ஆபத்தை விளைவிக்கும் அழகு சாதனப்பொருட்கள்
Page 1 of 1

இயற்கை அழகு கொட்டிக்கிடக்கையில் மேலும் அழகு படுத்துகிறேன் என்று பெண்கள் போட்டுக்கொள்ளும் அழகு சாதனப் பொருட்கள் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கிறது. கூந்தலுக்கு உபயோகிக்கும் ஷாம்பு முதல் பாதநகங்களுக்கு போடும் நெயில் பாலீஸ் வரை பெண்கள் உபயோகிக்கும் அழகு சாதனப் பொருட்களின் மூலம் தினசரி 600க்கும் மேற்பட்ட ரசாயனங்கள் நம் உடம்பிற்குள் புகுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
தலை குளிக்க வேண்டும் என்றால் ஷாம்பு இல்லாமல் குளிப்பதில்லை. அந்த அளவுக்கு இன்றைக்கு ஷாம்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. ஷாம்பில் நுரை அதிகம் வரவேண்டும் என்பதற்காக 15 ரசாயனங்கள் வரை கலக்கப்படுகின்றனவாம். அதில் சோடியம் சல்பேட், டெட்ராசோடியம் பாரோபிளின் கிளை சால் போன்றவை ஆபத்தானவை என்கினறனர் மருத்துவர்கள்.
இவற்றால் கண் எரிச்சல், மற்றும் பார்வை கோளாறு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. தலைக்குப் போடும் ஸ்பிரேயில் 11 ரசாயணங்கள் கலந்து வருகின்றன. இதில் ஆக்டிநோசேட், இசோப்தாலேட் ஆகிய ரசாயணங்கள் மிகவும் ஆபத்தானவை. அலர்ஜி, கண் எரிச்சல், மூக்கு, தொண்டையில் எரிச்சல், ஹார்மோன் கோளாறுகள் போன்றவை ஏற்படக்கூடும். கண்களுக்கு எந்த வித அழகு சாதனப் பொருட்களும் உபயோகப்படுத்தாமல் இருப்பதே நன்மை தரும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.
ஏனெனில் ஐஷேடோவில் 26 விதமான ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றனவாம். அதில் கலக்கப்படும் பாலிதீன் டெரிப்தாலேட் என்ற ரசாயனம் மிகவும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாம். இதனால் இது புற்று நோய், குழந்தையின்மை, ஹார்மோன் கோளாறுகள், உடலின் உள்பாகங்களில் கடுமையான பாதிப்பு போன்றவைகளை ஏற்படுத்துகின்றனவாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஆபத்தை விளைவிக்கும் அழகு சாதன பொருட்கள்!
» அதிக உடற்பயிற்சி ஆபத்தை விளைவிக்கும்
» அதிக உடற்பயிற்சி உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும்
» அதிக உடற்பயிற்சி உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும்:ஆய்வில் தகவல்
» முக அழகு – சிவப்பு அழகு பெற -அம்மை வடு நீங்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum