தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காஜல் எளிதாக நீக்க வேண்டுமா?

Go down

காஜல் எளிதாக நீக்க வேண்டுமா? Empty காஜல் எளிதாக நீக்க வேண்டுமா?

Post  meenu Mon Jan 28, 2013 1:01 pm


பெண்கள் அழகுக்காக பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று தான் காஜல்.
காஜலைப் பயன்படுத்தும் பெண்களுக்கு இருக்கும் ஒரு பிரச்சனை தான், கண்களுக்கு போடும் காஜல் கலைக்கும் போது முக அழகை கெடுத்துவிடுகின்றன. அதனாலேயே நிறைய பெண்களுக்கு கருவளையம் வந்துவிட்டது போன்று காணப்படுகிறது.

சிலசமயங்களில் அந்த காஜலை போட்டவர்கள் சரியாக அதனை நீக்காமல் இருப்பதும் கருவளையத்திற்கு காரணம். ஆகவே அத்தகைய காஜலை சரியாக நீக்குவதற்கு ஒரு சில டிப்ஸ் இருக்கிறது. அது என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...காஜலை எளிதாக நீக்குவதற்கு, கிளின்சிங் மில்க்கை முகத்திற்கு தடவி, முகம் மற்றும் கண்களுக்கு நன்கு மசாஜ் செய்ய வேண்டும்.

பின் அதனை ஒரு காட்டனை வைத்து, துடைத்து எடுக்க வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் காஜல் வருவதோடு, அழுக்குகளும் வந்துவிடும். இல்லையெனில் மேக்-கப் ரிமூவல் க்ரீம் என்று விற்கப்படும் க்ரீமையும் பயன்படுத்தி நீக்கலாம். அவசரமாக காஜலை நீக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், கண்களுக்கு அடியில் ஏற்படும் கருவளையம் ஏற்படாமல் இருப்பதற்கு, முகத்தை ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி கழுவ வேண்டும்.

இல்லையெனில் ஏதாவது ஸ்கரப்பை பயன்படுத்தியும் நீக்கலாம். இதனால் காஜல் சருமத்தில் இருந்து நீங்குவதோடு, சருமமும் சுத்தமாகும். காஜல் பயன்படுத்தியதால் ஏற்படும் கருவளையத்தை தடுப்பதற்கு, தினமும் படுப்பதற்கு முன், எண்ணெயை வைத்து நன்கு மசாஜ் செய்து, தூங்க வேண்டும்.

மசாஜ் செய்ய பயன்படுத்தும் எண்ணெய் ஆலிவ் அல்லது ஆமணக்கெண்ணெயை பயன்படுத்தினால் நல்லது. எண்ணெயை பயன்படுத்தி மசாஜ் செய்ததும், ஒரு காட்டனை வைத்து துடைத்துவிட்டு, பின் ஃபேஸ் வாஷை பயன்படுத்தலாம்.

ஒவ்வொரு முறை மேக்-கப்பை கலைக்கும் முன்னும் அல்லது பின்னும், மென்மையான துணியை நீரில் நனைத்து, கண்களுக்கு அடியில் துடைத்துவிட வேண்டும். மேற்கூறியவாறெல்லாம் செய்தால், காஜல் எளிதில் நீங்குவதோடு, கருவளையம் ஏற்படாமலும் இருக்கும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum