நுரையீரல் புற்றுநோய்
Page 1 of 1
நுரையீரல் புற்றுநோய்
புற்றுநோய் வகைகளை அறிந்து கொள்ளும் முன் நுரையீரலின் அனாடமி எப்படி செயல்படுகிறது போன்றவை பற்றி அறிதல் முக்கியம்.
நுரையீரல் உடலுக்கு சக்தியை தரும் ஆக்சிஜனை எடுத்துக் கொள்வதிலும் கரியமிலவாயுவை வெளியேற்றுவதிலும் முக்கிய உறுப்பாக செயல்படுகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 22 ஆயிரம் முறை மூச்சு விடும் நாம், கிட்டத்தட்ட 9 ஆயிரம் முறை காற்றை உள்ளிழுத்து வெளியிடுகிறோம்.
மூக்கின் வழியாக நாம் உள்ளிழுக்கும காற்று, காற்று குழாய் வழியாக நுரையீரலுக்கு செல்கிறது. காற்றுக் குழாய் இரண்டாக பிரிந்து வலது, இடது நுரையீரலுக்கு செல்கிறது. வலது நுரையீரல் மூன்று பாகமாகவும் இடது நுரையீரல் இரண்டு பிரிவாகவும் உள்ளது.
இரண்டாக பிரியும் பிரான்கியல் குழாய்கள் பல நுண் கிளைகளாக பிரிந்து அல்வியோல் எனப்படும் காற்றுப் பைகளில் முடியும். பல நுண்ணுயிர்க்குழாய்களாக பிரிந்து இருக்கும். அல்வியோலை எனப்படும் காற்றுப் பைகள் மிக மென்மையான தசைகளை கொண்டது.
இதில் பல நுண்ணிய ரத்தக்குழாய்கள் இருப்பதால், நுரையீரல் தமணி மூலமாக வந்த கரியமிலவாயு நிறைந்த ரத்தத்தில் உள்ள கரியமிலவாயு வெளியேறி, ஆக்சிஜனை ஏற்றுக் கொண்டு, நுரையீரல் சிறைகள் மூலமாக இதயத்திற்கு செல்கிறது.
பொதுவாக நுரையீரலில் சுரக்கும் சளி போன்ற திரவம் சில தூசிகளை அகற்றி வெளியேற்றும். காற்றுக் குழாயில் உள்ள சீலியா மேல் நோக்கி தூசுகளை கொண்ட மியுக்கசை வெளியேற்ற நாம் அறியாமலே அவற்றை விழுங்கி விடுகிறோம்.
உடல்நலம் சரியில்லாமல் போனால் மட்டுமே அவை சளியாக மூக்கின் வழியாக வெளியேறும். மூக்கிலேயே உள்ள ரோமம் கூட தூசுகளை வடிகட்டும். இதையும் தாண்டி ஏதேனும் தூசு உள் நுழைந்தால் இருமல், தும்முதல் ஆகியவை நீக்குதலிலும் ஈடுபடும்.
புற்றுநோய்க்கான புற காரணிகள்:-
காற்றில் உள்ள தூசு, இயந்திரங்கள் வெளியேற்றும் புகை, சிகரெட் புகை ஆகியவை ஆச்பெச்டாஸ் போன்றவை நுரையீரல் புற்றுநோய் வர முக்கிய காரணிகளாக இருக்கின்றன.
சில வீடுகளில் புகை நிறைந்த எரிபொருள் சமைக்க பயன்படுத்துவது காற்றினை மாசுபடுத்துகிறது. குளிர் காலத்தில் இதுபோன்ற புகை வீட்டிற்குள்ளேயே சுற்றுவதால் குழந்தைகளை அதிக அளவில் பாதிக்கிறது. எனக்கு நினைவு தெரிந்த வரையில் என் வீட்டிலேயே பலவகை எரிபொருட்களை பயன்படுத்தி இருக்கிறோம். (காகிதம், மரத்தூள், விறகு, வரட்டி பின் கெராசின் என்று பல பொருட்களை பயன்படுத்தி இருக்கிறோம்) இன்னும் சில பெண்கள் புகையை ஊதுகுழலை வைத்து ஊதி கண்சிவக்க இருமுவதையும், புகையை உள்ளிழுப்பதையும காணலாம்.
இதற்கு அடுத்தப்படியாக கட்டிடங்கள் கட்டிய பின்வரும் தூசிகள், ஆஸ்பெஸ்டாஸ் கூரை துணுக்கள் என்று பலவும் உடல்நலத்தை பாதிக்கிறது. வீடுகளில் உள்ள காற்றில் கலந்திருக்கும் பொருட்களில் கார்பன் டை ஆக்சைடு, பார்மால்டிஹைட், நைட்ரஜன் பெராக்சைடு, கார்பன் மோனோ ஆக்சைடு, ரேடான் எனப்படும் ரேடியோ கதிர்வீச்சு, பாசி, என்னும் நுண்ணுயிர் கிருமிகளின் முட்டைகள் என்பன சில முக்கியமானவை ஆகும்.
ஒருவர் புகை பிடிக்கும்போது அதிலிருந்து வெளிப்படும் காற்றின் விளைவால் வருடத்திற்கு 1,50,000 குழந்தைகள் முற்றிய நுரையீரல் நோயால் பாதிக்கப்படுவதோடு ஆண்டொன்றுக்கு 3 ஆயிரம் குழந்தைகள் இறக்கிறார்கள்.
உலகளவில் இது இன்னமும் அதிர்ச்சியூட்டும் எண்களை தரலாம். புகை பிடிப்பவரின் அருகில் இருப்போருக்கு கண் எரிச்சலும், இருமலும் ஏற்படுகிறது. இவர்களையும் மருத்துவ உலகு அழைக்கிறது.
சிகரெட் புகையில் 4 ஆயிரம் விதமான புற்றுநோய் மற்றும் வெகு துன்பம் தரக்கூடிய உடல் நலனுக்கு பாதகம் விளைவிக்க கூடிய வேதி பொருட்கள் கலந்திருக்கின்றன.
அடிக்கடி காது வலி, ஆஸ்துமா எனப்படும் மூச்சிழுப்பு பொதுவான அலர்ஜி, இருமல், நுரையீரல் சம்பந்தமான நோய்கள் ஏற்படுகிறது. கருவுற்ற பெண்மணியின் அருகில் புகை பிடிப்பதால், வருடத்திற்கு அமெரிக்காவில் 18,600 குழந்தைகள் குறைபாட்டுடன் பிறக்கின்றன. 3 லட்சம் குழந்தைகளுக்கு இருமலும், இருக்கின்றது. 1.6 மில்லியன் குழந்தைகள் காதில் கிருமிகள் வளர்வதால், காது வலியும் சீழும் ஏற்படுவதாக மருத்துவ அறிக்கைகள் கூறுகின்றன.
வெளியே பால்கனியில் புகை பிடித்தாலும், கார் கராஜில் பிடித்தாலும் உள்ளே வந்த 5 மணித்துளிகளில் புகைப்பவரின் சுவாசத்திலிருந்து இந்த வேதி பொருட்கள் வெளிப்படுகின்றன.
இப்போதெல்லாம் இங்கு குழந்தைகள் காப்பகத்தில் புகைப்பது குற்றம். சட்டப்படி அது தடை செய்யப்பட்டு விட்டது. இதை விட காரில் நெடுந்தூரம் பயணிப்பவர்கள் புகைக்கும்போது பின் இருக்கையில் உள்ள குழந்தை அந்த காற்றை சுவாசிக்க நேருகிறது.
இதை தடுக்க காரில், வீட்டில் புகைக்காதீர்கள். புகைப்பதை நிறுத்துவது மிகவும் நல்லது. முடியாதவர்கள் குறைந்த அளவில் குழந்தைகளின் நலனை கருத்தில் கொள்ளுவது சிறந்தது. புகைப்பவர் அருகில் குழந்தைகளை இருக்க விடாதீர்கள்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நுரையீரல் புற்றுநோய்
» நுரையீரல் நுரையீரல்
» நுரையீரல் பலப்பட
» நுரையீரல் பலப்பட
» நுரையீரல் வலி குறைய
» நுரையீரல் நுரையீரல்
» நுரையீரல் பலப்பட
» நுரையீரல் பலப்பட
» நுரையீரல் வலி குறைய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum