சிகரெட்டில் 4 ஆயிரம் நச்சு ரசாயன கலவை
Page 1 of 1
சிகரெட்டில் 4 ஆயிரம் நச்சு ரசாயன கலவை
தமிழ்நாட்டில் புகை பழக்கம் உள்ளவர்கள் ஆண்கள் 24 சதவீதம் பெண்கள் 8.4 சதவீதம் மற்றும் 19 வயதுக்குள்ள இளைஞர்கள் அதிகமாக புகை பழக்கத்துக்கு அடிமையாக உள்ளதாக ஆய்வு கூறுகிறது.
நச்சு......
சிகரெட், பீடி புகையில் 4 ஆயிரம் நச்சு ரசாயனங்கள் உள்ளன. மெழுகு வண்ணபூச்சு அசிடிக் ஆசிட்சினிகள், மீத்தேன், சாக்கடை வாயு, காட்மியம் பேட்டரி தொழிற்சாலை சுரப்பி, வாகன புகை, மெத்தனால் ராக்கெட் எண்ணை, நிக்கோஷன் பூச்சி கொல்லி, ஆர்சனிக் நஞ்சு அம்மோனியா சோப்புதூள் உள்ளிட்ட 4 ஆயிரம் ரசாயனங்கள் கலந்து தயாரிக்கபடுகிறது.
இதில் 200 வகையான நச்சு பொருட்கள் புற்றுநோயை உண்டாக்க கூடியது. கருவுற்ற பெண்கள் அருகில் புகை பிடிப்பதால் தாயும், கருப்பையில் வளரும் சிசுவும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். சிகரெட் புகைப்பதால் மூளைகட்டி, மூளை வலிப்பு, பக்கவாதம், மார்பக புற்று நோய் நெஞ்சக நோய்கள், ஆஸ்துமா உள்பட பல நோய்கள் ஏற்படுகிறது.
தடை.......
இந்திய அரசு உத்தரவுபடி பொதுமக்கள் நுழைய அனுமதி உள்ள அனைத்து இடங்களிலும் புகை பிடிப்பது தடை செய்யபட்டுள்ளது. உணவு விடுதிகள் தங்கும் விடுதி, தியேட்டர், ஆஸ்பத்திரிகள், கல்வி, நிறுவனங்கள், திருமண மண்டபம், கூட்ட அரங்கு, நூலகம் விளையாட்டு அரங்கம், வணிக நிறுவனங்கள், கடைகள், தேனீர் விடுதிகள், பார்கள், கோர்ட்டு வளாகம் அரசு அலுவலகங்கள், பஸ், ரெயில் நிலையம், தொழிற்சாலைகள் உள்பட பொதுமக்கள் வந்து செல்லும் அனைத்து இடங்களிலும் புகைபிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொது இடத்தில் புகை பிடித்தால் ரூ.200 அபராதம் குற்ற வழக்கு தொடர சட்டத்தில் இடம் உள்ளது. வருமான வரி ஆய்வாளர்கள், சுகாதார இயக்குனர்கள், காவல்துறை உதவி ஆய்வாளர், மாநில உணவு மற்றும் மருந்துதுறை அதிகாரிகள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் தடை விதிக்கப்பட்ட நிறுவன பிரதிநிதிகள், ரெயில் நிலைய அதிகாரிகள், பயண சீட்டு பரிசோதகர், போக்குவரத்து கண்காணிப்பாளர்கள், பஸ் நிலைய அதிகாரிகள், பயண சீட்டு பரிசோதகர், கண்டக்டர்கள் ஆகியோர் பொது இடங்களில் புகை பிடிப்பதை தடுக்கும் அதிகாரம் படைத்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார துறையினர் புகையில்லா சமுதாயத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது.
புகை பழக்கத்தை கைவிட...
* மிகவும் உறுதியுடன் இருங்கள்
* கைவிடுவதற்கு ஒரு தேதியை நிர்ணயித்து கொண்டு அதை கண்டிப்பாக கடை பிடியுங்கள்
* புகை பழக்கத்தை தூண்டும் புகையிலை பொருட்கள், தீ மூட்டிகள், தீப்பெட்டிகள் மற்றும் சாம்பல் தட்டுகள் போன்றவற்றை தூக்கி வீசுங்கள் உங்கள் குடும்பத்தினரிடம் புகை பிடிப்பதை கைவிட ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்ளுங்கள்
* உங்களை புகை பிடிக்க தூண்டும் சந்தர்ப்பங்களை கண்டறிந்து அவற்றை தவிர்த்து விடுங்கள்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சிகரெட்டில் 4 ஆயிரம் நச்சு ரசாயன கலவை
» சிகரெட்டில் 4 ஆயிரம் நச்சு பொருட்கள்
» இதர நச்சு அகற்றும் பொருட்கள்
» பித்ததோஷத்திற்கேற்ற நச்சு அகற்றும் சூப்:
» கலவை சாதப் பொடி
» சிகரெட்டில் 4 ஆயிரம் நச்சு பொருட்கள்
» இதர நச்சு அகற்றும் பொருட்கள்
» பித்ததோஷத்திற்கேற்ற நச்சு அகற்றும் சூப்:
» கலவை சாதப் பொடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum