சிறுநீரக கற்களை அறிவதற்கான பரிசோதனைகள்
Page 1 of 1
சிறுநீரக கற்களை அறிவதற்கான பரிசோதனைகள்
பல்வேறு காரணங்களினால் எவ்வாறு சிறுநீரகக் கற்கள் ஏற்படுகின்றன. என்பதைக் குறித்தும், சிறுநீரகக் கற்களின் பல்வேறு வகைகளை குறித்தும் அறிந்து கொண்டோம். இனி `சிறுநீரகக் கற்களால்' தோன்றும் நோய் அறிகுறிகளையும் இதற்கான ஆய்வுக் கூடப் பரிசோதனைகளையும், சிகிச்சைகளையும் குறித்து அறிந்து கொள்ளலாம்.
சிறுநீரகக் கற்களால் தோன்றும் நோய் அறிகுறிகள்:
ஒருவருக்கு இருப்பது போலவே மற்றவருக்கும் நோய் அறிகுறிகளும், தொந்தரவுகளும் இருப்பதில்லை. சிறுநீரகக் கற்களின் அளவைப் பொருத்தும், அதன் வடிவத்தைப் பொருத்தும் அவை எங்கு ஏற்பட்டுள்ளன என்பதைப் பொருத்தும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான `நோய் அறிகுறிகள்' ஏற்படும். ஒருசிலர் எந்தவித அறிகுறிகளும், தொந்தரவுகளும் இல்லாமலே கூட இருப்பார்கள்.
எக்ஸ்-ரே போன்ற பரிசோதனைகள் செய்கின்ற போதுதான் இவர்களுக்கும் சிறுநீரகக் கற்கள் இருப்பது தெரியவரும். பெரும்பாலும் இந்தப் பாதிப்பு உள்ளவர்களுக்கு கீழ் முதுகுப்பகுதியில், முதுகெலும்பிற்கு அருகில் `வலி' ஏற்படும். அசைகின்ற போது குளிக்கின்றபோது இந்த வலி அதிகரிக்கும். சிறுநீரகக் கற்களால் தடை ஏற்பட்டு அழற்ச்சி தோன்றி, அதுவே சிலருக்கு நோய் அறிகுறியாக அமைவதும் உண்டு.
சிலருக்கு சிறுநீரகத்தை விட்டு விலகி வந்து `கற்கள்' சிறுநீரைக் கடத்தும். சிறுநீர்க் குழாய்களில் அடைப்பட்டுக் கொள்ளும் அந்த நேரத்தில் ஏற்படும் வலியை நோயாளியால் பொறுத்துக் கொள்ள முடியாது. கதறுவார் உடனடியாக மருத்துவமனைக்கு வருவார். அந்த வலி கீழ் நோக்கி வந்து தொடைப்பகுதி, அறைப்பகுதி வரை பரவலாம்.
இவ்வாறு தோன்றும் வலி சில நிமிடங்களில் அதிகரித்து விடும். நோயாளி எந்தப் பக்கம் படுத்தாலும் `வலி' குறைவதில்லை. வலியாலும், பயத்தாலும் உடல் வெளுத்துவிடும். இவர்களின் உடல் முழுவதும் வியர்வை தோன்றும். வாந்தியும் ஏற்படும். உடனே சிறுநீர் கழிக்கத் தோன்றும். சிறுநீர் கழிப்பதில் சிரமமும் ஏற்படும்.
சிறுநீருடன் இரத்தமும் கலந்து போகலாம். அழற்சி இருந்தால் சிறுநீர் கலங்கிய நீர் போல் வெளிப்படும் சில நோயாளிகள் மயக்கமும் அடைவார்கள். பெரும்பாலும் இவ்வாறு ஏற்படும் வலி சில மணி நேரத்தில் குறைந்துவிடும். ஆனால் சிலருக்கு இது தொடர்ச்சியாகவும் இருக்கும். சிறுநீர்ப்பையில் `கற்கள்' இருந்தால் சிறுநீர் கழித்தவுடன் அடிவயிற்றுப் பகுதியில் வலி ஏற்படும்.
ஆய்வுக் கூட பரிசோதனைகள்:
சிறுநீரகக் கற்கள் ஒருவருக்கு இருப்பதை அவர் கூறும் நோய் அறிகுறிகளில் இருந்தே எளிதாக கண்டுபிடித்து விடலாம். கற்கள் இருப்பதை கண்டறிவதற்காக இவர்களுக்கு சிறுநீர் பரிசோதனை அவசியம் செய்து பார்க்க வேண்டும். அதில் சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், அழற்சியினால் தோன்றும் அழிந்த செல்கள், பழுப்பு செல்கள் ஆகியவை காணப்படும்.
கற்களின் துகள்கள் இருப்பதும் தெரியவரும். வயிற்றுப் பகுதியில் எக்ஸ்-ரே எடுத்து பார்ப்பதன் மூலம் சிறுநீரகக் கற்களை எளிதாக கண்டுபிடிக்கலாம். `கதிர் ஒலி ஸ்கேன்' பரிசோதனை மூலமாகவும் சிறுநீரகக் கற்களைக் கண்டறியலாம். சிலருக்கு தேவைப்பட்டால் திரவம் செலுத்தி சிறுநீரகம், சிறுநீர் வெளியேறும் குழாய்களைப் படம் பிடித்து பார்க்கலாம்.
சிறுநீரில் கற்கள் கிடைத்தால் அதனையும் பரிசோதனை செய்து எது எந்த வகை கல்லென கண்டறிய வேண்டும். மேற்கூறிய பரிசோதனைகள் சிறுநீரகக் கற்கள் இருப்பதையும் அவை எந்த வகை கற்கள் என்பதையும் அறிய உதவும்.
சிறுநீரகக் கற்களை கண்டறியும் பரிசோதனைகள்:
சிறுநீரகக் கற்கள் பல காரணங்களினால் தோன்றுகிறது என்று படித்தோம் அல்லவா? இனி அது எந்தக் காரணத்தினால் ஏற்பட்டது என்பதை அறிய வேறு சில பரிசோதனைகளும் செய்ய வேண்டும். இரத்தத்தில் கால்சியம், பாஸ்பேட் இவற்றின் அளவுகள், பிளாஸ்மாவில் துணை கேடயச்சுரப்பி ஹார்மோனின் அளவு ஆகியவற்றை பரிசோதனை செய்ய வேண்டும்.
(இரத்தத்தில் கால்சியம் மிகுந்தாலும், துணை கேடயச்சுரப்பியின் மிகைச் செயல்பாட்டினால் கால்சியம் அதிகரிப்பதைக் கண்டறிய இது உதவும்) 24 மணி நேரம் சிறுநீர் பிடித்து அதில் கால்சியத்தின் அளவு யூரேட்டின் அளவு, சிஸ்டைனின் அளவு, அக்ஸ்லேட்டின் அளவு ஆகியவற்றையும் கண்டறிய வேண்டும். இப்பரிசோதனைகள் எதனால் கற்கள் ஏற்பட்டது என்பதையும், எந்த வகைக் கற்கள் ஏற்படுகின்றன என்பதையும் அறிய உதவும்
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சிறுநீரக கற்களை கரைக்கும் எலுமிச்சை!
» சிறுநீரக கற்களை எளிதில் கரைக்கக் கூடிய சக்தி வாய்ந்த வாழைத்தண்டு!
» சிறுநீரக கற்களை எளிதில் கரைக்கக் கூடிய சக்தி வாய்ந்த வாழைத்தண்டு! -
» சிறுநீரகக் கற்களை கரைக்கும் உணவுகள்.
» இயற்கையாக பித்தப்பை கற்களை தடுப்பது எப்படி
» சிறுநீரக கற்களை எளிதில் கரைக்கக் கூடிய சக்தி வாய்ந்த வாழைத்தண்டு!
» சிறுநீரக கற்களை எளிதில் கரைக்கக் கூடிய சக்தி வாய்ந்த வாழைத்தண்டு! -
» சிறுநீரகக் கற்களை கரைக்கும் உணவுகள்.
» இயற்கையாக பித்தப்பை கற்களை தடுப்பது எப்படி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum