தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அனீமியா (ரத்தசோகை) வகைகள்

Go down

அனீமியா (ரத்தசோகை) வகைகள் Empty அனீமியா (ரத்தசோகை) வகைகள்

Post  meenu Sun Jan 27, 2013 1:46 pm

உலகெங்கும், குறிப்பாக நம் இந்தியாவை மிக வாட்டும் ஒரு நோய் அனீமியா என அழைக்கப்படும் `ரத்தசோகை'. இந்த சோகை என்னும் சொல்லியே ஒரு சோகம் ஒளிந்திருப்பதை கவனிக்கவும். வளம் குறைந்த நலிந்த சிவப்பு அணுக்கள் தேவையான அளவு பிராணவாயுவை திசுக்களுக்கு கொண்டு செல்ல முடியாத ஒரு சோகமே அனீமியா எனப்படும்.

இதன் அறிகுறிகள் என்னென்ன?

தளர்ச்சி, தோல் வெளுத்துப்போதல், இதய துடிப்பு அதிகமாதல், அடிக்கடி மூச்சு வாங்குதல், தலை சுற்றல், தலைவலி, கை,கால் ஜில்லிட்டுப் போதல். நோயின் கடுமையைப் பொருத்து மேற்கூறிய அறிகுறிகளின் தாக்கம் அமையும். மேற்கூறியவற்றுள் ஏதேனும், தொடர்ந்து இருந்து வந்தால் டாக்டரை உடனே ஆலோசிப்பது மிகவும் முக்கியம்.

ஒரு எளிய ரத்தப் பரிசோதனை மூலம் இதை உடனே கண்டுபிடித்து சிகிச்சை அளிக்க முடியும். ரத்தத்தில் இருக்கும் ப்ளாஸ்மா, சிவப்பு, வெள்ளை அணுக்கள், சத்துப்பொருள்கள், வைட்டமின்கள் பற்றி பார்த்தோம். சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையான அல்லது ஹீமோக்ளோபினின் அளவோ குறைவதால் அனீமியா ஏற்படுகிறது.

இவை உற்பத்தியாகும் இடம் எலும்பு மஜ்ஜை. வலு குறைந்த சிவப்பணுக்கள் மரிக்கையில், மேலும் மேலும் இதுபோன்ற செல்களையே உடலின் எலும்பு மஜ்ஜை உற்பத்தி செய்யும் நிலை ஏற்பட்டு, நோய் கடுமையாகிறது. (உரமிடாத நிலத்தில் தொடர்ந்து பயிரிடும் போது, அடுத்து வரும் பயிர்கள் வளம் குறைந்து விளைவது போல!) இவைகளால் அதிக அளவில் பிராணவாயுவைச் சுமக்க முடியாததால் திசுக்கள் வலுவிழந்து சோர்வு ஏற்படுகிறது. இப்போது அனீமியாவின் வகைகளைப் பார்ப்போம்.

1. இரும்புச்சத்து குறைவால் வரும் ரத்த சோகை: ஐந்தில் ஒருவர் என்ற கணக்கில் பெண்களை வாட்டுவது இது. எலும்பு மஜ்ஜை ஹீமோக்ளோபினை உற்பத்தி செய்ய இரும்புச்சத்து மிகவும் தேவையான ஒன்று. சிவப்பு அணுக்கள் இறக்கும்போது (ஒரு ஆரோக்கியமான சிவப்பணு சுமார் 90-120 நாட்களுக்கு உயிர் வாழும், நம் உடம்பில்) அதில் இருக்கும் இரும்பு சத்து மீண்டும் புதிய செயல்களுக்கு பயன்படுகிறது.

மாதவிலக்கு அதிகமாகப் போகும் பெண்கள், குடல் புண் எனச்சொல்லப்படும் அல்ஸர் நோய், குடல் புற்றுநோய் போன்ற நோய்களால் ரத்தம் உடலில் இருந்து வீணாகும் பொது இந்த வகை ரத்த சோகை ஏற்படும். இரும்புசத்து குறைந்த உணவாலும் ரத்த சோகை ஏற்படும். கர்ப்பமுற்ற காலத்தில் வளரும் கருவும் தாயின் ரத்தத்தில் இருந்து இரும்புச்சத்தை எடுத்து கொள்வதாலும் இது வரும்.

2. வைட்டமின் குறைவால் வரும் அனீமியா: போலேட் பி.12 வைட்டமின்கள் வலுவான சிவப்பு அணுக்கள் உருவாகத் தேவையானவை. உணவில் மூலமே இவை நமக்கு கிடைக்கின்றன. சிறுகுடலில் உறிஞ்சப்படும் இந்த வைட்டமின்கள், குடல் நோயால் அவ்வாறு நிகழாமல், இவ்வகை அனீமியா வருகிறது.

3. நீண்டகால நோய்களால் வரும் அனீமியா: புற்றுநோய் ருமடாய்ட் அர்த்ரைடிஸ் என்னும் எலும்பு முடக்குநோய், க்ரோன்ஸ் நோய் எனப்படும் குடல் கணக்கம், காசநோய் இன்னும் பல நீண்டகால நோய்கள், சிவப்பு அணுக்கள் உற்பத்தியை பாதிக்கின்றன. இந்த நோய்களுக்காக கொடுக்கப்படும் மருந்துகளின் விரீயத்தாலும் இது நிகழும்.

4. ஏப்ளாஸ்டிக் அனீமியா: எலும்பு மஜ்ஜை தன் சக்தியை இழப்பதால் ஏற்படும் இவ்வகை சோகை உயிருக்கே உலை வகைக்கும் மிகக்கொடிய நோய்! இது ஒரு வகையான ஆட்டோ இம்யூன் நோய் அதாவது உடலே தனக்குதானே ஒரு எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக் கொள்ளும். சிலவகையான மருந்து வகைகளும் இதனை உண்டாக்கலாம். முக்கியமாக புற்றுநோய் மருந்துகள். இது எல்லாவகையான ரத்தசெல்களையும் பாதிக்கும்.

5. எலும்பு மஜ்ஜை நோயால் வரும் அனீமியா: லுகீமியா, மைலோ டிஸ்ப்ளே மல்டியில் மைலோமா லிம்போமா போன்ற நோய்கள் எலும்பு மஜ்ஜையைத் தாக்கி ரத்த உற்பத்தியை தடுக்கும். இவையெல்லாம் புற்றுநோய் வகையைச் சார்ந்தவை. நம் திரைப்படங்களில் அடிக்கடி பயன்படுத்தப்படும் ப்ளட் கேன்ஸர் என்பது இதுதான்.

6. ஹிமோலைக் அனீமியா: எலும்பு மஜ்ஜை உற்பத்தி செய்யும் அளவைவிட அதிக அளவில் சிவப்பு அணுக்கள் மரிக்கும்போது, தேவையான வேகத்தில் இவைகளை அனுப்ப முடியாமல் போகும் நிகழ்வுக்கு இப்பெயர். ஆட்டோ இம்ம்யூன் நோய்களும் பல மருந்து வகைகளும் இதற்கு காரணங்கள். இந்நிலையில் உடல் மஞ்சள் நிறமாக மாறி மஞ்சள் காமாலை ஏற்படுகிறது.

7. சிக்கில் செல் அனீமியா: ஹீமோக்ளோபினில் ஏற்படும் ஒரு மாறுதலால் வரும் இந்நோய் ஆப்பிரிக்க, அரேபிய இன மக்களிடம் அதிகமாகக் காணப்படுகிறது. வளைந்த அரிவாள் வடிவில் சிவப்பு அணுக்கள் உருமாறி, அதிகம் பிராணவாயுவை எடுத்து செல்ல முடியாமல் போய் உடலைப் பாதிக்கும். சில சமயம் உயிருக்கே ஆபத்தாயும் முடியும்.

8. இன்னும் பல வகையான அனீமியாக்கள் இருக்கின்றன. இவை மிகவும் அரிதானதால் சொல்லாமல் விடுகிறேன் என்கிறார் டாக்டர் எம்.எஸ்.திவ்யா. *
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum