உங்களுக்கு வறட்சியான தலை முடியா?
Page 1 of 1
உங்களுக்கு வறட்சியான தலை முடியா?
முடி உதிர்வது, முடியின் நுனிப்பகுதி வெடிப்பது, உடைவது என்பது இன்று பெண்கள் சாதாரணமாக எதிர்நோக்கும் பிரச்சினையாகும். இவர்கள் மாறி மாறி எதையாவது செய்வார்கள் ஆனால் எதிலும் சரியான தீர்வு கிடைக்காமல் திணறி விடுவார்கள். முடியை கவனித்து, பராமரிக்காவிட்டால், முடி உடையும் வாய்ப்புகள் அதிகம்.
அதேபோல் முடியின் நுனிப்பகுதியும் பிளவுபடும். அதிகமாக வெயிலிலும், காற்றிலும் வேலை செய்பவர்களின் தலை முடி நடுவில் உடைந்தும் நுனியில் பிளவு பட்டிருப்பதும் சகஜமான விஷயம். கிணற்று தண்ணீரில் குளிப்பவர்களின் தலைமுடி அதிகமாக உடைந்து போக வாய்ப்பிருக்கிறது. மேலும், வயதான முடியும் அடிக்கடி உடைந்து போகும்.
கெமிக்கல் கலந்த ஷாம்போவை உபயோகித்து தலைக்கு குளிக்க வேண்டாம். சோப்பு போன்றவற்றையும் தலைமுடிக்கு உபயோகிப்பது நல்லதல்ல. முடியின் நடுவில் உடைந்த முடியை மாதா மாதம் கட் செய்து டிரிம் பண்ணினால் சீக்கிரத்திலேயே சரியாகிவிடும். அதேபோல் அவரவர்களின் முடிக்கு தகுந்த கன்டிஷனர் உபயோகிப்பது நல்லது.
சிம்பிளாக மேக்கப் செய்து கொள்வதுடன் ஸ்மார்ட்டாகவும் தெரிய வேண்டுமானால், ஹேயர் ரீ பொண்டிங் செய்து கொள்ளலாம். அதனால் முடி பட்டு போல இருக்கும். ஸ்ரெயிட் ஹெயராகவும் பண்ணிக் கொள்ளலாம். அதனால் நல்ல லுக் கிடைக்கும். அதுமட்டுமல்ல, ஒரு நல்ல இமேஜையும் இது கொடுக்கும். ஹெயர் ரீபொண்டிங் செய்து கொள்ள விரும்புபவர்கள் பியூட்டி பார்லருக்குச் சென்று செய்து கொள்ளலாம்.
இதற்கான செலவும் குறைவுதான். அவரவர் முடியின் நீளம் மற்றும் அடர்த்தியைப் பொறுத்து கட்டணம் மாறுபடும். இதே வேளை ஒருவரது தலைமுடி வறட்சியாக இருக்கிறது என்றால் தலை முடிக்கு எண்ணெய் வைத்து மசாஜ் செய்யலாம். தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயிலால் கூந்தலை மசாஜ் செய்து தலை குளிக்கலாம்.
ஷாம்போ போட்டுக் குளித்தால், கூந்தலில் கன்டிஷனர் தடவி மேலிருந்து கீழ் நோக்கி தண்ணீர் விட்டு முடியை அலச வேண்டும். கூந்தலை தேய்த்துக் கழுவக் கூடாது. முடியின் வேர்க்காலில் கன்டிஷனர் படாமல் முடியில் மட்டும் அப்ளை செய்வது நல்லது.
முதலில் உங்களின் முடி சாதாரண முடி வகையா? அல்லது உடைந்த முடி வகையா? என்று தெரிந்து அதற்கேற்றால் போல் "ஹெயர் ஸ்மூத்திங்' செய்து கொள்ளலாம். அதேபோல் பார்லர்களில் "ஸ்பா' டிரீட்மெண்ட் செய்து கொண்டால்கூட, கூந்தலில் வறட்சி போய்விடும்
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வறட்சியான சருமத்திற்கான மேக்-கப் டிப்ஸ்....
» முடியா? காதலா? சீர்திருத்தமா?
» முடியா? காதலா? சீர்திருத்தமா?
» தெரியுமா உங்களுக்கு?
» ஜீவ நாடி - நம்ப முடியா பேரதிசயம் “தகுதி உள்ளவர்களுக்கு இந்த செய்தி சேரவேண்டும் என்கிற அரிய நோக்கில், ஜீவ நாடி பற்றிய அருமையான கட்டுரையை தனது இணையத்தில் பகிர்ந்துகொண்ட திரு. ரமணன் அவர்களுக்கு ,மனமார்ந்த நன்றி. ஜீவ நாடி பார்ப்பதில் நம்பிக்கை உள்ளவர்கள் மட்
» முடியா? காதலா? சீர்திருத்தமா?
» முடியா? காதலா? சீர்திருத்தமா?
» தெரியுமா உங்களுக்கு?
» ஜீவ நாடி - நம்ப முடியா பேரதிசயம் “தகுதி உள்ளவர்களுக்கு இந்த செய்தி சேரவேண்டும் என்கிற அரிய நோக்கில், ஜீவ நாடி பற்றிய அருமையான கட்டுரையை தனது இணையத்தில் பகிர்ந்துகொண்ட திரு. ரமணன் அவர்களுக்கு ,மனமார்ந்த நன்றி. ஜீவ நாடி பார்ப்பதில் நம்பிக்கை உள்ளவர்கள் மட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum