தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எதற்கும் அளவு வேண்டும்

Go down

எதற்கும் அளவு வேண்டும் Empty எதற்கும் அளவு வேண்டும்

Post  birundha Sun Jan 27, 2013 2:52 pm

* பணம்,பேச்சு, நாம் செய்யும் செயல் எல்லாவற்றிலும் அளவுடன் இருக்க வேண்டும். ஆசையாய் இருக்கிறது என்பதற்காக அவசியமில்லாத அல்லது தீமைகளைத் தருகின்ற செயல்களைச் செய்யவே கூடாது.
* சத்தியம் என்றால் வாக்கும், மனசும் ஒன்றுபடுவது மட்டுமல்ல. நல்ல மனதில் தோன்றுகின்ற நல்ல எண்ணங்களை வாக்கில் சொல்வதே சத்தியம் ஆகும்.
* போட்டி பொறாமை இருக்கும் வரையில் யாருக்கும் மனநிறைவு உண்டாவதில்லை. தேவைகளை அதிகப்படுத்திக் கொண்டே போவதால் வேண்டாத செயல்களைச் செய்து பின்னர் அவதிப்பட நேரிடும்.
* தர்மம், நீதி என்னும் இரண்டும் சேர்ந்து தான் பண்பு உண்டாகிறது. மனசில் உள்ள அசுத்தங்கள் நீங்கினால் அது தானாகவே பரமாத்மாவின் மீது திரும்பி விடும்.
* பெரும்பாலும் நம்முடைய கோபத்தினால் நமக்கே தீங்கு செய்தவர்களாகிறோம். கோபத்தினால் நமக்கும் நன்மையில்லை. மற்றவர்களுக்கும் நன்மை இல்லை.
* பித்ரு காரியங்களுக்கு சிரத்தை வேண்டும். தெய்வ காரியங்களுக்கு பக்தி வேண்டும்.
* முதலில் வெளி அடக்கம் உண்டானால் தான் கொஞ்சம் கொஞ்சமாக உள் அடக்கம் சித்திக்கும். எங்கிருந்தாலும், எந்தப் பணி செய்தாலும் பகவானின் குணங்களைக் கேட்பதை லட்சியமாகக் கொள்ள வேண்டும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» எதற்கும் அளவு வேண்டும்
» சைக்கிள் ஓட்டுவதால் எரிக்கப்படும் கலோரியின் அளவு சைக்கிள் பயிற்சியை முதலில் மெதுவாக ஆரம்பித்து பின் படிப்படியாக வேகத்தை அதிகரிக்க வேண்டும். சராசரி ஆண் மற்றும் பெண் ஒரு மணி நேரம் சைக்கிள் ஓட்டுதல் மூலம் எரிக்கபடும் கலோரிகள். * மெதுவாக சைக்கிள் ஓட
» எதற்கும் துணிந்தவள்
» எதற்கும் ஒரு காலம் உண்டு
» எதற்கும் கவலை கொள்ளாதே!!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum