கால்களை பாதுகாக்க
Page 1 of 1
கால்களை பாதுகாக்க
பெண்களது கால்கள், ஆண்களின் கால்களை விட நான்கு மடங்கு அதிகம் பாதிப்பிற்கு உள்ளாகின்றன. குதிகால் செருப்புக்களை அணிவதாலும் நின்றபடி சமைக்கும் சமையல் அறைகளும், நடையை குறைத்துக் கொண்ட வாழ்க்கை முறைகளுமே இதற்குக் காரணமாகின்றது.
எனவே பெண்கள், கால்களின் பராமரிப்பிற்கென்று அதிக கவனம் எடுத்துக் கொள்வது என்பது மிக மிக அவசியமாகிறது. பாதங்களில் கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் கோளாறுகள் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.
• மிகுந்த அழுத்தத்தினால் ஏற்படும் கால் ஆணி, கால் காய்ப்பு.
* பூஞ்சாளத் தொற்றினால் ஏற்படும் பழுப்புநிறப் புள்ளிகள்.
* பூஞ்சாள வகை நுண்மத் தொற்றாலும், ஈரமான சாக்ஸ் மற்றும் செருப்புகளால் ஏற்படும் பித்த வெடிப்பு.
* கால் விரல்களில் குறிப்பாக கட்டை விரலில் நகம் வளர்ந்து, மடங்கி, உள் தசைக்குள் சென்று விடுவதால் ஏற்படும் பாதிப்பு.
சருமத்தை மென்மையாக்க உதவும் ஆலிவ் எண்ணெய், கால் மற்றும் பாதங்களுக்கும் சிறந்த நன்மையளிக்கின்றது. கோடை காலங்களில் செருப்புகளில் உட்புறம் சிறிதளவு பவுடரை தூவினால் கால்கள் மெத்தென்ற உணர்வுடன் இருக்கும்.
கால்களைக் கழுவும் நீரில் ஒரு டீஸ்பூன் வினிகர் சேர்த்துக் கழுவினால் கால்கள் தூய்மையாகவும், பொலிவாகவும், தோற்றமளிக்கும். கால்களைக் கழுவுவதற்கு வெந்நீர் பயன்படுத்தக் கூடாது. இது காலில் உள்ள இயற்கையான சரும மென்மையை நீக்கி, இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கிறது. அதனால் பாதங்கள் வெடிப்பு மற்றும் காய்ப்பிற்கு உள்ளாகிறது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நகங்களை பாதுகாக்க...
» தலைமுடியைப் பாதுகாக்க...
» கை அழகை பாதுகாக்க
» நகங்களைப் பாதுகாக்க...
» நகங்களை பாதுகாக்க...
» தலைமுடியைப் பாதுகாக்க...
» கை அழகை பாதுகாக்க
» நகங்களைப் பாதுகாக்க...
» நகங்களை பாதுகாக்க...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum