தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

டீன் ஏஜ் பெண்களுகளின் கவனத்திற்கு...

Go down

டீன் ஏஜ் பெண்களுகளின் கவனத்திற்கு... Empty டீன் ஏஜ் பெண்களுகளின் கவனத்திற்கு...

Post  meenu Mon Jan 28, 2013 1:37 pm


* டீன் ஏஜான் ஆரம்பத்தில் இருப்பவர்கள் புருவங்களை ஷேப் செய்ய வேண்டாம். வயது கூடிய பிறகு செய்து கொள்ளலாம். பிளீச்சிங் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. சருமத்தின் தேவையற்ற ரோமங்களை அகற்ற ரேசர், கிரீம் உபயோகிக்க வேண்டாம்.

* கூந்தலுக்கான மிகவும் ஸ்ட்ராங்கான சிகிச்சைகளைத் தவிர்க்கலாம். ஸ்ட்ரெயிட்டனிங், கலரிங் போன்றவற்றைக் கூடியவரையில் தள்ளிப் போடுவது நல்லது. தினசரி கூந்தலுக்கு ஷாம்பூ உபயோகிப்பதைத் தவிர்க்கலாம்.

* அழகு, நாகரிகம் என்ற பெயரில் புருவங்களைத் துளையிட்டு நகை அணிவது, தொப்புளைத் துளையிட்டு நகை அணிவது போன்றவற்றைச் செய்ய வேண்டாம். வரிசையாகக் காது மடல்களைக் குத்திக் கொண்டு நகை அணிவது கூட ஆபத்தாக முடியலாம். நரம்புகளில் பட்டால் ஆபத்து.

* நீலம், பச்சை மாதிரி கன்னாபின்னா நிறங்களில் ஐ லைனர், ஐ பென்சில் உபயோகிப்பது இன்றைய டீன் ஏஜ் பெண்கள் மத்தியில் ஃபேஷன். இவற்றிலுள்ள கெமிக்கல்கள் கட்டாயம் கண் பார்வை பாதிக்கும்.

* டார்க் நிற, மேட் ஃபினிஷ் (ஈரப்பதமே இல்லாதது, நீண்ட நேரம் நீடிப்பது) லிப்ஸ்டிக்குகளை உபயோகிப்பதை; தவிர்ப்பது நல்லது. உதடுகளை அழகாக, பளபளப்பாகக் காட்ட லிப் பாம் உபயோகிக்கலாம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum