தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கல் எடுத்து போடுவது ஏன்?

Go down

 கல் எடுத்து போடுவது ஏன்?  Empty கல் எடுத்து போடுவது ஏன்?

Post  amma Sat Jan 12, 2013 11:57 am



மணிகண்டனையும், பூத கணங்களையும் எதிர்பாராமல் கண்ட மஹிஷி ஆர்ப்பரித்தாள். அசுர கணங்களுக்கும், பூத கணங்களுக்கும் கடும் போர் ஆரம்பமாயிற்று. மஹிஷி மணிகண்டனைக் கொம்புகளினால் தாக்கினாள். வலிமையான மதங்கொண்ட யானையின் மூர்க்கத்தனமான தாக்குதலை போலிருந்தது அது.

தன்னைக் கொம்புகளினால் தாக்கிய மஹிஷியின் கொம்புகளை இரண்டு கைகளினாலும் இறுக்கப் பற்றிய மணிகண்டன் அப்படியே அவளைத் தூக்கிக் கிறு கிறுவென சுற்றி அமராபதியிலிருந்து பூவுலகத்தை நோக்கி எறிந்தான். இதனால் செயலிழந்த மஹிஷிமயக்கம் அடைந்து பூமியில் பம்பா நதியின் மேற்கு பக்கத்திலுள்ள அலசா என்னும் நதியின் கரையில் வந்து வீழ்ந்தாள்.

இந்த அலசா நதியே இப்போது `அமுதா நதி' என்று சொல்லப்படுகின்றது. அவள் மயக்கம் நீங்கி எழுவதற்குள்ளேயே மணிகண்டன் அவ்விடத்திற்கு வந்து அவள் மார்பின் மீது ஏறி நடனமாடினான். இந்த நடனம் தனது தந்தையாரான பரமேஸ்வரரின் ருத்ர தாண்டவம் போல் அமைந்தது. இதனைக்காண உமையம்மையுடன் பரமேஸ்வரர் ரிஷிப வானத்தில் எழுந்தருளினார்.

அசுர கணங்கள் சிதறி ஓடின. கண் விழித்த மஹிஷி மணிகண்டனின் பாரத்தினால் எழுந்திருக்க இயலாதவள் ஆனான். தன்னுடைய முடிவுக்காலம் நெருங்கி விட்டதையும், வந்தவன் ஹரிஹர புத்திரன் என்றும் உணர்ந்து கொண்டாள். அவளுக்கு தன்னுடைய பூர்வ ஜென்ம வரலாறு தெளிவாகத் தெரிந்தது.

எனவே அவள் மணிகண்டனை நோக்கிப்பிரார்த்தனை செய்தாள். மணிகண்டன் சாந்தமடைந்தான். அவன் சினம் தணிந்தது. மஹிஷியின் உடலினின்று கீழிறங்கி அவளுக்கு அருள் பாவித்தான். தூய்மையே வடிவமான மணிகண்டன், உயிருக்குப் போராடும் அந்த மஹிஷியின் உடலை அள்ளி எடுத்த ஆறத் தழுவிக்கொண்டான்.

மணிகண்டனின் உடல் ஸ்பரிசம் பட்டவுடன் மஹிஷி தன் தேகத்தை விடுத்தாள். பொன்னொளி வீசும் பெண் அழகியாய் மாறினாள். மணிகண்டனை வலம் வந்து வணங்கினாள். ஐயனே உன்னால் தழுவப்பட்டு என் ஜென்மம் சாயல்யமாயிற்று. என்னை கரம் பிடித்து மெய்யுடன் மெய் இறுகத் தழுவிக்கொண்டதால் நான் உன்னுடையவள் ஆனேன்.

பிரும்ம, விஷ்ணு, சிவ, சக்தியான தாத்திரேயருக்காக பூர்வத்தில் அவர்களுடைய சக்திகளான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோர் அம்சத்தில் நான் தோற்றுவிக்கப்பட்டேன். இன்று என் சாப விமோசனத்தின் பொருட்டு ஹரிஹர சக்திகளால் நீ தோற்றுவிக்கப்பட்டாய். முப்பத்து முக்கோடி தேவர்களின் சாட்சியாக என்னை தழுவினாய்!

ஆகவே நான் உனக்குரியவன்! உன்னை விட்டு வேறு புருஷரை நான் அடையேன் என்றாள். இதைக்கேட்ட மணிகண்டன், `நான் நித்திய பிரம்மாச்சாரியாக இருக்க சங்கல்கம் கொண்டவன். உன்னுடைய எண்ணம் ஈடேற வழி இல்லை. ஆயினும் நீ என்னைக் கண்காணிப்பவளாக என் அருகிலேயே சற்று தள்ளி இருந்து கொள்.

இனிமேல் நான் வாழப் போகின்ற சந்நிதானத்தில் என்னைத் தேடி பக்தர்கள் வந்து தரிசிப்பர். எப்போது என்னைத் தேடி புதிய பக்தர்கள் வராமல் போகின்றார்களோ அன்று நான் உன்னை ஏற்கிறேன்ப என்றான். இதனை நான் எப்படித் தெரிந்து கொள்வதுப என்று கேட்டாள் லீலா.

நான் பந்தள நாட்டை விட்டு வெளியேறும் போது ஒன்றை அம்பைத் தாங்கி இருந்ததுபோல் முதல் முறையாக வரும் என் பக்தன் அதை நினைïட்டுவது போல் சரக்கோலைத் தாங்கி வருவான். அதுதான் அடையாளம் என்றான். இது கேட்டு லீலா மகிழ்ந்தாள். உனக்காக நான் காத்திருக்கிறேன் என்று கூறினாள்.

இன்றிலிருந்து உன்னை மாளிகையிப்புறம் என்றும் மஞ்ச மாதா என்றும் அழைப்பார்களாக என்று திருவாய் மலர்ந்தருளினான் மணிகண்டன். மணிகண்டனின் உத்தரவு பெற்று மறைந்து போனாள் மஞ்ச மாதா. அவள் மறைந்தவுடன் பரமேஸ்வரர் மணிகண்டன் எதிரே தோன்றினார். மகனே உலகங்களை வதைத்த மஹிஷியின் வதம் முடிந்தது. அடுத்து செய்ய வேண்டியதை நீ யோசிப்பாய்.

இந்த மஹிஷி நினைத்த போது நினைத்த வண்ணம் தன்னை போன்ற மஹிஷிகளை உற்பத்தி செய்யும் சக்தி மிக்கவளாக இருந்தாள். அவள் இறந்தாலும் அந்த உடலுக்கு அச்சக்தி உண்டு என்றாலும் அவை வெளிவர முடியாது. ஏனென்றால் மஹிஷியின் உத்தரவு இன்றி அவை வெளிவரக்கூடாது.

எனவே இந்த மஹிஷியின் உடல் நாளுக்கு நாள் வளர ஆரம்பிக்கும். அப்படிச் செய்ய முடியாதபடி இதனைப் பூமியில் புதைத்து விட வேண்டும். புதைக்கப்பட்டு விட்டால் உடலின் வளர்ச்சி நின்று போகும். எனவே இந்த உடலை அமுதா நதியின் மறு கரையில் புதைந்து விடு என்று கூறினார். இதைக் கேட்ட மணிகண்டன் மஹிஷியின் அம்மாபெரும் மலை போன்ற உடலை காலால் உதைத்து எறிந்தான்.

அந்த உதையினால் மஹிஷியின் சவம் அமுதா ஆற்றின் மறு கரையில் சென்று விழுந்தது. உடனே பூத கணங்கள் பெரிய பெரிய கற்களைக் கொண்டு வந்து அவள் உடலின் மேல் போட்டன. ஒரு சில தாழிகைக்குள்ளேயே சவ அடக்கம் முடிந்தது. மஹிஷியின் உடல் மூடப்பட்ட இடத்தையே இப்போது கல்லிடுங் குன்று என்றும், கல்லிடாங் குன்று என்றும் அழைக்கின்றனர்.

ஐயப்ப தரிசனத்திற்கு இன்று மலைக் வருபவர்கள் அமுதை நதியிலே மூழ்கிக் கல் எடுத்துக்கொண்டு வந்து கல்லிடுங் குன்றிலே அதனைச் சேர்க்கின்றனர். இது மஹிஷியின் உடல் அடக்கத்திலே தாங்களும் பங்கு கொள்கிறோம் என்று தேவர்களுக்கு தெரியப்படுத்தவும்.... சாஸ்தாவின் அடியர்வர்களில் தாங்களும் ஒருவர் என்று நினைப்பூட்டுவதற்கும் எழுந்த நிகழ்ச்சி இது ஆகும்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum