பாதுகாக்க...
» நகங்களை சீர்படுத்த
» நகங்களை சுத்தமாக வைத்திருங்கள்
» நகங்களை பராமரிப்பதற்கு சிலஇலகு எளிய வழிகள்…
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum