தற்காலிகமாக ஏற்படும் சிறுநீரக செயலிழப்பு
Page 1 of 1

சிறுநீரக செயலிழப்பு திடீரென ஏற்படும்போது அதற்கு உடனடியாக அவசர சிகிச்சை செய்வது மிகவும் அவசியமாகும். சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகின்றபோது ரத்தத்தில் `யூரியா' அதிகரிக்கும். இத்துடன் சிறுநீரின் அளவும் குறைந்துவிடும். இவை இரண்டும் சிறுநீரக செயலிழப்பினை அறிந்து கொள்ள பயன்படும் மிக முக்கியமான அறிகுறிகளாகும்.
சிறுநீரகத்திற்கு குறைவான ரத்தம் ஓட்டம் ஏற்படுவதால் சிறுநீரக நோய்களின் காரணமாக ஏற்படுவது, சிறுநீரகத்தில் இருந்து வெளிப்படும் `சிறுநீர்' வெளியேற முடியாதவாறு `நீர்தாரை' குழாய்களில் அடைப்பு போன்ற காரணங்களால் செயலிழக்கிறது.
சிறுநீரகத்திற்கு போதுமான ரத்த ஓட்டம் இல்லாததற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அதிகமான வாந்தி, வயிற்றோட்டம் ரத்த இழப்பு ஆகிய காரணங்களினால் இது ஏற்படலாம்.
இதய செயலிழப்பு ரத்தத்தில் நுண்கிருமிகளின் பெருக்கம், கணைய அழற்சி, காலரா, கல்லீரல் செயலிழப்பு ஆகியவற்றின் காரணமாக சிறநீரக ரத்த ஓட்டம் குறைந்து அதனால் செயலிழப்பு ஏற்படலாம். அதிக ரத்த இழப்பு விபத்தினாலோ, வேறு உள் நோய்களின் காரணமாகவோ ஏற்படலாம். இதனாலும் சிறுநீரக செயழிப்பு ஏற்படும்.
உடலில் அதிகப்படியாக ரத்த இழப்பு ஏற்படுகின்றபோது அதனை சரிசெய்ய உடலில் ஏற்படும் பல்வேறு உயிரியல் மாற்றங்கள் நிகழ்ந்து அதனை சரிசெய்ய முயலும். இதன் காரணமாக உடலிலுள்ள ஓரளவு ரத்தம் உடல் இயக்கத்திற்கும், உயிர் வாழ்வதற்கும் மிகவும் தேவையான மூளை, இதயம் போன்ற பகுதிகளுக்கு செலுத்தப்படும்.
அதே நேரம் தோல், குடல், சிறுநீரகம் போன்ற பகுதிகளுக்கு செல்லும். ரத்தத்தின் அளவு குறைந்து விடும். இதன் காரணமாக போதுமான ரத்தமின்மையால் செயலிழக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
சிறுநீரக நோய்கள் காரணமாக சிறுநீரகம் செயலிழக்க நேரிடும். பல்வேறு பாக்டீரியாக்களின் தாக்கத்தினால் `அழற்சி' ஏற்பட்டு அதன் காரணமாக சிறுநீரக செயழலிப்பு ஏற்படலாம். இணைப்பு திசுக்கள் நோய்களினாலும் எய்ட்ஸ் நோயினாலும் சிறுநீரகம் பாதிக்கப்படலாம்.பல்வேறு மருந்துகளின் பாதிப்பினாலும் சிறுநீரகம் பாதிக்கப்படலாம்.
நுண்ணுயிர் கொல்லி மருந்துகள், உடல் வலியை போக்க உதவும் மருந்துகள், சிறுநீரை அதிகமாக வெளியேற்ற உதவும் மருந்துகள், காசநோய்க்கான பல்வேறு வகையான மருந்துகள் ஆகியவற்றினாலும் சிறுநீரகம் பாதிக்கப்படலாம்.
கழிவுப் பொருட்களை வெளியேற்ற `டயாலிசிஸ்' செய்ய வேண்டியது வரலாம். ரத்தத்தில் மேற்கூறிய சிகிச்சை செய்தும் யூரியா அமிலத்தன்மை மிகுந்தாலும், பொட்டாஷியம் அதிகமாக இருந்தாலும் இதய செயலிழப்பு இருந்தாலும் இவர்களுக்கு செயற்கை முறையில் கழிவுப் பொருட்களை வெளியேற்ற வேண்டியது வரும். முழுமையாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓரளவு உடல்நிலை சீரானவுடன் சிறுநீரக மாற்று சிகிச்சை தேவைப்படலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நிரந்தர சிறுநீரக செயலிழப்பு!
» சிறுநீரக கல்
» சிறுநீரக கல்
» சிறுநீரக பாதிப்புகள்
» சிறுநீரக கோளாறுகளுக்கு
» சிறுநீரக கல்
» சிறுநீரக கல்
» சிறுநீரக பாதிப்புகள்
» சிறுநீரக கோளாறுகளுக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum