பனிக்காலத்தில் சருமம் பளபளப்பாக
Page 1 of 1
பனிக்காலத்தில் சருமம் பளபளப்பாக
பனிக்காலத்தில் புன்னகைக்க மறக்காதீர்கள்! மார்கழி பிறந்தால் பனிக்கு கொண்டாட்டம் தான். நாம் தான் அவதிப்படுவோம். அவதியைச் சமாளிக்க எளிய வழிமுறைகள் இதோ:
தேங்காய் எண்ணெயைப் போல சிறந்த எண்ணெய் உடலுக்கு இல்லை எனலாம். காலை எழுந்ததும் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை தேங்காய் எண்ணெயைத் தடவிக் கொண்டு விட்டால், எப்பேற்பட்ட பனியும் உங்களை ஒன்றும் செய்ய முடியாது. சருமம் பளபளப்பாகவே இருக்கும். ஈரத்தன்மை போகாது. தோல் வறட்சி ஏற்படாது. வெடிப்பு பாடாய் படுத்தாது. எண்ணெய் தவிர...
* உடல் சூடு பொறுக்கும் அளவுக்கு வெந்நீரில் குளிக்கலாம். ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
* குளிக்கும்போது பேபி சோப் பயன்படுத்தினால் நல்லது. அதிக ரசாயனம் கலப்பு இல்லாத, கிளிசரின் கலந்த சோப்பு உடலுக்கு நல்லது.
* கஸ்தூரி மஞ்சள் பொடியைத் தேய்த்துக் குளித்தால் சருமம் மென்மையாக இருக்கும். வெளியில் செல்லும் போது பவுடரோ, "சன்ஸ்கிரீன்' லோஷ னோ போட வேண்டிய அவசியம் ஏற்படாது.
* துடைக்கும்போது முரட்டு துண்டால் "வரவர'வென துடைக்காமல் ஒற்றி எடுத்தாற்போல் துடைத்தால் சருமம் மென்மையாக இருக்கும்.
* "மாய்சரைசர் கிரீமை' கையோடு வைத்திருங்கள். தேங்காய் எண்ணெய் தடவத்தவறும் நாட்களில், இதைத் தடவிக் கொள்ளலாம்.
* கண் சோர்ந்து போனால், வழக்கம் போல வெள்ளரிக்காய் துண்டு தான் பெஸ்ட். ரோஸ் வாட்டர் இருந்தால், சுத்தமான தண்ணீருடன் கலந்து இரண்டு சொட்டு கண்ணில் ஊற்றிக் கொள்ளலாம்.
* தலைக்கு ஷாம்பூ போட்டுக் குளிப்பது வாரத்திற்கு ஒரு முறை என்ற கணக்கில் இருக்க வேண்டும். மற்றபடி இரண்டு நாட்கள் வெறும் தண்ணீர் ஊற்றிக் குளிக்கலாம். தினமும் தலைக்குக் குளிக்கும் பழக்கம் உள்ளவர்கள் இரண்டு நாட்கள் சிகைக்காய், ஒரு நாள் ஷாம்பூ மற்ற நாட்களில் வெறும் தண்ணீர் ஊற்றிக் குளிக்கலாம். இப்படிச் செய்யும்போது, தலை உலர்ந்து போகாமல், பொடுகு ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
* லிப்ஸ்டிக் போடும் பழக்கம் உள்ளவர்கள், பனிக் காலத்தில் அடர்த்தியான லிப்ஸ்டிக் பயன்படுத்துவதை விட லிப்கிளாஸ் பயன்படுத்துவது நல்லது. உதடு உலர்ந்து போகாமல் இருக்க இது பயன்படும்.
* பொதுவாக இதுபோன்ற பராமரிப்புகள் அனைத்தும் "ரொம்ப நச்சு' என்று தோன்றும். ஆனால், இதைச் செய்யாவிட்டால், உடலைச் சொரிந்து சொரிந்து புண் ஏற்பட்டு, அதனால் ஏற்படும் வேதனையை விட, "வருமுன் காப்போம்' சிறந்தது அல்லவா? அதிக நேரம் எடுத்துக் கொள்ளாத வகையில் இதைப் பின்பற்றினால் பிரச்னை இல்லை.
* எல்லாவற்றையும் விட முகத்தில் புன்னகை இருக்க வேண்டியது அவசியம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum