மூக்கு, தொண்டையை பாதுகாப்பது எப்படி?
Page 1 of 1
மூக்கு, தொண்டையை பாதுகாப்பது எப்படி?
மூக்கில் எந்தவிதமான சொட்டு மருந்துகளையும் விடக்கூடாது. மூக்கை பலமாக சிந்தக்கூடாது. மூக்குக்குள் விரலைவிட்டு குடையக்கூடாது. பொடி போடுவது கூடாது. தும்பல் குச்சியை விடக்கூடாது. அசுத்தமான காற்றை சுவாசிக்கக்கூடாது. அடுத்து நமது தொண்டைப் பகுதியும் மனித உடலுக்கு மிக பயனளிக்கும், உதவி புரியும் மிக முக்கியமான பகுதி. தொண்டையிலுள்ள டான்சில் ஒரு லெவல் கிராசிங் போன்றது.
உணவு குழாய்க்கு உணவையும், நுரையீரலுக்கு காற்றையும் அனுப்புவதற்கு வசதியாக வரும்போதும், காற்றைச் செல்லும்போதும், மூடித் திறந்து அதனதன் வழியில் செல்ல உதவுகிறது. அதுமட்டுமின்றி நம் உடலுக்குள் செல்லும் தேவையில்லாத பொருளுக்கு தடுப்புச் சக்தியை உண்டாக்க டான்சில் தயார்படுத்துகிறது. நம் தொண்டையில் ஏற்படும் பிரச்சினையென்று பார்த்தால் டான்சில் பிரச்சினைதான்.
இது வேகமா பாதிக்கப்படும் போது தொண்டைவலி, தொண்டைக் கமறல் ஏற்படுகிறது. டான்சில் மிகவும் பாதிக்கப்பட்டால் அது சிறுநீரகம், இருதயத்தையும் பாதிக்கக்கூடும். அதனால், டான்சில் என்று உணர்ந்த உடனே சிகிச்சை ஆரம்பித்துவிடுவது நல்லது. அதிலும் குழந்தைக்கு ஏற்படும் டான்சில் பிரச்சினையை முற்றிவிடாமல் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சையின் மூலம் சரி செய்ய வேண்டும்.
அதிகப்படியான சூடான உணவுகளையும், அதிகப்படியான குளிர்ச்சியான உணவுகளையும் தவிர்க்க வேண்டும். அதிகப்படியான சூடான மற்றும் குளிர்ந்த பானங்களை தவிர்க்க வேண்டும். சிகரெட், பான்பராக், பாக்கு போன்றவற்றை தவிர்க்க வேண்டும். சினிமா தியேட்டர், பஸ், ரெயில் பயணங்களில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். புகைப் பிடிக்கும் நபர்களின் அருகே நிற்பதை தவிருங்கள்.
நீண்ட நேரம் பேசுகிற சந்தர்ப்பங்களில் இடையிடையே தண்ணீர் அருந்த வேண்டும். கழுத்து நரம்புகள் புடைக்கும் அளவிற்கு சப்தமாக பேசுவதை தவிர்க்க வேண்டும். பற்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஒருநாளைக்கு இரு முறையாவது பற்களை சுத்தம் செய்யுங்கள். உப்பு தண்ணீரில் வாய் கொப்பளிக்க கூடாது. ஈ.என்.டி.சம்பந்தமாக வேறு என்னவெல்லாம் பிரச்சினையுள்ளது? குறட்டையும் ஒரு ஈ.என்.டி. சம்பந்தமான பிரச்சினைதான்.
நம்மில் பெரும்பாலும் குறட்டை என்பதை ஒரு குறைபாடாகவோ, நோயாகவோ உணர மறுக்கின்றனர். நாற்பத்தைந்து வயதுக்கு மேற்பட்டோரில் பாதிக்கும் அதிகமானவர்கள் குறட்டையால் பாதிக்கப்பட்டவர்கள்தான். இதில் முப்பது சதவிகிதம் பெண்களும் குறட்டை விடுபவர்களாக இருக்கிறார்கள். ஒருவர் தூக்கத்தில் குறட்டை விடுகிறார் என்றால், அவருக்கு மூக்கின் உள் பகுதியிலோ, தொண்டையிலிருந்து மார்புக்கு இடைப்பட்ட பகுதியிலோ அடைப்பு இருப்பதாக அர்த்தம்.
அதாவது மார்புக்கும், மூளைக்கும் சரியான விகிதத்தில் காற்று போகவில்லை என்று அர்த்தம். லேசான அளவில் குறட்டை விடும்போது பிரச்சினையில்லை. ஆனால் குறட்டையின் அளவு அதிகரிக்கும்போது அது ஒரு நோயாகிவிடும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மூக்கு, தொண்டையை பாதுகாப்பது எப்படி?
» பற்களை பாதுகாப்பது எப்படி?
» பாதங்களை பாதுகாப்பது எப்படி?
» பற்களை பாதுகாப்பது எப்படி?
» குறைமாதக் குழந்தையை பாதுகாப்பது எப்படி?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum