முழங்கால், முழங்கை கருப்பு நிறம் மறைய வேண்டுமா?
Page 1 of 1

உடலை எவ்வளவு தான் அழகாக வைத்திருந்தாலும், அவற்றின் அழகை முழங்கால் மற்றும் முழங்கை கெடுத்துவிடுகின்றன. ஏனெனில் மற்ற பகுதியை விட இந்த பகுதியானது கருப்பாக காணப்படும். மேலும் உடல் அழகாக காணப்பட வேண்டும் என்பதற்காக எத்தனை பராமரிப்புகளை மேற்கொண்டாலும், அதிலும் கால்களை கவனமாக பராமரித்தாலும் மென்மையாக, முடி இல்லாமல் அழகாக இருக்கும்.
ஆனால் அந்த நேரத்தில் முழங்கால் மட்டும் கருப்பாக இருந்தால், நாம் செய்யும் அனைத்தும் வீணாகிவிட்டது போல் இருக்கும். ஆகவே அத்தகைய அழகைக் கெடுக்கும் முழங்கால் மற்றும் முழங்கை கருப்பை எளிதில் நீக்க சில எளிய வழிகள்....
* தினமும் இரண்டு முறை எலுமிச்சை சாற்றை காட்டனில் நனைத்து, முழங்காலில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். வேண்டுமென்றால் இரவில் படுக்கும் முன்பு எலுமிச்சையின் தோலை வைத்து முழங்காலில் 4-5 நிமிடம் தேய்த்து, பின் காலையில் கழுவ வேண்டும். அதுவும் கழுவியதும் உடனே மாய்ஸ்சுரைசரை தடவ கூடாது. அதேப் போல் எலுமிச்சையை தடவுவதற்கு முன்பும் மாய்ஸ்சுரைசரை தடவ கூடாது.
* முழங்கால் அல்லது முழங்கைக்கு தேங்காய் எண்ணெயை தடவி 10 நிமிடம் மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து, பின் கழுவி விட வேண்டும். தேங்காய் எண்ணெயுடன் சிறிது எலுமிச்சை சாற்றை சேர்த்தும் இந்த மசாஜை செய்யலாம்.
* தயிருடன் சிறிது வினிகரை சேர்த்து கலந்து தடவி வந்தால், முழங்காலில் இருக்கும் கருப்பு படிப்படியாக நீங்கிவிடும்.
* பாதாம் எண்ணெயுடன் சர்க்கரை மற்றும் தேனை கலந்து, கருப்பான பகுதியில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.
* எப்போதும் வெளியே வெயிலில் செல்லும் போது சன் ஸ்கிரீன் லோசனை தடவி செல்ல வேண்டும். மேலும் இரவில் படுக்கும் முன், பாடி லோசனை தடவி படுத்தால், சருமம் நன்கு மென்மையாகி, ஈரப்பதத்துடன் இருக்கும்.
* கடுகு எண்ணெயுடன் சிறிது உப்பு சேர்த்து கலந்து, கருப்பாக இருக்கும் முழங்கை மற்றும் முழங்காலில் தடவி, 10 நிமிடம் மசாஜ் செய்து பின் கழுவ வேண்டும். இதனால் கருப்பான இடம் படிப்படியாக நிறம் மாறுவதை காணலாம். இந்த எளிய வழிமுறைகளை ட்ரை செய்து, உங்கள் முழங்கை மற்றும் முழங்காலை அழகாக வைத்துக் கொள்ளுங்கள்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» முழங்கால், முழங்கை கருப்பு நிறம் மறைய வேண்டுமா?
» முகத்தில் படர்ந்த கருப்பு நிறம் மாற
» கழுத்தின் கருப்பு நிறம் மறைய….
» முழங்கை கருப்பு மாற
» முழங்கை கருப்பு மாற
» முகத்தில் படர்ந்த கருப்பு நிறம் மாற
» கழுத்தின் கருப்பு நிறம் மறைய….
» முழங்கை கருப்பு மாற
» முழங்கை கருப்பு மாற
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum