ஆண்களை அதிகம் பாதிக்கும் அரிப்பு
Page 1 of 1
ஆண்களை அதிகம் பாதிக்கும் அரிப்பு
உலகிலுள்ள மக்களில், சுமார் 45 சதவீதம் பேருக்கு, ஆசனவாய் அரிப்பு, நமைச்சல் ஏற்படத்தான் செய்கிறது. பெண்களை விட ஆண்களே, இந்த அரிப்புப் பிரச்சினையில் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். பகலை விட இரவில் தான் இந்த அரிப்பு, அதிக தொந்தரவைக் கொடுக்கும். நிறைய பேரின் தூக்கத்தைக் கெடுக்கும். ஆசனவாய் அரிப்பு என்பது ஒரு நோயல்ல. இது ஒரு நோயின் அறிகுறியே.
எனவே ஏன் இந்த இடத்தில் அரிப்பு வருகிறது என்பதைக் கண்டுபிடித்து, அதைக் குணப்படுத்தினால், அரிப்பு தன்னாலே சரியாகி விடும். அதிக எடையுடன், அதிக தடியாக இருப்பவர்களுக்கு, இந்த ஆசனவாய் நமைச்சல் ஏற்பட அதிக வாய்ப்புண்டு. ஜட்டி போன்ற உள்ளாடைகளை மிக இறுக்கமாக அணியும் ஆண், பெண் இருவருக்கும் இந்த அரிப்பு ஏற்பட அதிக வாய்ப்புண்டு.
தொடர்ந்து அதிக நேரம், ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது கூட, ஆசனவாயில் அரிப்பை உண்டு பண்ணும். வயிற்றிலுள்ள புழுக்கள் (கொக்கிப்புழு, தட்டைப்புழு, ஊசிப்புழு) ஆசன வாய்ப் பகுதியை விட்டு வெளியே வந்து விட்டு, மறுபடியும் உள்ளே சென்று விடும். அப்பொழுது அரிப்பு ஏற்பட வாய்ப்புண்டு.
எனவே ஆண்டுக்கு ஒருமுறையோ அல்லது இருமுறையோ, மலத்தை டெஸ்ட் பண்ணி, புழுக்கள் இருப்பதாகத் தெரிந்தால், புழுக்கள் இறப்பதற்குண்டான மருந்துகளைச் சாப்பிட்டு, சரி பண்ணிக் கொள்ளலாம். மேலும் வயிற்றில் புழுக்கள் சேராமலிருக்க, சைவ உணவுகளான கீரை மற்றும் காய்கறிகளையும் அசைவ உணவுகளான சிக்கன், மட்டன் முதலியவைகளையும், நன்றாக வேக வைத்து, நன்கு கொதிக்க வைத்து சாப்பிடலாம்.
அதிககாரமுள்ள, அதிக அமிலமுள்ள உணவு வகைகளைச் சாப்பிட்டால், அவைகள் உடம்புக்கு ஒத்துக்கொள்ளாமல், சாப்பிட்டு முடித்தபின், வயிறு எரிய ஆரம்பித்து, பின் ஆசன வாயும் எரியும். அதன்பின் அரிப்பும் ஏற்படும். எனவே ஆசன வாய் அரிப்பு, எரிச்சலைத் தவிர்க்க, உணவில் காரத்தைக் குறைக்கலாம்.
ஆசன வாய்ப்பகுதியை, ரொம்ப சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று சிலர் நினைத்துக் கொண்டு, சோப்பு அது, இது என்று எதையாவது உபயோகித்து, ஏகப்பட்ட முறை கழுவி, சுற்றியிருக்கும் மென்மையான தோல் பகுதியை பாதிக்கச் செய்து வருகிறார்கள். இது பின்னாளில் ஆசனவாய்ப் பகுதியில் அரிப்பு மற்றும் எரிச்சலை உண்டு பண்ணி விடும். நான் மேலே சொன்னதற்கு நேர்மாறாக, சிலபேர் டூ பாத்ரூம் போய் வந்தால், ஆசன வாய்ப் பகுதியை ஒழுங்காகக் கழுவாமல், கைகளையும் ஒழுங்காகக் கழுவாமல், வேக வேகமாக ஓடி வந்து விடுவார்கள்.
இது மிக மிக சுகாதாரக் குறைவான ஒரு விஷயமாகும். மிகஅதிகமாகக் கழுவுவதும் சரியல்ல, ஒழுங்காகக் கழுவாமல் இருப்பதும் சரியல்ல. ஆசன வாய்ப்பகுதியில் கட்டி உண்டாவதற்கு முன்பு அரிப்பு ஏற்படலாம். ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து, மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு, கட்டி அதிகமாகாமல், குணப்படுத்திக் கொள்வது நல்லது.
தக்காளி, எலுமிச்சம்பழம் போன்ற வைட்டமின் `சி' சத்து அதிகமுள்ள பழங்களை அதிகமாக சாப்பிட்டால், அரிப்பு மற்றும் எரிச்சல் சிலருக்கு ஏற்படலாம். அப்படி ஏற்படுகிறவர்கள், இந்தப் பழங்களைக் குறைத்துக் கொள்வது நல்லது. சர்க்கரை வியாதி, பால்வினை நோய்கள், மஞ்சட்காமாலை, சோரியாஸிஸ், மூலம், வயிற்றுப்போக்கு, தோல் வியாதி, தோலில் ஏற்படும் அலர்ஜி, இவைகளெல்லாம் கூட ஆசனவாய்ப்பகுதியில் எரிப்பு மற்றும் எரிச்சலை உண்டு பண்ணும்.
எனவே மேற்கூறிய நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள், அந்தந்த நோய்களுக்கான சிகிச்சையை ஒழுங்காக எடுத்துக் கொண்டால், அரிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விடும். சிறிய குழந்தைகள் டூ பாத்ரூம் போய்விட்டு வந்த பின், பெற்ற தாயில்லாத இடத்தில், மற்றவர்கள் சரிவர கழுவாமல், ஏனோதானோவென்று அரைகுறையாக கழுவிவிட்டு விடுவார்கள்.
ஒழுங்காக கழுவப்பட்டதா, இல்லையா என்று குழந்தைகளுக்குத் தெரியாது. இம்மாதிரி குழந்தைகளுக்கு ஆசனவாயில் அரிப்பு ஏற்பட அதிக வாய்ப்புண்டு. பீர், ஒயின் போன்ற மதுவகைகள் கூட அரிப்பை ஏற்படுத்தும். சில சக்திவாய்ந்த ஆன்டிபயாட்டிக் மருந்துகள் தொடர்ந்து அதிக நாட்கள் சாப்பிடும் போது, ஆசனவாயில் அரிப்பை ஏற்படுத்தும்.
எனவே எந்த நோய்க்காக, ஆன்டிபயாடிக் மருந்துகள் சாப்பிடுகிறோமோ, அந்த நோய் குணமானதும், உங்கள் குடும்ப டாக்டரைக் கேட்டுக் கொண்டு அந்த ஆன்டிபயாடிக் மருந்துகளை நிறுத்தி விடுங்கள். தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருக்காதீர்கள். ஆசனவாய்ப் பகுதியிலுள்ள பிரச்சினைகளுக்காக உபயோகப்படுத்தும் ஆயின்மென்ட், க்ரீம், சோப், எண்ணெய், பவுடர், வாசனைத் திரவியங்கள், ஸ்ப்ரே, சென்ட் முதலியவைகள் கூட அரிப்பை ஏற்படுத்தும்.
ஆசனவாய்ப்பகுதியில் அரிப்பு, நமைச்சல், எரிச்சல் என்று இதையெல்லாம் கூட எழுதுகிறேனே என்று சிலர் யோசிக்கலாம். நம்மையறியாமலேயே நாம் அன்றாடம் செய்யும் சில தவறுகள்தான், பெரிய நோயில் கொண்டு போய் விட்டு விடுகிறது. நம் உடம்பை சுத்தமாக வைத்துக் கொள்ள, நாம் ஏன் அசிங்கம் பார்க்க வேண்டும்.
ஆண்களை அதிகம் பாதிக்கும் அரிப்பு உலகிலுள்ள மக்களில், சுமார் 45 சதவீதம் பேருக்கு, ஆசனவாய் அரிப்பு, நமைச்சல் ஏற்படத்தான் செய்கிறது. பெண்களை விட ஆண்களே, இந்த அரிப்புப் பிரச்சினையில் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். பகலை விட இரவில் தான் இந்த அரிப்பு, அதிக தொந்தரவைக் கொடுக்கும். நிறைய பேரின் தூக்கத்தைக் கெடுக்கும். ஆசனவாய் அரிப்பு என்பது ஒரு நோயல்ல.
இது ஒரு நோயின் அறிகுறியே. எனவே ஏன் இந்த இடத்தில் அரிப்பு வருகிறது என்பதைக் கண்டுபிடித்து, அதைக் குணப்படுத்தினால், அரிப்பு தன்னாலே சரியாகி விடும். அதிக எடையுடன், அதிக தடியாக இருப்பவர்களுக்கு, இந்த ஆசனவாய் நமைச்சல் ஏற்பட அதிக வாய்ப்புண்டு. ஜட்டி போன்ற உள்ளாடைகளை மிக இறுக்கமாக அணியும் ஆண், பெண் இருவருக்கும் இந்த அரிப்பு ஏற்பட அதிக வாய்ப்புண்டு.
தொடர்ந்து அதிக நேரம், ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது கூட, ஆசனவாயில் அரிப்பை உண்டு பண்ணும். வயிற்றிலுள்ள புழுக்கள் (கொக்கிப்புழு, தட்டைப்புழு, ஊசிப்புழு) ஆசன வாய்ப் பகுதியை விட்டு வெளியே வந்து விட்டு, மறுபடியும் உள்ளே சென்று விடும். அப்பொழுது அரிப்பு ஏற்பட வாய்ப்புண்டு.
எனவே ஆண்டுக்கு ஒருமுறையோ அல்லது இருமுறையோ, மலத்தை டெஸ்ட் பண்ணி, புழுக்கள் இருப்பதாகத் தெரிந்தால், புழுக்கள் இறப்பதற்குண்டான மருந்துகளைச் சாப்பிட்டு, சரி பண்ணிக் கொள்ளலாம். மேலும் வயிற்றில் புழுக்கள் சேராமலிருக்க, சைவ உணவுகளான கீரை மற்றும் காய்கறிகளையும் அசைவ உணவுகளான சிக்கன், மட்டன் முதலியவைகளையும், நன்றாக வேக வைத்து, நன்கு கொதிக்க வைத்து சாப்பிடலாம்.
அதிககாரமுள்ள, அதிக அமிலமுள்ள உணவு வகைகளைச் சாப்பிட்டால், அவைகள் உடம்புக்கு ஒத்துக்கொள்ளாமல், சாப்பிட்டு முடித்தபின், வயிறு எரிய ஆரம்பித்து, பின் ஆசன வாயும் எரியும். அதன்பின் அரிப்பும் ஏற்படும். எனவே ஆசன வாய் அரிப்பு, எரிச்சலைத் தவிர்க்க, உணவில் காரத்தைக் குறைக்கலாம். ஆசன வாய்ப்பகுதியை, ரொம்ப சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று சிலர் நினைத்துக் கொண்டு, சோப்பு அது, இது என்று எதையாவது உபயோகித்து, ஏகப்பட்ட முறை கழுவி, சுற்றியிருக்கும் மென்மையான தோல் பகுதியை பாதிக்கச் செய்து வருகிறார்கள்.
இது பின்னாளில் ஆசனவாய்ப் பகுதியில் அரிப்பு மற்றும் எரிச்சலை உண்டு பண்ணி விடும். நான் மேலே சொன்னதற்கு நேர்மாறாக, சிலபேர் டூ பாத்ரூம் போய் வந்தால், ஆசன வாய்ப் பகுதியை ஒழுங்காகக் கழுவாமல், கைகளையும் ஒழுங்காகக் கழுவாமல், வேக வேகமாக ஓடி வந்து விடுவார்கள். இது மிக மிக சுகாதாரக் குறைவான ஒரு விஷயமாகும். மிகஅதிகமாகக் கழுவுவதும் சரியல்ல, ஒழுங்காகக் கழுவாமல் இருப்பதும் சரியல்ல.
ஆசன வாய்ப்பகுதியில் கட்டி உண்டாவதற்கு முன்பு அரிப்பு ஏற்படலாம். ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து, மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு, கட்டி அதிகமாகாமல், குணப்படுத்திக் கொள்வது நல்லது. தக்காளி, எலுமிச்சம்பழம் போன்ற வைட்டமின் `சி' சத்து அதிகமுள்ள பழங்களை அதிகமாக சாப்பிட்டால், அரிப்பு மற்றும் எரிச்சல் சிலருக்கு ஏற்படலாம். அப்படி ஏற்படுகிறவர்கள், இந்தப் பழங்களைக் குறைத்துக் கொள்வது நல்லது.
சர்க்கரை வியாதி, பால்வினை நோய்கள், மஞ்சட்காமாலை, சோரியாஸிஸ், மூலம், வயிற்றுப்போக்கு, தோல் வியாதி, தோலில் ஏற்படும் அலர்ஜி, இவைகளெல்லாம் கூட ஆசனவாய்ப்பகுதியில் எரிப்பு மற்றும் எரிச்சலை உண்டு பண்ணும். எனவே மேற்கூறிய நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள், அந்தந்த நோய்களுக்கான சிகிச்சையை ஒழுங்காக எடுத்துக் கொண்டால், அரிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விடும்.
சிறிய குழந்தைகள் டூ பாத்ரூம் போய்விட்டு வந்த பின், பெற்ற தாயில்லாத இடத்தில், மற்றவர்கள் சரிவர கழுவாமல், ஏனோதானோவென்று அரைகுறையாக கழுவிவிட்டு விடுவார்கள். ஒழுங்காக கழுவப்பட்டதா, இல்லையா என்று குழந்தைகளுக்குத் தெரியாது. இம்மாதிரி குழந்தைகளுக்கு ஆசனவாயில் அரிப்பு ஏற்பட அதிக வாய்ப்புண்டு. பீர், ஒயின் போன்ற மதுவகைகள் கூட அரிப்பை ஏற்படுத்தும்.
சில சக்திவாய்ந்த ஆன்டிபயாட்டிக் மருந்துகள் தொடர்ந்து அதிக நாட்கள் சாப்பிடும் போது, ஆசனவாயில் அரிப்பை ஏற்படுத்தும். எனவே எந்த நோய்க்காக, ஆன்டிபயாடிக் மருந்துகள் சாப்பிடுகிறோமோ, அந்த நோய் குணமானதும், உங்கள் குடும்ப டாக்டரைக் கேட்டுக் கொண்டு அந்த ஆன்டிபயாடிக் மருந்துகளை நிறுத்தி விடுங்கள்.
தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருக்காதீர்கள். ஆசனவாய்ப் பகுதியிலுள்ள பிரச்சினைகளுக்காக உபயோகப்படுத்தும் ஆயின்மென்ட், க்ரீம், சோப், எண்ணெய், பவுடர், வாசனைத் திரவியங்கள், ஸ்ப்ரே, சென்ட் முதலியவைகள் கூட அரிப்பை ஏற்படுத்தும். ஆசனவாய்ப்பகுதியில் அரிப்பு, நமைச்சல், எரிச்சல் என்று இதையெல்லாம் கூட எழுதுகிறேனே என்று சிலர் யோசிக்கலாம்.
நம்மையறியாமலேயே நாம் அன்றாடம் செய்யும் சில தவறுகள்தான், பெரிய நோயில் கொண்டு போய் விட்டு விடுகிறது. நம் உடம்பை சுத்தமாக வைத்துக் கொள்ள, நாம் ஏன் அசிங்கம் பார்க்க வேண்டும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பெண்களை அதிகம் பாதிக்கும் `ஹெர்னியா'!
» ஆண்குழந்தைகளை அதிகம் பாதிக்கும் ஆட்டிசம்
» பெண்களை அதிகம் பாதிக்கும் `ஹெர்னியா'!
» பெண்களை அதிகம் பாதிக்கும் வெள்ளைப்படுதல்
» பெண்களை அதிகம் பாதிக்கும் கணுக்கால் வலி
» ஆண்குழந்தைகளை அதிகம் பாதிக்கும் ஆட்டிசம்
» பெண்களை அதிகம் பாதிக்கும் `ஹெர்னியா'!
» பெண்களை அதிகம் பாதிக்கும் வெள்ளைப்படுதல்
» பெண்களை அதிகம் பாதிக்கும் கணுக்கால் வலி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum